ப்ளாஸ்டிக்
அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் அவர். மிகவும் சிக்கலான அறுவை
சிகிச்சைகள் செய்வதில் வல்லவர். ஒரு குழந்தைக்குக் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில்
ஏதுமில்லாமல் பிறந்திருந்ததால் அந்தக் குறையைச் சரி செய்ய அவரிடம் அழைத்து
வரப்பட்டது. அந்தக் குழந்தைக்கு செயற்கையான கண்கள் பொருத்த முடிவு செய்தார்
மருத்துவர். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் பயன்தராது என அவருடைய அனுபவ அறிவு
எச்சரித்தது. அதனால் ஒரு சில மாதங்கள் கடும் ஆய்வு செய்து திசுக்களை ஒட்டும் பசை
ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தப் பசையைப் போட்டு துண்டான உறுப்புகளை ஒட்ட முடியும்
என்பதையும் கண்டறிந்தார். அறுவை சிகிச்சை இல்லாமல் சில மணி நேரங்களிலேயே குணமடையக்
கூடிய மருத்துவ முறைமையாக அது இருந்தது. அதைப் பயன்படுத்தி அந்தக் குழந்தைக்குச்
செயற்கைக் கண்களைப் பொருத்தத் திட்டமிட்டார். அந்தக் கண்கள் மூளையின் பார்வை
நரம்புகளுடன் இணைய மட்டும் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. எல்லாவற்றையும்
செய்து முடிக்க சில மணி நேரங்கள் ஆனது. மருத்துவர் இந்தக் குழந்தையின்
சிகிச்சையைத் தனக்கு ஒரு சோதனையாகக் கருதிக் கொண்டிருந்தார். ஓரளவு வெற்றிகரமான
சிகிச்சைதான் என அவருக்குப் புரிந்த பின்தான் தன் அறைக்குத் திரும்பினார். மிகவும்
சோர்வாக இருந்ததால் தன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தார். அரை மணி நேரத்தில்
அவரது இருக்கையிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் துறையில் இருந்த மற்றொரு
மருத்துவர் இந்தப் பசையைக் கண்டுபிடித்ததற்காக அவர் மீது கடும் பொறாமையில்
இருந்தார். அதனால் அந்தத் தண்ணீர் பாட்டிலில் அந்தப் பசையைக்
கலந்துவிட்டிருந்தார். அதைக் குடித்தால் மரணம் நிச்சயம் என்பது மட்டும் அவருக்கு
நன்றாகத் தெரிந்திருந்தது.
Sunday, 12 September 2021
குறுங்கதைகள்-பசை
Subscribe to:
Post Comments (Atom)
பெண் மைய ஆளுமைகளான பெண் பாத்திரங்கள்: பேராசிரியர் பிரேமாவின் ’எங்களோட கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு
(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை) பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரே...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட ...
-
(இலக்கியவெளி இதழில் வெளிவந்த கட்டுரை) பெண்ணியத்தின் வரலாற்றை, போக்குகளை, தீர்மானங்களைக் குறித்து பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பிரே...
No comments:
Post a Comment