அவன் அந்த
மலையைக் கண்டு பெரிதும் விருப்புற்று அங்கு ஒரு வீட்டைக் கட்ட நினைத்தான். வீடு
பாதி கட்டி இருக்கும் போது இடிந்து விழுந்தது. அவனுக்கு என்ன காரணம் எனப்
புரியாமல் பெரும் துயருற்றான். அப்போது அந்த மலையின் அடிப்பகுதியில் ஒரு கல்லில்
இருந்த தேரை தான் இருக்கும் கல்லைக் கண்டு அவன் அகற்றிவிட்டால் வீட்டைக்
கட்டமுடியும் என்று சொன்னது. அவன் பெரு முயற்சி செய்து பார்த்தான். முடியவில்லை.
முருகனிடம் முறையிட்டான். மலை மீது வீடு கட்ட வேண்டுமா மலை இருக்கும் இடத்தில்
வீடு கட்ட வேண்டுமா என முருகன் கேட்டான். எது இருந்தாலும் தனக்கு ஏற்புடையதுதான்
என்று இவன் கூறிவிட்டான். அடுத்த நாள் அவன் அந்த இடத்தைச் சென்று பார்த்த போது மலை
கரைந்து போயிருந்தது. அந்தக் கல்லும் காணவில்லை. தேரையும் இருக்காது என நம்பினான்.
அந்த இடத்தில் வீட்டைக் கட்டி முடித்தான். வீட்டுக்கு ஒரு கிணறு வெட்ட முடிவு
செய்தான். கிணறு வெட்டும் போது மண் குவியல் கிணறு மூடிவிட்டது. மீண்டும்
முருகனிடம் முறையிட்டான். அந்தத் தேரையின் வேலைதான் இது எனப் புரிந்துகொண்ட
முருகன், கிணறு இருந்த இடத்தில் சிறு மலையை உருவாக்கச் சொன்னான். அவனும் அந்த
இடத்தில் கல், மண்ணைக் குவித்து ஒரு சிறு மலையை உருவாக்கினான். அந்த மலை தனக்கானது
என மகிழ்ந்து போனது தேரை. அடுத்த நாள் அந்த மலை கரைந்து கிணறு உருவானது. தான்
இருக்கும் கற்களை எல்லாம் கரைத்துக் கொண்டே போனால் எப்படி வாழ்வது என முருகனிடம்
முறையிட்டது தேரை. முருகன் அந்தத் தேரையை கற்கள் மட்டுமே இருக்கும் கிரகத்தில்
கொண்டுவிட்டான். அந்தக் கிரகத்தைச் சாய்த்துவிட்டு ஒரு கல்லில் இருந்து கொண்டு விண்வெளியைச்
சுற்றி வந்து கொண்டிருந்தது தேரை.
Monday, 6 September 2021
குறுங்கதைகள்-தேரை
Sunday, 5 September 2021
குறுங்கதைகள்-முத்து
அவனுக்கு
நதியில் நீச்சலடிப்பது பெரு விருப்பமான ஒன்றாக இருந்தது. அந்த நதி காட்டில்
நுழைந்து வரும் இடம்தான் அவனுக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. அன்று
நீச்சலடிப்பதற்காகக் காட்டிற்கு வந்தான். நதியில் பாய்வதற்கு நின்றான். அப்போது
நதியின் ஆழத்தில் ஒரு பெண் இருப்பதைக் கண்டான். அவளிடம் பெரிதும் ஈர்க்கப்பட்டுப்
பேசினான். அவளிடம் தான் வரவேண்டும் என்று விருப்பமாக இருப்பதாகச் சொன்னான். தான்
மிகவும் ஆழமான பகுதியில் இருப்பதால் அவனால் மூச்சை அடக்கி அங்கு வர முடியாது
என்றாள். அங்கிருந்து போக விருப்பமில்லாமல் கரையிலேயே தங்கிவிட்டான். அந்தப்
பெண்ணிடம் ஏதாவது வழியில் அவளை வந்தடைய முடியும் என்றால் அதைச் சொல்லச் சொல்லி
வற்புறுத்தினான். அதற்குப் பல கடும் பயிற்சிகள் செய்யவேண்டும் என்றாள் அவள்.
அதற்கு ஒத்துக்கொண்டான். முதலில் நதியில் தலைகீழாகத் தொங்க வேண்டும் என்றாள்.
அதைச் செய்தான். பல மணி நேரங்கள் நதியில் நீச்சலடிக்க வேண்டும் என்றாள். அதையும்
செய்தான். அங்கிருந்து தூரத்தில் தெரியும் மலையின் அடிவாரத்தில் இருக்கும்
குளத்தில் சிப்பி ஒன்று இருப்பதாகவும் அதை எடுத்து வரவேண்டும் என்றும் கூறினாள்.
அதற்கு அபாயங்களைக் கடக்கவேண்டும் என்றாள். அதைச் செய்ய உறுதி பூண்டான். அந்தக்
குளத்திற்குச் சென்றான். அந்த குளத்தில் கண்ணாடி மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன.
மேலும் பல விஷ பூச்சிகள் கொடுக்குகளைத் தூங்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தன.
அதை எல்லாம் பொருட்படுத்தாது அந்தக் குளத்தில் பாய்ந்தான். கண்ணாடி மீன்கள் அவனைக்
குத்திக் கீறின. அவன் உடல் ரணமானது. இருந்தும் விடாமல் முயற்சி செய்து அந்தச்
சிப்பியை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த நதியில் இருக்கும் பெண்ணிடம் அதைக்
காட்டினான். அதை நதியில் கழுவச் சொன்னாள். அதைக் கழுவக் கழுவ அந்தப் பெண்
வெண்மையாய் உருண்டு திரண்டு உருமாறி முத்தாய் மாறி அவன் கையில் வந்து சேர்ந்தாள்.
குறுங்கதைகள்-மரம்
என்
படுக்கை அறையில் திடீரென அந்தச் செடி முளைத்திருந்தது. அறையின் நடுவில் இரவோடு
இரவாக எப்படி முளைத்திருக்கும் என யோசனை செய்துபார்த்தேன். அதைப் பிடுங்கி எறிய
மனம் வரவில்லை. ஒரு வாரத்தில் கொஞ்சம் பெரிய செடியாக வளர்ந்துவிட்டது. பெரிய மரமாக
வளரப் போவதில்லை இப்படியே அறையில் இருக்கட்டும் என விட்டுவிட்டேன். வேலை காரணமாக
ஒரு மாதம் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் கூரையை முட்டிக் கொண்டு பெரிய
மரமாக வளர்ந்திருந்தது. எனக்கு பயமாகப் போய்விட்டது. இந்த மரம் கூரையைப்
பிய்த்துவிட்டால் இந்த வீட்டில் இருக்க முடியாது என அச்சம் ஏற்பட்டது. மரத்தை
வெட்ட முடியாது. வீட்டை விட்டுச் சென்று விடுவது என முடிவு செய்து தூங்கிப்
போனேன். காலையில் என் கால்களை நகர்த்த முடியவில்லை. மரத்தின் வேர்கள் கால்களோடு
பின்னிப் பிணைந்திருந்தன. எப்படி விடுவித்துக் கொள்வது எனப் புரியவில்லை. அப்படியே
படுத்துக்கிடந்தேன். மரத்தின் கிளையில் ஒரு பூ மலர்ந்திருந்தது. அந்தக் கிளை என்
அருகே தொங்கிக் கொண்டிருந்தது. இது என்ன மரமாக இருக்கும் என நினைத்துக்
கொண்டிருந்தேன். காட்டில் வளர வேண்டிய மரம் என் வீட்டில் வளர்ந்துவிட்டது என
நினைத்தேன். அது இன்னும் வளர்ந்தால் கூரை என் மீது விழும் என்ற உணர்வு அந்த இடத்தை
விட்டு உடனே அகல கலவரப்படுத்தியது. வேர்களிலிருந்து எப்படியோ கால்களை விடுவித்தேன்.
எழுந்து நின்றால் கால்கள் தடுமாறின. அரை முழுக்க வேர்களாக இருந்தன. இதைத் தாண்டிப்
போவதே பெரும் சிரமமாக இருக்கும் எனத் தோன்றியது. மற்றொரு கிளை என் அருகே வந்தது.
அதில் என் உயரம் அளவுக்கு ஒரு பூ மலர்ந்திருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கக் கை
நீட்டினேன். அந்த மலர் என்னை உள்ளிழுத்து மூடிக் கொண்டது.
Saturday, 4 September 2021
குறுங்கதைகள்-ஓவியர்
Thursday, 2 September 2021
குறுங்கதைகள்-பூனை
குறுங்கதைகள்-குடை
Wednesday, 1 September 2021
குறுங்கதைகள்-நினைவுச்சின்னம்
என்
பாட்டிமார்கள் இறந்து போய் சில காலம் ஆகிவிட்டது. அவர்களின் உலகத்தில் என்ன செய்கிறார்கள்
என்று பார்த்து வரக் கிளம்பினேன். இருவரும் சேர்ந்து தாஜ்மகால் போன்ற ஒரு நினைவுச்
சின்னத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்கு என்று கேட்டேன்.
எனக்காத்தான் என்றார்கள். என் மீது அன்பு செலுத்தும் நபர் இது போன்ற சின்னத்தை
எழுப்ப முடியாமல் சிரமப்படலாம் அதற்காக இவர்கள் இதை எழுப்பி அந்த நபரிடம் கொடுத்து
விடுவார்களாம். அந்த நபர் அதை எனக்குக் கொடுப்பாராம். என் பாட்டிமார்களின்
பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. என்
பாட்டிமார்களுக்கு இத்தகைய நினைவுச் சின்னத்தை யாராவது எழுப்பியிருக்கிறார்களா
எனக் கேட்டேன். அவர்கள் பரம்பரையில் யாரும் யாருக்கும் இது போன்ற சின்னத்தை
எழுப்பியதில்லையாம். அந்தக் குறை எனக்கும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக இவர்கள்
இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருப்பதாகச் சொன்னார்கள். அப்படி ஒரு
நபரே இல்லாத போது நினைவுச்சின்னம் மட்டும் எதற்கு என்று கேட்டேன். எந்த நபரும்
இல்லை என்றாலும் நினைவுச் சின்னம் அழியாமல் நின்று பல கதைகளைச் சொல்லும்
என்றார்கள். அப்படி ஒரு நபரே வரமாட்டார் என்றால் இந்த நினைவுச் சின்னம் என்ன ஆகும்
என்றேன். இந்த நினைவுச் சின்னத்தைக் கண்டவர்களால் என்னை விட்டு விலகவே முடியாதாம்.
என்னைவிட நினைவுச் சின்னத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டுவிடுபவர்களுடன் எனக்கு
எந்தத் தொடர்பும் இருக்காது எனச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
-
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...






