உளவுத்
துறைக்கு அவன் புதிதாக வந்திருந்தான். அவனிடம் தீர்க்க முடியாத ஒரு வழக்கை
ஒப்படைத்தனர். ஒரு பெண் இறந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. அவள் எப்படி இறந்தாள்
எனத் தெரியவில்லை. அதை அவன்தான் கண்டுபிடிக்கவேண்டும் எனக் கூறிவிட்டனர். அவள் உடல்
வைக்கப்பட்டிருந்த பிணவறைக்குச் சென்று பார்த்தான். அவள் தூங்குவது போல் இருந்தது.
இறந்தது போல் இல்லை. அவள் பெட்டிக்கு அருகே ஒரு சிலந்தி அமர்ந்திருந்தது. அது
இவனைப் பார்த்தது. மெதுவாக நகர்ந்தது. அவள் இறந்துபோது அவள் வீட்டுக்கு யாரும்
வரவில்லை. எனவே கொலைக்கான வாய்ப்பில்லை. அவள் விஷம் எதையும் உண்ணவில்லை.
தற்கொலையும் அல்ல. அவளுக்கு வந்த குறுஞ்செய்திகள் எவையும் சந்தேகம்படும்படி இல்லை.
அவள் ஒரு மூடிய அறையில் இருந்து போது இறந்து போயிருந்தாள். கடைசியாக அவள் எழுதிய
ஒரு கவிதை எனச் சொல்லி ஒரு நோட்டு புத்தகத்தை நீட்டினார்கள். அதில் அவள் கடைசியாக
எழுதிய கவிதை ஒன்று இப்படி இருந்தது:
சிலம்பியாய் உருமாறி
எனைக் கொள்ளும்
வேல் வளஇளவனே
போற்றி!!! போற்றி!!!
இந்தக்
கவிதைக்கும் இவள் மரணத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.
சிலம்பி என்பது சிலந்தி என்ற பொருள் கொண்டச் சொல். அவளது பெட்டி அருகே ஒரு சிலந்தி
இருந்தது. சிலந்தியாய் உருமாறி என்ற கவிதையின் வரி இவளை யாரோ சிலந்தியாய்
உருமாற்றி இருக்கிறார்கள். வேல்வள இளவன் என்பது முருகனைக் குறிக்கலாம். இவள் இறக்கவில்லை.
சிலந்தியாய் உருமாறி இருக்கிறாள். கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறாள்.
மீண்டும் தன் உடலுக்குத் திரும்ப முடியாமல் போய்விட்டதால் இவள் தூங்குவது போல்
காணப்படுகிறாள். அந்தச் சிலந்திதான் அவள். அந்த உடலை அப்படியே வைத்திருந்தால்
எப்போதாவது அவள் மீண்டும் தன் உடலுக்கு மீளக்கூடும். இவன் இதைக்
கண்டுபிடித்துவிட்டதை யாரும் ஏற்கவில்லை. ஏனெனில் இது நம்பத்தகுந்தபடியாக இல்லை
எனக் கூறிவிட்டனர். அவனை உளவுத் துறையிலிருந்தும் மாற்றிவிட்டனர்.
No comments:
Post a Comment