Thursday 4 May 2017

குறியியல்-ஓர் அறிமுகம்:டேனியல் சேன்ட்லர்(மொழிபெயர்ப்பு)

குறியியல்-ஓர் அறிமுகம்
டேனியல் சேன்ட்லர்
குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதியிருக்கிறார். அந்த நூலை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறேன். டேனியல் சேன்ட்லர், பிரிட்டனில் ஆபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தில் காட்சிப்புல குறியியல் துறையில் பேராசிரியராக இருக்கிறார்.
முன்னுரை
ஒரு புத்தகக் கடைக்குச் சென்று குறியியல் பற்றிய நூல் வேண்டும் என்று கேட்டால் அவர்கள் வெறித்துப் பார்ப்பார்கள். அதைவிட மோசம், குறியியல் என்றால் என்ன என்று உங்களை விளக்கச் சொல்வார்கள். குறியியல் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கும் தொடக்க நூல் பற்றி நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் சிக்கலாகிவிடும். குறியியல் பற்றி ஓரளவு தெரிந்திருந்தால் நீங்கள் கொடுக்கும் விளக்கம் சிக்கலை அதிகப்படுத்திவிடும். ஏனெனில் எளிய விளக்கம் புத்தகக் கடைக்காரர்களுக்கு எளிதாக இருந்தாலும் அதைக் கொடுப்பதுதான் பிரச்னை. அது போன்ற சிக்கலில் நீங்கள் இருந்திருக்கும் பட்சத்தில் அது போன்ற நூலைக் கேட்பது அறிவின்மை என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்கள். குறியியல் எல்லா இடங்களிலும் இருப்பது. மிக எளிமையான விளக்கம்:குறிகளைப் பற்றிய ஆய்வு. ஆனால் இந்த விளக்கம் குறியியல் பற்றிய விளக்கத்தைத் தருவதாகக் கொள்ளமுடியாது. 'குறி என்று எதைச் சொல்கிறீர்கள்?' என்று அவர்கள் வழக்கம் போல் கேட்பார்கள். உடனடியாக நினைவுக்கு வரும் குறிகள் தின வாழ்வில் பார்க்கும் 'குறிகள்' என்று குறிப்பவைகளான போக்குவரத்துக் குறிகள், டாஸ்மாக் அறி'குறி'கள், வார,மாத பலன் சொல்லும் நட்சத்திர குறிகள் ஆகியவையாக இருக்கலாம். குறியியல் இவை எல்லாவற்றையும் இதற்கு மேலும் இருப்பவற்றையும் உள்ளடக்கியதுதான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் 'காட்சிப் புல குறிகள்' என்பதாக ஊகித்துவிடுவார்கள். அதையும் ஏற்று வரையப்பட்ட படங்கள், ஓவியங்கள், புகைப்படங்களும் குறிகள்தான் என்றால் உடனே அவர்கள் உங்களை ஓவியங்கள், வரையப்பட்ட படங்கள், புகைப்படங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லுமாறு கூறுவார்கள். ஆனால் நீங்கள் தடித்த தோலுடையவர்களாக இருந்து சொற்கள், ஒலிகள், 'உடல்மொழி' போன்றவற்றையும் குறியியல் குறிப்பதாகச் சொன்னால் அவர்கள் இவை அனைத்தும் என்ன ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன என்று வியந்து இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு துறையை எப்படி ஒருவர் படிப்பது சாத்தியம் என நினைப்பார்கள். இது வரை நீங்கள் வந்திருந்தால் அவர்கள் உங்களை 'ஒரு மாதிரியாக' புரிந்துகொண்டிருப்பார்கள். மனப்பிறழ்ச்சி உடையவர் அல்லது பைத்தியம் என்பதும் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்பதும் அதன் பொருளாக இருக்கும்.
ஆனால் நீங்கள் அது போன்று தொல்லைப்படுத்தக்கூடிய கேள்விகளைக் கேட்பவராக இருக்கமாட்டீர்கள் என்ற ஊகத்துடன் குறியியல் பற்றிய நூல்களை மொழியியல் துறையில் தேடுவதே நீங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச ஒன்றாக இருக்கும்.   

சமூக வாழ்வின் பகுதியாக இருக்கும் குறிகளின் பண்பை அறியும் அறிவியலைக் கற்பது சாத்தியம். அது சமூக உளவியலின் ஒரு பகுதியாவதால் பொது உளவியலையும் உள்ளடக்கியதாகிவிடும். அதை நாம் குறியியில் என்று அழைக்கிறோம்.(சீமியாலஜி என்று ஆங்கிலத்தில் (Semiology) என்று அழைக்கப்படும் இந்தச் சொல் கிரேக்க மொழியில் செமியோன் (semeion) எனப்படும் சொல்லிலிருந்து வந்தது. அதற்குப் பொருள் குறி) இந்த அறிவியல் குறிகளின் இயல்பையும் அவற்றை ஆளும் விதிகளையும் கண்டறியும். இந்த அறிவியல் இன்னும் முழுமையாக உருவாகாததால் அது போன்ற ஒரு துறை இருக்கப் போவதாக யாராலும் கூற முடியாது. ஆனால் அது இருப்பதற்கான உரிமை இருக்கிறது. அதற்கான ஓர் இடம் ஏற்கனவே உருவாகிவிட்டது. இந்தப் பொது அறிவியலின் ஒரு கிளைதான் மொழியியல். குறியியல் கண்டறியும் விதிகள், மொழியியலிலும் ஏற்கப்பட்ட விதிகளாக இருக்கும். மனித அறிவுப்பரப்பில் மொழியியலுக்கு தனிப்பட்ட இடம் இருக்கிறது. இது போன்ற விளக்கங்களை குறியியல் பற்றி ஆய்வு செய்து ஃபெர்டினான்ட் டீ சசூர் கூறுகிறார்.(Course in General Linguistics, 1974, 1983 15-16, 16)
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபெர்டினான்ட் டீ சசூர்(857-1913) மொழியியலைத் தோற்றுவித்தவர் மட்டும் அல்ல குறியியல் என்று தற்போது அழைக்கப்படும் இந்த அறிவியலைப் பற்றி முதலில் சொன்னவரும் அவர்தான். அவர் எழுதிய Course in General Linguistics, (1916)என்ற நூல் இந்தத் துறை குறித்த நீண்ட ஆய்வு நூலாக இருந்தது. சசூரைத் தவிர இந்தத் துறையில் தொடக்கக் காலத்தில் இருந்த பிற அறிஞர்கள், அமெரிக்க தத்துவவியலாளர் சார்ல்ஸ் சேண்டர்ஸ் பர்ஸ்(1839-1914), அதன் பின் இயல்புசார் குறியியல் ஆய்வை முன்னெடுத்த சார்ல்ஸ் வில்லியம் மோரிஸ்(1901-1979) போன்றவர்கள் முன்னோடிகளாக விளங்கினார்கள். நவீன குறியியல் கோட்பாட்டை முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ரோலண்ட் பார்த்(1915-1980), அல்கிர்தாஸ் கிரிமாஸ்(1917-1992), யூரி லோட்மேன்(1922-1993), கிரிஸ்டியன் மெட்ஸ்(1931-1993), உம்பர்த்தோ எக்கோ(1932-2016) மற்றும் ஜூலியா கிறிஸ்தவா(1941-) ஆகியோரைக் குறிப்பிடவேண்டும். லூயிஸ் யெல்ஸ்ம்லெவ்(1899-1966) மற்றும் ரோமன் யாக்கப்சன்(1896-1982) போன்ற சில மொழியியலாளர்களும் குறியியல் கட்டமைப்புக்குள் ஆய்வு செய்தார்கள். ஐரோப்பிய குறியியலை அமைப்பியலின் வேரிலிருந்து பிரிப்பது கடினம். சசூரைத் தவிர குறிப்பிடத்தக்க அமைப்பியலாளர்களாக மானுவியல் ஆய்வாளர் க்ளாட் லெவிஸ்ட்ராஸ்(1908-2009)(அவர் தனது துறையை குறியியலின் கிளையாகவே பார்த்தார்), உளவியலில் ஜாக் லக்கான்(1901-1981) ஆகியோர் இருந்தனர்.   

சசூரின் மொழியியல் மாதிரியை அடிப்படையாக வைத்து பல குறியியலாளர்கள் செய்த பகுப்பாய்வு முறைதான் அமைப்பியல். ஒட்டுமொத்த குறிகளின் ஒழுங்கமைப்பை 'மொழிகள்' என்று அமைப்பியலாளர்கள் விளக்குகிறார்கள்- புராணம், உறவுமுறை விதிகள், குலக்குறி போன்றவற்றை லெவிஸ்ட்ராஸ் விளக்கியதைப் போலவும் நனவிலியை லக்கான் விளக்கியதைப் போலவும் சொல்லாடலின் 'இலக்கணத்தை' பார்த்தும் கிரிமாஸும் விளக்கியதைப் போலவும் அந்த விளக்கம் இருக்கிறது.
நிகழ்வனுபவத்தின் 'மேலே இருக்கும் அம்சங்களில்' காணப்படும் 'ஆழமான அமைப்புகளை'ப் பற்றித் தேடுவது அவர்களின் ஆய்வாக இருந்தது. ஆனாலும், சமகால சமூகக் குறியியல், தனித்த அமைப்புடன் உள்ளார்ந்த உறுப்புகளின் மீது உறவு கொண்டிருந்த அமைப்பியலின் கவனத்திலிருந்து விலகி தனிப்பட்டச் சமூகச் சூழல்களில் குறிகளின் பயன்பாடு பற்றியதாக மாறிவிட்டது. நவீன குறியியல் கோட்பாடு சில சமயங்களில் மார்க்சிய அணுகுமுறையோடு கலந்து கருத்தாக்கத்தின் பங்கிற்கு அழுத்தம் கொடுக்கிறது.
ரோலாண்ட் பார்த் செய்த ஆய்வின் காரணமாக 1960களில் கலாச்சார ஆய்வுகளில் பெருமளவிலான அணுகுமுறையாக குறியியல் மாறத் தொடங்கியது. அவருடைய பெயர்பெற்ற 'புராணங்கள்'(1957) என்ற நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான பின்னும் 1970 மற்றும் 1980களில் அவர் எழுதிய கட்டுரைகளுக்குப் பிறகும் அறிவார்ந்த விழிப்புணர்வை இந்த அணுகுமுறை பெரிதும் அதிகப்படுத்தியது. 'எந்தக் குறிகளின் அமைப்பையும் குறியியல் மூலம் ஆய்வு செய்யலாம், அவற்றின் பொருளாம்சமும் எல்லையும் எதுவாக இருப்பினும்; பிம்பங்கள், பாவனைகள், இசையாய் ஒலிப்பவைகள், பொருள்கள் மற்றும் இவை எல்லாவற்றுடனும் சிக்கலான தொடர்பை ஏற்படுத்தி சடங்குகளின் மரபுகளின் பொதுக் கேளிக்கைகளின் உள்ளடக்கத்தை உருவாக்கக் காரணமாக இருக்கும் அனைத்தும்:இவைதான் மொழிகள் என்பதாகவோ அல்லது குறிப்பீட்டாக்கத்தின் அமைப்பு என்பதாகவோ கொள்ளப்படுகின்றன என்று 1964ல் பார்த் அறிவித்தார்.(பார்த் 1967, ப.9)
நவீன-மார்க்சிய சமூகவியலாளர் ஸ்டூவர்ட் ஹாலின்((1969-79) வழிகாட்டுதலின் படி பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உருவான சமகால கலாச்சார கல்விக்கான மையத்தின் ஆய்வுகளுடைய முக்கியத்துவம், இங்கிலாந்தில் குறியியலின் தாக்கத்தை உள்வாங்கக் காரணமாக விளங்கியது. கலாச்சார மற்றும் ஊடக ஆய்வுகளில்(பெருமளவு அமைப்பியல் வடிவத்தைக் கொண்ட முந்தைய நிலையில்)மையமாக குறியியல் இப்போது விளங்காவிட்டாலும், அந்தத் துறையிலுள்ள அனைவருக்கும் அதைப் புரிந்துகொள்வது அவசியமாக உள்ளது. ஒவ்வொரு ஆய்வாளரும் தங்களுடைய ஆய்வுக்குக் குறியியல் எத்தகைய பயனை விளைவிக்கும் என்பதை அறிந்துகொள்வது அவசியமாக உள்ளது. 'சீமியாலஜி' என்ற பதம் சசூரிய பாரம்பரியத்தில் வரும் ஆய்வைக் குறிக்கிறது. 'சீமியாட்டிக்ஸ்' என்ற பதம் பர்ஸிய பாரம்பரியத்தில் வரும் ஆய்வை சில சமயங்களில் குறித்தாலும்  இப்போது இந்த முழு துறையையும் குறிக்க இந்தப் பதமே உரியதாக உள்ளது.(நோத், 1990, ப.14)
குறியியல் கல்விப் புலத்தின் துறையாக நிறுவனமயமாகவில்லை. பல வேறுபட்ட கோட்பாடுகளின் நிலைப்பாடுகள் மற்றும் ஆய்வு முறைமைகள் குறித்த கல்வியாக இது இருக்கிறது. அது பற்றிய விரிவான விளக்கங்களில் ஒன்றை உம்பர்த்தோ எக்கோ கொடுத்திருக்கிறார். 'ஒரு குறியாக உள்ள எல்லாவற்றையும் பற்றியது குறியியல்,' என்கிறார் அவர்.(உம்பர்த்தோ எக்கோ, 1976. ப7)
குறியியல், தினவாழ்வில் பேசப்படுகின்ற 'குறிகளை'ப் பற்றியது மட்டுமல்ல, ஏதோ ஒன்றைக் 'குறிப்பதற்காக வரும்' எல்லாவற்றையும் பற்றியதும் ஆகும். குறியியலின் உணர்வுப் பொருளில், சொற்கள், பிம்பங்கள், ஒலிகள், பாவனைகள், பொருள்கள் என்ற வடிவத்தைக் குறிகள் எடுக்கின்றன.
மொழியியலாளர் சசூருக்கு 'குறியியல்' என்பது 'சமூக வாழ்வில் பங்கெடுக்கும் குறிகளைப் பற்றிய அறிவியல்' ஆகும். தத்துவியலாளர் சார்ல்ஸ் சேண்டர் பர்ஸுக்கு 'குறியியல்' என்பது 'குறிகளைப் பற்றிய முறையான கோட்பாடு,' அது தர்க்கத்துடன் நெருக்கமான உறவுடையது(பர்ஸ் 1931-58 2.227). அவருக்கு 'ஒரு குறி....ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றை அதனுடைய அளவில் அல்லது தன்மையில் குறிப்பதாகும்.'(பர்ஸ் 1931-58 2.228) 'ஒவ்வொரு சிந்தனையும் ஒரு குறிதான்' என்று அவர் பிரகடனப்படுத்தினார்.(பர்ஸ் 1931-58 1.538 சிஎஃப் 5.250எஃப் எஃப், 5.283எஃப் எஃப்)

சமகால குறியியலாளர்கள் குறிகளைப் பற்றித் தனிப்பட்ட ரீதியில் ஆய்வு செய்யாமல் 'குறி அமைப்புகளு'க்குள் பங்கெடுப்பவையாக(ஊடகமாக அல்லது வகைமையாக பங்கெடுப்பது) ஆய்வு செய்கிறார்கள். பொருளம்சம் உருவாவது எப்படி என்று ஆய்வு செய்கிறார்கள்:தொடர்புறுத்தத்தின் ஊடாக மட்டும் அல்லாமல், உண்மையைக் கட்டமைப்பதிலும் தொடர்வதிலும் பொருளம்சம் எப்படி உருவாகிறது என ஆய்வு செய்கிறார்கள். குறியியலும் மொழியியலின் ஒரு கிளையான பொருளனியலும் குறிகளின் பொருள் பற்றி பொதுவான கவனத்தைக் கொண்டுள்ளன. ஆனால் குறியின் பொருள் என்ன என்பது பற்றி பொருளனியல் கவனப்படுத்த, குறிகள் எப்படி பொருள் கொள்கின்றன என்பது பற்றி குறியியல் பேசுகிறது என விவாதிக்கிறார் ஜான் ஸ்ட்ராக்.(ஸ்ட்ராக் 1982 ப.26)  
சி.டபிள்யு.மோரிஸுக்கு(பர்ஸின் மும்மை வகைப்பாட்டிலிருந்து தருவித்துக் கொண்டதால்)பொருளனியலுடன் மொழியியலின் கீழ்க்கண்ட பிற துறைகளையும் குறியியல் உள்ளிணைத்துக் கொண்டதாகக் கருதுகிறார்:
·         பொருளனியல்:குறிகள் எதைக் குறிப்பதற்காக உள்ளனவோ அவற்றுடனான உறவு
·         தொடரியல்(அல்லது தொடர்):குறிகளுக்கு இடையேயான முறையான அல்லது கட்டமைப்பு ரீதியான உறவு
·         காரணகாரியவியல்:குறிகளுக்கும் அவற்றின் பொருளைப் பெயர்த்துக் கூறுவனவற்றுக்கும் இடையேயுள்ள உறவு(மோரிஸ் 1938, ப 6-7)

எப்போதும் பிரதிகளை ஆய்வு செய்வதற்காகவே குறியியல் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது(வெறும் பிரதி குறித்த ஆய்விலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தாலும் கூட). இங்கு 'பிரதி' என்பது சொற்கள் மற்றும் மொழி குறித்தான ஆய்வு என்ற பாகுபாடு இருந்தாலும் அதை மறுத்து சொற்களாலோ அல்லது சொற்களற்றோ அல்லது இரண்டுமாகவோ எந்த ஓர் ஊடகம் சார்ந்தும் இருக்கலாம் என்று கொள்ளப்படவேண்டும்.
'பிரதி' என்ற சொல் வழக்கமாக ஏதோ ஒரு வகையில் பதிவான(உ-ம், எழுத்து, காட்சி, ஒலி-ஒளி காட்சிப் பதிவு) செய்தியைக் குறிக்கிறது. எனவே அதன் அனுப்புனர் அல்லது பெறுநரிடமிருந்து முற்றிலுமாக தனித்து இயங்குகிறது. ஒரு பிரதி என்பது குறிகளின் கூட்டுத்திரளால்(குறிகள், பிம்பங்கள், ஒலிகள் மற்றும் அல்லது பாவனைகள் போன்றவற்றின்) ஒரு குறிப்பிட்ட வகைமையைச் சார்ந்த மரபில் குறிப்பிட்ட தொடர்புறுத்தும் ஊடகத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டது(பெயர்க்கப்பட்டது).
'ஊடகம்' என்ற சொல் பல்வேறு வகையில் பல கோட்பாட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது, பேச்சு, எழுத்து, அச்சு ஊடகம், ஒலிபரப்பு ஊடகம் என்ற பரந்த வகைமையை அது குறிக்கும். அல்லது தகவல் தொழில்நுட்பத்தின் குறிப்பிட்ட தொழில்நுட்ப வடிவங்களையோ(வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், இதழ்கள், நூல்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவு நாடாக்கள்) அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களையோ(தொலைபேசி, அஞ்சல், தொலைநகல், மின்னஞ்சல், ஒலி-ஒளி தகவல் பரிமாற்றங்கள், கணினி மூலம் நடத்தும் அரட்டைகள்) குறிக்கும். சில கோட்பாட்டாளர்கள் ஊடகம் என்பதை 'அலைவரிசைகளை'ப்(காட்சிப்புலம், ஒலிப்புலம், தொட்டுணரும் புலம் மற்றும் பல) பொறுத்து வகைப்படுத்துகிறார்கள்.(நாத் 1995, 175).
மனித அனுபவம் பலப் புலணுர்வுகளை உள்ளீடாகக் கொண்டது. அந்த அனுபவத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும் அது வெளிப்படும் ஊடகத்தின் கட்டுப்பாடுகளையும் வசதிகளையும் பொறுத்தே அமையும். ஒவ்வொரு ஊடகமும் அது பயன்படுத்தும் அலைவரிசைகளின் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, மிகவும் நெகிழ்வான மொழி எனும் ஊடகத்தில் கூட சில அனுபவங்களை வெளிப்படுத்த முயற்சிக்கும் போது 'சொற்கள் நமக்குப் பலனளிப்பதில்லை.' மேலும் மணம், தொடு உணர்ச்சி போன்றவற்றை மரபான ஊடகம் வழியே வெளிப்படுத்த நமக்கு வழியே இருப்பதில்லை. அனுபவங்களை வெளிப்படுத்த வேறுபட்ட ஊடகங்களும் வகைமைகளும் பல்வேறு வகையான கட்டமைப்புகளை நல்குகின்றன. அவற்றில் சில எளிமையானதாகவும் சில தடைகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

ஊடகங்களுக்கு இடையேயான வேறுபாடு பற்றி எமிலி பென்வினிஸ்ட் குறியியல் அமைப்புகளின் 'முதல் கோட்பாடாக' அவை எல்லாம் ஒத்த தன்மையுடையவை அல்ல என விவாதிக்கிறார். பல்வேறு அலகுகளில் உள்ள அமைப்புகளில் 'அதே பொருளை' சொல்ல முடிவதில்லை என்கிறார் அவர்.(இன்னிஸ் 1986 235). அதற்கு மாறாக ஹெல்ம்ஸ்லெவ், 'நடைமுறையில் மொழி என்பது ஒரு குறியியல் அதில் மற்ற எல்லா குறியியல்களும் கலந்துவிடும்' என்கிறார்(ஜெனஸ்கோ 1994, 62).

ஓர் ஊடகத்தை முறையாக எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்த ஒருவர் தினமும் அதைப் பயன்படுத்துகையில் எந்த ஒரு கேள்வியும் இன்றி எந்த ஒரு சிக்கலும் இன்றி 'நடுநிலையாக' அது கடந்துவிடுகிறது:இது விநாதமானது ஏனெனில் வெளிப்படும் நோக்கங்களில் மாற்றமடையும் ஊடகம் வழக்கமாகத் தற்செயலானதாகவே உள்ளது. ஓர் ஊடகம் அடிக்கடி சரளமாகப் பயன்படுத்தப்பட்டால் அதன் பயனாளர்களுக்கு அது 'வெளிப்படையான'தாகவும் 'புலனாகாத' ஒன்றாகவும் மாறிவிடும். பல வழக்கமான நோக்கங்களுக்கு ஊடகத்தை நன்கு புரிந்து வைத்திருப்பது அது செய்யவேண்டிய செயலைச் செய்ய முடியாமல் அதன் செயலூக்கத்தைத் தடுத்துவிடும். உண்மையில், ஊடகம் வெளிப்படைத் தன்மையைப் பெறும் போது அதன் தொடக்க நிலை செயல்பாடு மேம்பட்டிருக்கும்.
ஓர் ஊடகத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அந்த ஊடகத்தைப் பயன்படுத்தும் பயனாளர் எப்போதும் தன்னுணர்வுடன் இருப்பார் என்றோ அதைப் பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பார் என்றோ கொள்ளமுடியாது. நாம் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தை நன்கு புரிந்துவைத்திருக்கும் போது அதன் இடையீட்டில் நாம் 'மயங்கி' போயிருப்போம்:நமக்கு நாம் எதை 'இழக்கிறோம்' என்பது தெரியாது. அந்தச் செயல்பாட்டில் நாம் மறத்துப் போய் அதில் இருக்கும் 'தேர்வுகளை' பயன்படுத்துகிறோமா என்று அறிய முடியாத நிலைக்குப் போய்விடுகிறோம். இந்த வகையில் நாம் பயன்படுத்தும் வழிகள் நாம் நினைக்கும் முடிவுகளை மாற்றிவிடுகிறது. ஊடகங்களின் தேர்வில் நிகழ்வனுபவங்களைப் பொறுத்தவரை கூட்டியோ குறைத்தோ வெளிப்படுவதன் மூலம் ஊடகத்தின் பயன்பாடு புலப்படும். ஒரு குறிப்பிட்ட ஊடக்கதைப் பயன்படுத்தும் போது சில சமயங்களில், நமது 'நோக்கங்கள்' நுட்பமாக(புலனாகாத என்றும் சொல்லலாம்)வகையில் மாற்றியமைக்கப்படும். இது பயனாளர்களின் முடிவுகளுக்கு ஏற்ப ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவோ ஊடகங்கள் முழுக்க முழுக்கப் பயனாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ கூறும் காரணகாரிய அல்லது தர்க்கரீதியான நிலைப்பாட்டுக்கு எதிரானது.

ஊடகத்தின் மாற்றம் என்பது பற்றிய விழிப்புணர்வு, தொழில்நுட்ப வழிமுறைகளும் அமைப்புகளும் எப்போதும் வேறு வழியின்றி 'அவையே முடிவுகளாக ஆகிவிடுகின்றன'(ஒரு பொதுவான விளக்கமாக மார்ஷல் மக்லூஹன் அளித்த 'ஊடகமே ஒரு செய்தி' என்பது போன்ற விளக்கமாக மாறிவிடுகிறது) என பல கோட்பாட்டாளர்கள்  தீர்மானமாக விவாதிக்கும் வகையில் உள்ளது. மேலும் அது ஊடகங்களை முழுமையான தனித்துவம் மிக்க அவைகளுக்குரிய 'நோக்கங்களை'க்(செயல்பாடுகள் என்பதற்கு மாறாக) கொண்ட நிறுவனம் என சிலர் கொள்ளவும் காரணமாகிவிடுகிறது. இருந்தாலும், அது போன்ற இடையீடுகளில் நிகழும் மாற்றங்களைப் பற்றி ஒருவர் அத்தகைய தீவிரமான நிலைப்பாட்டைக் கொள்ளவேண்டியதில்லை. நாம் ஓர் ஊடகத்தைப் பயன்படுத்தும் போது அதன் பயன் நோக்கத்தில் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. ஓரிடத்திற்குச் செல்ல பயணிப்பது என்பது தவிர்க்க முடியாதது; அதுவே இலட்சியமாகவும் மாறிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட வகையான போக்குவரத்தில் பயணிப்பது அனுபவத்தின் ஒரு பகுதி. அதே போல்தான் பேசுவதை விட எழுதுவதும் பேனாவைப் பயன்படுத்தாமல் சொற்செயலியைப் பயன்படுத்துவதும் ஆகும். எந்த ஊடகத்தைப் பயன்படுத்தினாலும், நாம் அதன் 'நோக்கங்களை' ஒரு குறிப்பிடத்தக்க அளவு நிறைவேற்றுவோம் அதுவும் நம் நோக்கங்களை நிறைவேற்றுகிறது. நாம் ஊடகத்தைப் பயன்படுத்துகையில் அதைச் செயல்படுத்தவும் அதனால் செயல்படுத்தப்படவும் அதைப் பயன்படுத்தவும் அதனால் பயன்படுத்தப்படவும் என இரு வகையான முறைமைகளுக்குள் இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட ஊடகம் பல வகையான செயல்பாடுகளைக் கொண்டிருக்கையில் ஒரே ஒரு செயல்பாட்டுக்காக மட்டும் தனித்து அதைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமற்றது. அது போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி பொருளாம்சங்களை உருவாக்குதலுக்கு ஓரளவுக்கு சமரசம் தேவை. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு ஓர் ஊடகத்தின் குறிப்பிட்ட செயல்பாடு என்ற முழுமையான அடையாளம் என்பது அரிதானது எனினும் பல சமயங்களில் இது போன்ற இணை பொருத்தமானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்த இடத்தில் ப்ரிகோலஜ் எனப்படும் பல பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் புதிய படைப்பு பற்றி க்ளாட் லெவிஸ்ட்ராஸ் கொண்ட அவதானிப்பை நினைவு கூறவேண்டும். இப்படிப் படைக்கப்படும் செயல்பாட்டில் தேர்வு என்பது கணக்கிடப்பட்ட விருப்பத்தைவிட கையில் கிடைக்கும் பொருட்களைத் தொழில்நுட்ப ரீதியில் எந்த அளவுக்குத் தெளிவாக முன்தீர்மானிக்கப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப நல்ல தகவமைத்தல்  மூலம் சாத்தியப்படுகிறது என்பதைவிட 'பொருட்களுடனான பரிமாற்றம் அவற்றைச் செயல்பாட்டிற்கு உட்படுத்தும் முறைமையும்' மட்டுமே முக்கியமாக இருக்கும்.(லெவி ஸ்ட்ராஸ், 29) அது போன்ற பரிமாற்றத்தில் கையில் கிடைத்தப் பொருட்கள்(இப்படி வைத்துக் கொள்ளலாம்)எந்தச் செயல்பாடு பொருத்தமாக இருக்கும் என 'பரிந்துரைப்பதில்' முன் தீர்மானிக்கப்பட்ட நோக்கம் மாறுகிறது. இதன் விளைவாக அது போன்ற படைப்பாக்கங்கள் முழுமையான கருவிகளாக இருப்பதில்லை:கைவினைஞர் அல்லது பிரிகோலர் பொருட்களுடன் மட்டும் 'பேசுவதில்லை'...பொருட்களின் ஊடகங்களின் ஊடாகவும் பேசுகிறார்...(மேற்குறிப்பிட்ட நூல்...21):ஊடகத்தின் பயன்பாடு வெளிப்படையாக இருக்கலாம்.

லெவிஸ்ட்ராஸ் சொன்னது 'புராணச் சிந்தனை'க்கு உரியது. ஆனால் சேண்ட்லரைப் பொறுத்தவரை எந்த நோக்கத்திற்காகவும் வெளிப்படும் எந்த ஓர் ஊடகத்திற்கும் ப்ரிகோலஜ் பயன்படும். எழுத்தாக்கம் உதாரணமாக எழுத்தாளரின் தன்னுணர்வுள்ள நோக்கங்களால் மட்டும் வடிவம் பெறுகிறது என்று சொல்லமுடியாது-ஊடத்தின் அம்சங்களாலும்-அதாவது பயன்பாட்டு மொழி எழுத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள்-சமூக உளவியல் போக்குகளின் இடையீடும் காரணமாக அமைகிறது. எழுத்தாளரின் கருவிகள் 'எதிர்ப்பை'க் காட்டுகையில் அது எழுத்தாக்கத்தின் உள்ளார்ந்த பகுதியாகிவிடுகிறது. எல்லா எழுத்தாளரும் பிரிகோலர் போன்ற கைவினைஞராக செயல்படுவதோ உணர்வதோ இல்லை. ஊடகத்தின் மாற்றத்திற்கு ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்வினையாற்றும் முறைமை வேறுபடுகிறது. அவர்கள் 'பயன்படுத்தும்' ஊடகத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக வலியுறுத்துவோரிலிருந்து அவர்கள் பயன்படுத்தும்' ஊடகம் அவர்களை வடிப்பதாக உணர்வோர் வரை அவர்கள்  பல வகையினராக உள்ளனர். (சேண்ட்லர் 1995)

நார்மேன் ஃபேர்க்ளோ பல்வேறுவிதமான தகவல் தொழில்நுட்ப ஊடகங்களுக்கு இடையேயான அலைவரிசை மற்றும் தொழில்நுட்ப வேறுபாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகிறார்.

பத்திரிகை ஒரு காட்சிப்புல மொழியைப் பயன்படுத்துகிறது, அதன் மொழி எழுத்து வடிவில் உள்ளது, காட்சிப் படங்களைப் பெருக்குதல், கணினி வரைபடம், மற்றும் அச்சிடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. வானொலி அதற்கு மாறாக, ஒலி அலைவரிசையைப் பயன்படுத்துகிறது, பேச்சு மொழியைப் பயன்படுத்துகிறது ஒலியைப் பதிவு செய்வதும் ஒலிபரப்பும் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கிறது. தொலைக்காட்சியோ, ஒலி-ஒளி பதிவு செய்தலும் ஒளிபரப்புதலுமாக இருக்கிறது....

அலைவரிசைகளிலும் தொழில்நுட்பங்களிலும் இந்த வகையான வேறுபாடுகள் குறிப்பிடத்தக்க பெரிய தாக்கங்களை வேறுபட்டத் தகவல் தொழில்நுட்ப ஊடகங்களின் பொருளாம்ச ஆற்றலில் ஏற்படுத்தும். உதாரணமாக, வானொலி மற்றும் தொலைக்காட்சியைப் போல் அச்சு ஊடகம் தனிநபர் சார்ந்ததாக அல்லாமல் முக்கியத்துவம் பெறுகிறது. வானொலி தனித்தன்மையையும் ஆளுமையையும் தனிநபரின் குரலை ஒளிபரப்புவதன் மூலம் முன்னிலைப்படுத்துகிறது. தொலைக்காட்சி இந்தச் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தி தனிநபர்களைக் காட்சிப்படுத்துவதால் அச்சு ஊடகத்தின் படங்களிலுள்ள அசையா பிம்பங்களாய் அல்லாமல் இயங்கும், செயல்படும் காட்சி பிம்பங்களாக மாற்றுகிறது.

தீவிர தொழில்நுட்பவியலாளர்கள் குறியியலின் சூழல்கள் வேறுபட்ட ஊடகங்களின் அடிப்படை வடிவ அம்சங்களால் தாக்கமுறுகின்றன என வலியுறுத்துவதால், குறிப்பிடத்தக்க சமூக, கலாச்சார மற்றும் வரலாற்று அம்சங்களால் வடிவமைக்கப்படும் வேறுபட்ட ஊடகங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிட்ட கலாச்சார பின்னணியில் அவற்றின் தகுதி(எப்போதும் மாறிக்கொண்டிருக்கும்) என்ன என்பதையும் அடையாளப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உதாரணமாக பல சமகால கலாச்சார கோட்பாட்டாளர்கள் தற்கால சமூகத்தில் மொழியைச் சார்ந்த ஊடகங்களைவிட காட்சி ஊடகங்களின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சி குறித்தும் ஊடகங்களின் தகவல் தொடர்பு செயல்பாடுகளின் மாற்றங்கள் பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

குறியியல் அமைப்புகளுக்கும் மொழிகளுக்கும் இடையிலுள்ள பரிமாற்றத்தை 'சூழலியல்' சார்ந்து சிந்திக்கையில் ரஷ்ய கலாச்சார குறியியலாளர் யூரி லோட்மேன் 'குறியியல் புலம்' என்ற பதத்தை உருவாக்கினார், அந்தச் சொல் 'ஆய்வு செய்யப்படும் கலாச்சாரத்தின் முழுமையான குறியியல் வெளியை' குறிக்கிறது.(லோட்மேன் 1990, 124-125).

இந்தக் கருத்தாக்கம் சூழலியாளர்களின் 'உயிரினப்புலம் பற்றிய குறிப்புகளுடன்' தொடர்புடையதாகவும் கலாச்சார கோட்பாட்டாளர்களின் தனிப்பட்ட மற்றும் பொதுப் புலங்களைக் குறிப்பதாகவும் மேலும் இது கடந்தகால அனுபவங்களைக் கூறிய டெயில்ஹார்ட் டி சார்டினுடைய கருத்தாக்கமான(1949ல் உருவான கருத்தாக்கம்) 'அறிவுப்புலம்' என்ற அறிவின் பயிற்சியைக் கூறும் புலமாகவும் இருக்கிறது.
லோட்மேன் இது போன்ற குறியியல் புலங்களை மொழிகளையும் கலாச்சாரங்களையும் கட்டுப்படுத்துகின்ற செயல்பாடாகக் குறிக்க, ஜான் ஹார்ட்லி,'ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் குறியியல் புலங்களில் அடையாளப்படுத்த முடியும்-ஒரு தேசிய அல்லது மொழிக் கலாச்சாரத்தில் உதாரணமாக பெரிய அலகான 'மேற்கு' என்பதாகவும் அதன் 'உயிரிகள்' வரையிலும் இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்'; இதே போல் ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தையும் இது போன்ற குறியியல் புலமாகக் கொள்ளலாம்(ஹார்ட்லி 1996, 106).
குறியியல் புலம் பற்றிய கருத்தாக்கம் குறியியலாளர்களை ஏகாதிபத்திய எல்லைக்கு உட்பட்டவர்களாக அவர்களின் விமர்சகர்கள் கூறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது, ஆனால் ஒரு தனிப்பட்ட ஊடகம் ஒரு வெற்றிடத்தில் இருந்ததாக ஆய்வைதைவிட இது ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குறியியலாக்கத்தின் பார்வையைத் தருகிறது.

பிரதியை ஆய்வு செய்வதற்குக் குறியியலைத் தவிர குறிப்பாக மரபுரீதியான ஆய்வு, கதையாடல் ஆய்வு, 'உள்ளடக்க ஆய்வு' என்று பல வகையான ஆய்வு வகைகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் பற்றிய பிரதியியல் ஆய்வில் உள்ளடக்க ஆய்வு, குறியியல் வகையான ஆய்வுக்கு முற்றிலும் எதிரானது.

மாறாக குறியியல் இப்போது கலாச்சார ஆய்வுடன் நெருங்கிய தொடர்புடையதாகிவிட்டது, உள்ளடக்க ஆய்வு, சமூக அறிவியல் ஆய்வின் மரபார்ந்த மையநீரோட்டத்தில் நிலைபெற்றுவிட்டது. உள்ளடக்க ஆய்வு தகவல் தொழில்நுட்ப ஊடகங்களின் பிரதிகளிலுள்ள வெளிப்படையான 'உள்ளடக்கத்தை' அளவீடுகளின் அணுகுமுறையில் ஆய்வு செய்யும் போது, குறியியல் ஊடகங்களின் பிரதிகளில் கட்டமைக்கப்பட்ட முழுமைகளை ஆய்வு செய்வதுடன் உள்ளார்ந்த கருத்துகளுடைய பொருட்களைத் துருவி ஆராய்கிறது.

குறியியல் சில அரிய சமயங்களில் அளவையியல் ரீதியான அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும் அது போன்ற அணுகுமுறைகளை ஒதுக்குவதையே உள்ளடக்கியிருக்கிறது. ஏதோ ஓர் அம்சம் ஒரு பிரதியில் மீண்டும் மீண்டும் வருவாதேலேயே அது குறிப்பிடத்தக்க ஒன்றாகிவிடாது என்பது குறியியலின் அணுகுமுறைகளில் ஒன்று.

அமைப்பியல் குறியியலாளர் கூறுகளுக்கு இடையேயான உறவைப் பற்றி மட்டுமே அதிக கவனம் கொண்டிருக்கிறார். ஒரு சமூக குறியியலாளர் பிரதியில் இருக்கும் குறிகளுடன் வாசகர் கொண்டிருக்கும் தொடர்பான குறியியலாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார்.

உள்ளடக்க ஆய்வு வெளிப்படையான உள்ளடக்கத்தின் மீது கவனத்தைக் குவித்து பிரதியின் ஒருமையான நிலையான பொருளாம்சத்தைப் பற்றிப் பரிந்துரைக்கிறது. குறியியல் ஆய்வு ஊடகப் பிரதிகளில் இருக்கும் 'சொல்லாடலை' ஆளும் விதிகள் மீது கவனத்தைக் குவித்து பொருளாம்சத்தை வடிவமைக்கும் குறியியல் சூழலின் பங்கை வலியுறுத்தும்.

சில ஆய்வாளர்கள் உள்ளடக்க ஆய்வையும் குறியியல் ஆய்வையும் இணைத்திருக்கிறார்கள்.(உ-ம், க்ளாஸ்கோ பல்கலைக்கழக ஊடகக் குழு, 1980, மறுபதிப்பு 1990, மேகுயார் & மிக் 1992).

சில விமர்சகர்கள் சி.டபிள்யூ.மோரிஸின் குறியியல் பற்றிய விளக்கமான(சசூரின் சிந்தனையை முன்னெடுத்து) 'குறிகளைப் பற்றிய அறிவியல்' என்ற விளக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்(மோரிஸ், 1983. 1-2). 'அறிவியல்' என்ற பதம் திரிபான பொருளைத் தருகிறது. பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாட்டு ஊகங்களையோ, மாதிரிகளையோ அனுபவக் கோட்பாடுகளையோ குறியியல் இன்னும் கைக்கொள்ளவில்லை.
குறியியல் கோட்பாடு எனும் அகன்ற பரப்பை மட்டுமே குறிக்கிறது. குறியியலாளர்கள் அதன் பரப்பையும் பொதுக் கொள்கைகளையும் நிறுவ முயல்கிறார்கள். சசூரும் பர்ஸும் குறி என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தின் மீது மட்டுமே கவனத்தைக் கொண்டிருந்தார்கள். குறிகளின் வகைமைகளுக்கு விரிவான வகையில் தர்க்க அடிப்படையிலான பெயர்களைப் பர்ஸ் வளர்த்தெடுத்தார். அவர்களுக்குப் பின் வந்த குறியியலாளர்கள் குறிகள் ஒழுங்குப்படுத்தப்படும் விதிகள் அல்லது மரபுகளை அடையாளப்படுத்தவும் வகைப்படுத்தவும் முனைந்தனர்.

பல்வேறு மாறுபட்ட கோட்பாட்டு ஊகங்களைக் கொண்ட குறியியலுக்கு ஓர் ஆழமான கோட்பாட்டு அடிப்படை வகுக்கப்படவேண்டும் என்ற தேவை எழுந்திருப்பது தெளிவு. ஆய்வு முறைகளைப் பொறுத்தவரை, பிரதிகளையும் சமூக செயற்பாடுகளையும் ஆய்வு செய்வதற்கு சசூரின் கோட்பாடுகள் பல்வேறு அமைப்பியல் ஆய்வு முறைகள் வளர்வதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தன.

கலாச்சார வாழ்வனுபவங்கள் பற்றிய ஆய்வுக்கு இவை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும், அது போன்ற ஆய்வு முறைகள் சர்வதேச அளவில் ஏற்கப்படவில்லை:அமைப்பை மட்டுமே மையம் கொண்ட இந்தக் கோட்பாடுகளை சமூகத்துவத்தை மையமாகக் கொண்ட கோட்பாட்டாளர்கள் விமர்சித்தார்கள் மேலும் இதற்கு மாற்றான ஆய்வு முறைகள் எதுவும் பெரிய அளவில் ஏற்கப்படவில்லை.
சில குறியியல் ஆய்வுகள் அனுபவத்தை மையமாகக் கொண்டு குறியியல் கொள்கைகளைப் பயன்படுத்தவும் பரிசோதிக்கவும் முனைந்தன. பாப் ஹாட்ஜ் மற்றும் டேவிட் டிரிப், குழந்தைகளும் தொலைக்காட்சியும் என்ற அவர்களின் பெயர் பெற்ற ஆய்வில் அனுபவ ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தினார்கள்(ஹாட்ஜ்&டிரிப், 1986).

பல்வேறுபட்ட ஆய்வு முடிவுகளின் மீது கட்டப்பட்ட கோட்பாடாக குறியியல் இப்போது புரிந்துகொள்ளப்படுகிறது.

தனிப்பட்ட கல்வித்துறையாக இருப்பதை விட கலை, இலக்கியம், மானுடவியல், தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் போன்றவற்றைப் பற்றிய ஆய்வாக குறியியல் இருக்கிறது. குறியியலைப் பயன்படுத்தி ஆய்வுசெய்பவர்களாக மொழியியலாளர்கள், தத்துவவியலாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள், இலக்கிய, அழகியல், ஊடகவியல் கோட்பாட்டாளர்கள், உளவியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் ஆவர்.

அடிப்படை விளக்கத்தை மீறி, முன்னணி குறியியலாளர்களிடையே குறியியல் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய வேறுபட்ட கருத்துகள் உள்ளன. அது (நோக்கம் கொண்ட) தொடர்புறுத்தம் பற்றி மட்டும் அல்லாமல் இந்த உலகத்தில் எதைப் பற்றி வேண்டுமானாலும் இயல்பாகக் குறித்தலாக்கம் செய்வது பற்றியும் கவனமெடுக்கிறது. குறியியல் காலத்திற்கேற்ப மாறுபட்டிருக்கிறது, ஏனெனில் குறியியலாளர்கள் தொடக்கக் கால அணுகுமுறைகளின் பலவீனங்களை நீக்க எண்ணினார்கள். அடிப்படையான குறியியல் பதங்களைப் பற்றிய விளக்கங்கள் கூட எண்ணிறந்தவையாக உள்ளன.

இதன் விளைவாக, குறியியல் ஆய்வை செய்ய விழைபவர்கள் எந்த விளக்கங்கள் பயன்பாட்டிலுள்ளன எந்த குறியியலாளரின் அணுகுமுறைப் பயன்படுத்தப்படுகிறது, அந்த ஆய்வின் மூலம் எது போன்றவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. இரண்டு வேறுபட்ட மரபுகள் குறியியலில் உள்ளன அவை:சசூர் மற்றும் பர்ஸ். லூயி ஹெல்ம்ஸ்லெவ், ரோலண்ட் பார்த், க்ளாட் லெவிஸ்ட்ராஸ், ஜூலியா கிறிஸ்தவா, கிறிஸ்டியர் மெட்ஸ் மற்றும் ழான் பூர்தியா(1929) ஆகியோர்களின் ஆய்வு சசூரின் 'குறியியல்' மரபைத் தொடர சார்ல்ஸ் டபிள்யூ மோரிஸ், ஐவர் ஏ ரிச்சர்ட்ஸ்(1893-1979), சார்ல்ஸ் ஆக்டென்(1989-1957) மற்றும் தாமஸ் செபோக்(1920) ஆகியோர் பர்ஸின் 'குறியியல்' மரபைப் பின்பற்றினார்கள். இந்த இரண்டு மரபுகளுக்கும் பாலமாக விளங்கியவர் முன்னணி குறியியலாளரும் அதிகம் விற்பனையான 'ரோஜாவின் பெயர்'(நேம் ஆப் தி ரோஸ்) நாவலாசிரியருமான(நாவல் 1980, படம் 1986) உம்பர்ட்டோ எக்கோ, இவருடைய படங்களுக்கு மட்டுமே உரிய மதிப்பு இருக்கிறது(எக்கோ 1980).

"மொழி பற்றிய ஆய்வு மட்டுமே குறியியல் பற்றிய நோக்கத்தை வெளிக்கொணரும்' என்று சசூர் கூறுகிறார்(சசூர் 1983, 16, சசூர் 1974, 16). குறியியல் பெரும்பாலும் மொழியியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்தே ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கு பாதி காரணம் சசூரின் தாக்கம் மீதி காரணம் குறி அமைப்புகளைப் பற்றிய பிற ஆய்வுகளை விட மொழியியல் நிறுவனமயமாகப்பட்ட துறையாக இருக்கிறது. அமைப்பியலாளர்கள் மொழியை ஒரு மாதிரியாக வைத்து சமூக வாழ்வனுபவத்தின் விரிவான பரப்பை ஆய்வு செய்ய முயற்சித்தார்கள்:லெவிஸ்ட்ராஸ் புராணம், உறவுமுறைகளின் விதிகள் மற்றும் குலக்குறி குறித்தும், லக்கான் நனவிலி பற்றியும், பார்த்தும் கிரிமாஸும் சொல்லாடலின் 'விதி'கள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். 'குறியியல் எதை வெளிப்படுத்துகிறது என்றால்...அதிகாரத்தில் இருக்கும் சட்டம் அல்லது சமூக செயல்பாட்டைத் தாக்கும் எந்த ஒரு பெருந்தடையும் அது குறிப்பீட்டாக்கம் செய்கிறது என்பதில் இருக்கிறது அதாவது அது மொழி போல் விளக்கப்படுகிறது' என்கிறார் ஜூலியா கிறிஸ்தவா.(ஹாக்ஸ் 1977, 125). சசூர் மொழியை(அவர் பேச்சு என்கிற மாதிரியைக் குறிக்கிறார்) எல்லா குறி அமைப்புகளிலும் 'மிகவும் முக்கியமானது' என்கிறார்(சசூர் 1983, 15 சசூர் 1974, 16).


குறியியல்-அறிமுகம்-12(மொழிபெயர்ப்பு)

மொழி ஒரு சக்தி வாய்ந்த தொடர்பு ஊடகம் என்றே கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. உதாரணமாக, 'மனிதனின் மொழிகள் தொடர்பு ஊடகங்களில் உலகளாவிய பொருளனியலைக் கொண்டிருந்ததால் தனித்தன்மை வாய்ந்தது...உலகளாவிய பொருளனியலைக் கொண்ட இந்தத் தொடர்பு சாதனம் எல்லா அம்சங்கள், களங்கள், பண்புகள், இடங்கள் அல்லது கடந்த, நிகழ், வருங்கால நிகழ்வுகள், இயல்பானதோ அல்லது சாத்தியமானதோ, உண்மையோ கற்பனையோ எதைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவும் பயன்படுகிறது' என்கிறார் மார்வின் ஹாரிஸ்(வில்டன் 1987, 138).


மொழிதான் அடிப்படை:எமிலி பென்வெனிஸ்ட், 'மொழியியல் மற்றும் மொழியியலற்ற மற்ற எல்லா அமைப்புகளையும் விளக்கும் அமைப்பாக மொழி உள்ளது' என்று அவதானிக்கிறார், மாறாக க்ளாட் லெவிஸ்ட்ராஸ், 'மொழி குறியியலின் தேர்ந்த அமைப்பு: அது குறித்தலை மட்டுமே செய்யக்கூடியது, குறித்தலாக்கத்தில் மட்டுமே அது இருக்கிறது' என்கிறார்(லெவிஸ்ட்ராஸ் 1972, 48).

சசூர் மொழியியலைக் 'குறியியலின்' ஒரு கிளையாகப் பார்த்தார்: மொழியியல் இந்த பொது அறிவியிலின்(குறியியலின்) ஒரே ஒரு கிளைத் துறை. குறியியல் கண்டெடுக்கும் விதிகள் மொழியியலுக்கும் பொருந்தும்....நம்மைப் பொறுத்தவரை...மொழியியல் சிக்கலே முதலாவதும் முதன்மையானதுமான சிக்கலாகக் குறியியலில் உள்ளது..
மொழி அமைப்புகளின் உண்மையான இயல்பை ஒருவர் கண்டறிய விரும்பினால் அவற்றைப் போன்ற அமைப்புகளுடன் அவைக் கொண்டிருக்கும் ஒப்புமைகளைக் காணவேண்டும்..இந்த முறையில், மொழியியல் சிக்கல் மட்டும் அல்லாமல் மற்றவற்றின் சிக்கலும் விளக்கப்படும். சடங்குகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் குறிகளாகப் பார்க்கச் சாத்தியப்பட்டால் அது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும் என்று நம்பலாம்.

அவற்றைக் குறியியலில் வாழ்வனுபவங்களாகப் பார்த்தால் குறியியலின் விதிக்கு உட்பட்டு விளக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது(சசூர் 1983, 16-17; சசூர் 1974, 16-17). பார்த், 'சசூரின் கோட்பாட்டைத் தலைகீழாக்கி மொழியியலின் ஒரு கிளையாகக் குறியியலைக் கொள்ளலாம்' என்று கூற, மற்ற ஆய்வாளர்கள் சசூர் கூறியபடி குறியியலின் ஒரு கிளையாகவே மொழியியலைப் பார்த்தார்கள்(பார்த் 1985, xi)

அவரைத் தவிர ஹெல்ம்ஸ்லாவையும் கிரிமாஸையும் பற்றி ழான்-மேரி ஃப்ளாக் கூறுகிறார்(ஃப்ளாக் 2000, 93). குறியியலுக்குள் மொழியியலைக் கொண்டாலும், மற்ற குறி அமைப்புகளை விளக்கும் போது மொழியியல் மாதிரியை ஏற்பது சிரமம். குறியியலாளர்கள் திரைப்படங்களை, தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை, விளம்பர சுவரொட்டிகள் போன்றவற்றை 'பிரதி' என்றே குறிப்பிடுகிறார்கள், மேலும் 'தொலைக்காட்சியை வாசித்தல்' என்றே கூறுகிறார்கள்(ஃபிஸ்க் & ஹார்ட்லி 1978).

சில குறியியலாளர்கள் தொலைக்காட்சியையும் திரைப்படத்தையும் 'மொழிகள்' போல் பாவிக்கிறார்கள். திரைப்படம் நமது தின நடைமுறை அனுபவத்திற்கு நெருக்கமாக இருக்கும் 'உண்மை' என்பது போலவோ அல்லது எழுத்து போன்ற குறிப்பீட்டு அமைப்புடன் பொது ஒப்புமை கொண்டது போலவோ இந்தக் கருத்து சுற்றி வருகிறது. சிலர் மொழியைத் தவிர ஊடகத்தில்தான் 'இலக்கணம்' இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஜேம்ஸ் மோனகோ, 'திரைப்படத்தில் இலக்கணம் இல்லை,' என்று கூறுவதுடன் இயல்பான மொழியின் இலக்கணத்திற்கும் திரைப்படத் தொழில்நுட்பங்களுக்கும் இடையேயுள்ள ஆழமற்ற பொருத்தப்பாட்டை எடுத்துரைக்கிறார்.(மேற்குறிப்பிட்ட நூல் 129).
எல்லா ஊடகங்களையும் மொழியின் கட்டமைப்பிற்குத் தள்ளுவதில் ஓர் அபாயம் இருக்கிறது. புகைப்படத்தைப் பற்றி(திரைப்படத்திற்கும் தொலைக்காட்சிக்கும் கூட இதே போல் கூறமுடியும்)விக்டர் புர்கின்:புகைப்படத்திற்கு 'மொழி' இல்லை. எந்த ஒரு தனிப்பட்ட குறிக்கும் அமைப்பும் இல்லை(தொழில்நுட்ப கருவிகளுக்கு மாற்றாக) எல்லா புகைப்படங்களும் அதனடிப்படையிலேயே உள்ளன(உதாரணமாக ஆங்கிலத்திலுள்ள எல்லா பிரதிகளும் ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்டவை என்பது போல); மாறாக, புகைப்படம் பலதரப்பட்ட சிக்கலான விதிகளின் அடிப்படையை பின்பற்றுகிறது' என்று வலியுறுத்துகிறார்(புர்கின் 1982, 143).

சசூரின் குறி மாதிரியை ஆராயலாம், ஆனால் அதற்கு முன் எந்தக் கட்டமைப்பில் அதை அவர் உருவாக்கியிருக்கிறார் என்று புரிந்துகொள்வது முக்கியமானது. சசூர் மொழிக்கிடங்கு(மொழி) என்றும் வாய்மொழி(பேச்சு) என்ற மிகவும் பிரபலமான வேறுபாட்டை உருவாக்கினார்.

மொழிக்கிடங்கு என்பது தனிநபரகள் பயன்பாட்டை மீறி சுதந்திரமான இயல்பாக நிலவியிருக்கின்ற விதிகள் மற்றும் மரபுகளின் அமைப்பு. வாய்மொழி என்பது குறிப்பிட்ட சமயங்களில் இருக்கும் பயன்பாட்டைக் குறிப்பது. இந்தக் கருத்தை மொழிக்கு மட்டுமே அல்லாமல் மற்ற குறியியல் அமைப்புகளுக்குப் பொருத்தினால் குறியீடும் செய்தியும், அமைப்பும் நிகழ்வும் அல்லது முறைமையும் பயன்பாடும்(சில குறிப்பிட்ட பிரதிகளில் அல்லது சூழல்களில்) என்பதாக அந்த வேறுபாடு உருவாகும்.

திரைப்படம் போன்ற குறியியல் அமைப்பில் சசூரின் வேறுபாடு, 'எந்த ஒரு குறிப்பிட்ட திரைப்படமும் அதன் அடிப்படையான திரை மொழி அமைப்பின் பேச்சாகும்'(லேங்லோஜ் லேமோர் 1975, 3).
சசூர் வாய்மொழிப் பேச்சை விட மொழிக்கிடங்கின் மீதுதான் அதிகக் கவனத்தைச் செலுத்தினார்.

குறியியல்-அறிமுகம்-14(மொழிபெயர்ப்பு)

பயன்படுத்தப்படும் சமயங்களில் மட்டும் உள்ள தனிப்பட்ட செயல்பாடுகளையும் அல்லது செயல்முறைகளையும் விட முழுமையான குறியியல் அமைப்பின் அடித்தளமாக அமையும் அமைப்புகளையும் விதிகளையும் பற்றி அறிவதுதான் மரபார்ந்த சசூரிய குறியியலாளருக்கு முதன்மையாக இருப்பதாகும்.
அமைப்பு பற்றிய சசூரின் அணுகுமுறை 'கிடைக்கோட்டு' நிலையில் காலத்தால் உறைந்து போன அமைப்பு பற்றிய ஆய்வாக (புகைப்படம் போல) இருந்தது. இதற்கு மாறாக 'குத்துக்கோட்டு' நிலை என்பது-காலத்தில் நிகழும் பரிணாமமாகவும் கருதப்படுகிறது(திரைப்படம் போல்).

அமைப்பியல் கலாச்சாரக் கோட்பாட்டாளர்கள் சசூரிய முன்னுரிமையை ஏற்று சமூக, கலாச்சார நிகழ்வனுபவச் செயல்பாடுகளைக் குறியியல் அமைப்புகளுக்குள்ளாக ஆய்வு செய்யத் தொடங்கினார்கள்.

அமைப்பு முதலில் வந்து பயன்பாட்டைத் தீர்மானிக்கிறதா(அமைப்பியல் நியதியியல்) அல்லது பயன்பாடு முதலில் ஏற்பட்டு அமைப்பைத் தீர்மானிக்கிறதா (சமூக நியதியியல்) (பல அமைப்பியல்வாதிகள் அமைப்பானது முழுமையாக தீர்மானிப்பதை விட பயன்பாட்டைத் தடுக்கிறது என்றும் விவாதிக்கிறார்கள்) என்பதைப் பற்றி கோட்பாட்டாளர்களிடையே வேறுபாடு நிலவுகிறது.

பயன்பாடு மற்றும் அமைப்பு என்ற அமைப்பியல் பிளவு அதன் இறுகிய தன்மைக்காக விமர்சிக்கப்பட்டிருக்கிறது, செயல்முறையிலிருந்து விளை பொருளைப் பிரித்தல், பொருளை அமைப்பிலிருந்து பிரித்தல் என்பதாக அந்தப் பிளவு உள்ளது(கவர்ட் & எல்லிஸ் 1977, 4, 14). பயன்பாட்டை விட அமைப்புக்கு முன்னுரிமை தருவது அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய மறுப்பதாக உள்ளது.

மார்க்சிய கோட்பாட்டாளர்கள் இந்த விமர்சனத்தை அதிகமாக முன்வைக்கிறார்கள். 1920களின் பிந்தைய காலகட்டத்தில், வேலன்டின் வொலஷினோவ்(1884-5-1936) மற்றும் மிகைல் பக்தீன்(1895-1975) ஆகியோர் சசூரின் கிடைக்கோட்டு அணுகுமுறையையும் மொழியின் அமைப்பில் இருக்கும் உள்ளார்ந்த உறவுகள் பற்றிய அவருடைய வலியுறுத்தலையும் விமர்சித்திருக்கிறார்கள்(வொலஷினோவ் 1973; மோரிஸ் 1994).

வொலஷினோவ் பேச்சுக்கு முதன்மையானது மொழிக்கிடங்கு என்ற சசூரின் முன்னுரிமையை தலைகீழாக மாற்றி:'குறி என்பது ஒழுங்கமைக்கப்பட்ட சமூக பரிவர்த்தனையில் ஒரு பகுதி மட்டுமே அது தனித்து உண்மையில் புறத்தில் இயங்க முடியாது, எனவே அது வெறும் ஸ்தூலமான விளைபொருள்' என்கிறார்(வொலஷினோவ் 1973, 21).
குறியின் பொருள் மொழியின் அமைப்பில் இருக்கும் மற்ற குறிகளுடன் இருக்கும் உறவால் வருவதல்ல மாறாக சமூகச் சூழலில் அதன் பயன்பாட்டால் வருவது என்கிறார். சசூர் வரலாற்றை புறக்கணித்தது பற்றி விமர்சிக்கப்பட்டார்(மேற்குறிப்பிட்ட நூல், 61).

குறியியல்-அறிமுகம் 15(மொழிபெயர்ப்பு)

ப்ராக் பள்ளியைச் சேர்ந்த ரோமன் யாக்கப்சனும் யூரி டைனியனோவும் 1927ல் 'முழுமையான கிடைக்கோட்டு நிலை(ஒருமித்து நிகழும் அனுபவங்களின் தொகுப்பு) என்பது ஒரு மாயை என நிரூபிக்கப்பட்டுவிட்டது,' என அறிவித்தனர் அத்துடன் 'ஒவ்வொரு கிடைக்கோட்டு அமைப்பும் கடந்த காலமும் எதிர்காலமும் கொண்ட அமைப்பின் கூறுகளைப் பிரிக்க முடியாதபடி அதன் அமைப்புடன் சேர்த்திருக்கும் என்றார் வொலஷினோவ்(வொலஷினோவ் 1973, 166).

வொலஷினோவ் 1929ல் எழுதும் போது, 'மொழியின் கிடைக்கோட்டு அமைப்பு கட்டப்படும் போது காலத்தில் ஓர் உண்மையான நேரம் என்பது இல்லை..கிடைக்கோட்டு அமைப்பு என்பது வரலாற்று காலகட்டத்தில் குறிப்பிட்ட கணத்தில் குறிப்பிட்ட மொழிக் குழுவைச் சேர்ந்த ஒரு தனிப்பட்ட பேச்சாளரின் தன்னிலை நனவிலிக்குரிய பார்வையில் மட்டுமே இருப்பதாகும்' என அவதானிக்கிறார்(வொலஷினோவ் 1973, 66).

அதற்கு மாறாக ப்ரெஞ்சு நாட்டின் அமைப்பியலாளர் க்ளாட் லெவிஸ்ட்ராஸ் கிடைக்கோட்டு அணுகுமுறையை மானுடவியலில் பயன்படுத்தினார். ஆனால் பல சமகால குறியியலாளர்கள் வரலாற்று ஆதாரங்களையும் சமூகச் சூழலையும் மீண்டும் முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள். மொழி நிலையானதாக, மூடியதாக, நிலைத்திருக்கும் அமைப்பாக, முந்தைய சந்ததிகளிடமிருந்து பெறப்பட்டதாக சில நேரங்களில் கருதப்பட்டாலும் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதாகும்.

குறி என்பது, 'வர்க்கப்போராட்டத்தின் ஓர் அரங்கு' என்று வொலஷினோவ் கூறுகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 23). 'சமூகக் குறியியலை' முழுமனதோடு நிறுவ, ராபர்ட் ஹாட்ஜும் குந்தர் க்ரெஸும் முயன்று, 'குறியியல் அமைப்புகளின் சமூக பரிமாணங்கள் உள்ளார்ந்த இயல்புடையவை என்பதால் அமைப்புகளின் செயல்பாட்டைத் தனிப்பட்டு ஆராயமுடியாது,' என்கிறார்கள்(ஹாட்ஜ் & க்ரெஸ் 1988, 1).

குறியியலைத் தோற்றுவித்தவராக சசூர் புகழப்பட்டாலும் குறியியல் சசூரியத் தன்மையிலிருந்து பெரிதும் மாறிவிட்டது. தெரசா டி லாரெட்டிஸ் 1970ல் அமைப்பியல் குறியியலிலிருந்து வேறுபட்டுத் தொடங்கிய இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்:

கடந்த சுமார் பத்தாண்டுகளில் குறியியல் அதன் கோட்பாட்டுச் சக்கரங்களில் மாற்றத்தைக் கண்டிருக்கிறது:குறிகளின் அமைப்பை வரையறுப்பதில் மாற்றம்-அவற்றின் அடிப்படை அலகுகள், அவற்றின் ஒழுங்கமைப்படும் அமைப்பியல் நிலைகள்-அத்துடன் குறிகளையும் அவற்றின் பொருள்களையும் உருவாக்கும் மூலங்கள், அமைப்புகளும் விதிகளும் பயன்படுத்தப்படும் முறைமைகள் சமூக நடைமுறையில் மாறி, மீறி இருக்கின்றன.

குறியியல்-அறிமுகம்-16(மொழிபெயர்ப்பு)

முன்பு குறி அமைப்புகள்(மொழி, இலக்கியம், திரைப்படம், கட்டிடக்கலை, இசை, இன்ன பிற) மீதான ஆய்வு, தகவல்களை உற்பத்தி செய்யும் உபகரணங்களாகக் கருதப்பட்டதை வலியுறுத்த, இப்போது இவற்றின் மூலம் நடக்கும் பணி பற்றி ஆய்வு நடக்கிறது. இந்தப் பணி அல்லது செயல்பாடுதான், விதிகளை அமைக்கவும் அல்லது மாற்றவும் பயன்படும், அதே நேரத்தில் அந்த விதிகளைப் பயன்படுத்தும் தனிநபர்களை அதாவது அந்தச் செயல்பாடுகளைச் செய்பவர்களைக் கட்டமைக்கவும் மாற்றவும் பயன்படுகிறது:எனவே அந்தத் தனிநபர்கள் குறித்தலாக்கத்தின் பொருள்களாகிறார்கள்.

'குறித்தலாக்கம்' என்ற சொல் சார்ல்ஸ் சேண்டர்ஸ் பர்ஸிடமிருந்து பெறப்பட்டது, எக்கோவால் விரிக்கப்பட்டு குறிகளை உருவாக்கும் கலாச்சாரச் செயல்பாட்டைக் குறிக்கவும் குறிகளின் பொருள்களைத் தருவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எக்கோவைப் பொறுத்தவரை அர்த்த உற்பத்தி அல்லது குறித்தலாக்கம் ஒரு சமூக செயல்பாடு. அவர் தனிப்பட்ட குறித்தலாக்கத்தில் தன்னிலை அம்சங்கள் சேர்ந்திருப்பதை அனுமதிக்கிறார். இந்தக் கருத்து தற்போதைய அல்லது பின் அமைப்பியல், குறியியல் கோட்பாட்டில் இரு முன்னிறுத்தல்களுக்கு உரியதாகிறது.

ஒன்று தன்னிலை அம்சங்களாலான குறித்தலாக்கத்தை முன்னிலைப்படுத்தும் குறியியல் அது லக்கேனிய உளவியலால் ஆழமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதில் அர்த்தம் தன்னிலை-விளைவினால் உருவாகிறது(குறிப்பானின் ஒரு விளைவாக தன்னிலை இருக்கிறது). மற்றொன்று சமூக அம்சத்தால் குறித்தலாக்கம் நடைபெறுவதாகச் சொல்லும் குறியியல். அது நடைமுறைச் சார்ந்த, தனிநபர்களுக்கு இடையிலான தகவல் தொடர்பாகப் பயன்படும் அழகியல் அல்லது கருத்தாக்கமாகும். இதில் அர்த்தம் கலாச்சார பரிவர்த்தனை விதிகளால் பொருளனியல் மதிப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது(டி லாரெட்டியஸ் 1984, 167).

இந்தப் பிரதி குறியியலின் சில முக்கியமான கருத்தாக்கங்களை அதற்குரித்தான விமர்சனங்களோடு வெளிப்படுத்துகிறது. இது குறி என்பது பற்றிய அடிப்படையிலிருந்து தொடங்கி விளக்குகிறது. இந்த நூல் இந்தத் துறை குறித்து வாசிப்பவருக்கு ஒரு வழிகாட்டுவதாக அமையும். ஆனால் இத்தகைய ஆர்வமூட்டும் ஆழமான வாசிப்பைக் கோரும் ஒரு துறை பற்றிப் படிப்பதற்கு முன் எதற்காக இது பற்றிக் கவலைப்படவேண்டும்: எதற்காக குறியியலைப் படிக்கவேண்டும்? குறியியலாளர்களின் எழுத்துகள் ஆழமானவையாகவும் சொல் அலங்காரங்கள் கொண்டவையாகவும் உள்ளதாகக் கருதப்படுகின்றன.

ஜஸ்டின் லூயிஸ், 'குறியியலைப் பற்றி எழுதுபவர்கள் தெளிவில்லாமலும் புரியாமல் போகும்படியும் எழுதுகிறார்கள்' என்று கூறுகிறார்(லூயிஸ் 1991, 25). மற்றொரு விமர்சகர் கேலியுடன், 'நாம் முன்பே அறிந்தவற்றை நாம் எப்போதும் அறிந்துகொள்ள முடியாத மொழியில் கூறுவதுதான் குறியியல்' என்கிறார்(பேடி வேனல், குறிப்பிட்டது சைட்டர் 1992, 1). குறியியல் ஒரு தனிப்பட்ட முகாம் அது பற்றி டேவிட் ஸ்லெஸ், 'குறியியலாளர்களுக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் உரிய துறை குறியியல்' என்கிறார்(ஸ்லெஸ் 1986, 1).

குறியியல் 'உண்மை'யை புறவயமான இருப்பு இருக்கும் ஒன்றாக மனித விளக்கத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதாமல் இருக்க உதவுகிறது. உண்மை என்பது குறிகளின் அமைப்பு என்று கற்றுக்கொடுக்கிறது. உண்மை என்பது கட்டமைக்கப்பட்டது என்பதும் நாமும் மற்றவர்களும் சேர்ந்து பங்கெடுத்து அதைக் கட்டமைக்கிறோம் என்பதும் குறியியல் படிக்கையில் அறிந்துகொள்ளமுடிகிறது.

தகவல் அல்லது பொருள் என்பது உலகத்திலோ அல்லது நூல்களிலோ, கணினிகளிலோ அல்லது ஒலி-ஒளி தகவல்தொடர்பு சாதனங்களிலோ 'கட்டிவைக்கப்'பட்டதல்ல என்பதைப் புரிந்துகொள்ள குறியியல் உதவுகிறது. பொருள் என்பது நமக்கு 'கடத்தப்படுவது' அல்ல-நாம் அதை நம்மை அறியாமலேயே விதிகளுக்கும் மரபுகளுக்கும் உட்பட்டு படைக்க முனைகிறோம். அது போன்ற விதிகளைப் பற்றி விழிப்புணர்வு அடைவது உள்ளார்ந்த பரவசத்தையும் அறிவார்ந்த அதிகாரத்தையும் தருவதாகும்.
நாம் குறிகளாலான உலகத்தில் இருக்கிறோம் என்பதையும் நாம் எல்லாவற்றையும் குறிகள் மற்றும் விதிகள் மூலம் மட்டுமே அறிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் இருக்கிறோம் என்பதையும் குறியியல் மூலம் தெரிந்துகொள்கிறோம். இந்தக் குறிகளும் விதிகளும் வெளிப்படையாக இருந்தாலும் அவற்றைக் 'கற்கும்' போது அவை உருமாற்றிக்கொள்கின்றன என்பதைக் குறியியலைப் படிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

காட்சிக் குறிகளால் அதிகம் சூழப்பட்ட உலகத்தில் வாழும் போது 'இயல்பான' குறிகள் கூட அவை தோற்றம் தருவது போன்றவையாக இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. குறிகள் விளக்கமடையும் விதிகளை வெளிப்படுத்தும் போது 'இயல்பற்ற' குறிகளாக்கும் குறியியலின் மதிப்புமிக்க செயல்பாட்டை நிகழ்த்துகிறோம். உண்மைகளை விளக்கும் போது குறிகள் கருத்தாக்கச் செயல்பாட்டைச் செய்கின்றன.

குறிகளின் உண்மைகளைக் கட்டுடைக்கும் போதும் விளக்கும் போதும் யாருடைய உண்மைகள் வெளிப்படையாக இருக்கின்றன யாருடைய உண்மைகள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படும். குறிகளைப் பற்றிய ஆய்வு என்பது உண்மையின் கட்டமைப்பையும் பராமரிப்பையும் ஆய்வதாகும். இது போன்ற துறையை மறுத்தல் நாம் இருக்கும் உலகத்தின் பொருள்களை மற்றவர்கள் கட்டுப்படுத்த விட்டுவிட வேண்டியதாகிவிடும்.

குறியியல்-அறிமுகம்-18 (மொழிபெயர்ப்பு)

குறிகள்

பொருளை உருவாக்கும் வேட்கையால் கையாளப்படும் இனமாக நாம் இருக்கிறோம்:எல்லாவற்றுக்கும் மேலே நாம் பொருள் உருவாக்குபவர்களான மனித குறித்தலாக்கங்களாக இருக்கிறோம். நாம் 'குறிகளு'க்கான பொருளைத் தனிப்பட்ட முறையில் படைக்கிறோம் விளக்குகிறோம். உண்மையில், சார்ல்ஸ் சேண்டர்ஸ் பர்ஸைப் பொறுத்தவரை, 'நாம் குறிகளாகத்தான் சிந்திக்கிறோம் (பர்ஸ் 1931-58, 2.302) என்கிறார்.

சொற்கள், பிம்பங்கள், ஒலிகள், வாசனைகள், சுவைகள், பொருள்களின் செயல்பாடுகள் என்று பல வடிவங்களைக் குறிகள் எடுக்கின்றன. ஆனால் அவற்றிற்கு நாம் பொருளை முதலீடு செய்யும் போதுதான் அவைக் குறிகளாக மாறுகின்றன. 'எதுவுமே குறி என்று விளக்கப்படும் வரை குறி கிடையாது,' என்று பர்ஸ் அறிவிக்கிறார்(பர்ஸ் 1931-58, 2.172). எதுவுமே குறி என ஒருவர் விளக்கி ஏதோ ஒன்றுக்காகக் 'குறிக்கும்' போது-மற்ற ஏதோ ஒன்றாக அது நிற்கும் போது விளக்கப்படும் போது அது குறியாகிறது.

நாம் பொதுவாக பொருள்களை அதிகம் அறிந்த அவற்றின் மரபுகளோடு தொடர்புபடுத்தி நனவிலி நிலையில் குறிகளாக விளக்குகிறோம். இந்த வகையாகக் குறிகளின் பொருளாம்சம் மிக்கப் பயன்பாடுதான் குறியியலின் முதன்மையான கவனமாக இருக்கிறது. குறிகளைக் கட்டமைக்கும் இரண்டு முக்கிய மாதிரிகள், மொழியியலாளர் ஃபெர்டினாண்ட் டி சசூர் மற்றும் தத்துவவியலாளர் சார்ல்ஸ் சேண்டர்ஸ் பர்ஸ் கட்டமைத்தவையாகும். இவை பின்னர் விரிவாக விவாதிக்கப்படும்.

சசூர் 'இரட்டை' அல்லது இரண்டு பகுதிகளையுடைய குறியை அறிமுகம் செய்தார். அவர் குறி என்பதைப் பற்றிக் கீழ்க்கண்ட விளக்கத்தைத் தருகிறார்:
·         ஒரு 'குறிப்பான்'-குறி எடுக்கும் வடிவம்
·         ஒரு 'குறிப்பீடு'-குறி குறிக்கும் கருத்து
குறிப்பானும் குறிப்பீடும் ஒன்றிணைவதால் உருவாகும் முழுமையான விளைவு குறியாகும்(சசூர் 1983, 67; சசூர் 1974, 67). குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள உறவு 'குறித்தலாக்கம்' என்று குறிப்பிடப்படுகிறது. இது அம்புக்குறிகளால் விளக்கப்படுகிறது. இரு உறுப்புகளுக்கும் இடையில் இருக்கும் கோடு 'வரம்பு' என்றழைக்கப்படுகிறது.

மொழியியல் ரீதியாக ஓர் உதாரணத்தைச் சொல்வதென்றால், 'இழு' அல்லது 'தள்ளு' என்ற சொல்(கடைகளில் அல்லது வெளியிடங்களில் கதவுகளின் மேல் மீது எழுதப்பட்டிருக்கும் சொல்லை ஒருவர் பொருள் கொடுக்க விரும்பினால்) ஒரு குறியாகக் கீழ்க்கண்டபடி விளக்கப்படும்:
குறிப்பான்:'திற' 'இழு' என்ற சொல்
குறிப்பீடு:கதவு திறப்பதற்கும் மூடுவதற்கும் குறிப்பதற்கு எழுதப்பட்டக் கருத்தாக இருக்கிறது.

ஒரு குறிக்கு, குறிப்பானும் குறிப்பீடும் இருக்கவேண்டும். பொருளற்ற குறிப்பானும் அல்லது வடிவமற்ற குறிப்பீடும் இருக்கமுடியாது(சசூர் 1983, 101: சசூர் 1974 102-103). ஒரு குறிப்பானோடு குறிப்பிட்ட  குறிப்பீடு மட்டுமே இணைந்து ஏற்கத்தக்க குறியை உருவாக்கும். மேற்குறிப்பிட்ட 'திற' என்ற குறிப்பானுக்கு வேறு ஒரு குறிப்பீடு இருக்கலாம். அதனால் அது வேறு ஒரு குறியாக மாறிவிடுகிறது. உதாரணமாக ஒரு மின்தூக்கியில் ஒரு பொத்தானை அழுத்தினால்தான் கதவு திறக்கும் என்பதற்குப் பயன்படும் சொல்லாக அந்தக் குறி இருக்கலாம்.

இதே போல் பல குறிப்பான்கள் 'திற' என்ற கருத்தைக் குறிப்பவையாக இருக்கலாம். உதாரணமாக மூடப்பட்ட பெட்டியைத் திறக்க அதன் மீது எழுதப்பட்டிருக்கும் ஒரு சொல்லாக இருக்கலாம், ஒரு பெட்டியில் எந்த இடத்தில் திறக்கவேண்டும் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். ஒவ்வொரு இணைக்கும் வேறுபட்ட ஒரு குறி உருவாகிக்கொண்டே இருக்கும்.

குறியியல்-அறிமுகம்-19(மொழிபெயர்ப்பு)

இன்றைய காலகட்டத்தில், 'சசூரிய' மாதிரியை உட்கொண்டு உருவாக்கப்படும் குறி மாதிரி, சசூரை விட அதிகம் பொருளியல் சார்ந்ததாக உள்ளது. குறியின் குறிப்பான், பொருளியல்(அல்லது ஸ்தூலமானதாக) வடிவமாக உள்ளது-அது பார்க்கத்தக்கதாக, கேட்கத்தக்கதாக, தொட்டுணரத்தக்கதாக, நுகரத்தக்கதாக அல்லது சுவைக்கத்தக்கதாக உள்ளது. ஆனால் சசூருக்குக் குறிப்பானும் குறிப்பீடும் முழுமையாக 'உளவியல்' சார்ந்தவையாக இருந்தன(சசூர் 1983, 12, 14-15, 66; சசூர் 1974, 12, 15, 65-66). இரண்டுமே வடிவங்கள்தான் சாரங்களல்ல.
மொழியியல் குறி, ஒரு பொருளுக்கும் அதன் பெயருக்கும் இடையிலுள்ள இணைப்பு அல்ல, மாறாக ஒரு கருத்துக்கும் அதன் ஒலிக்கும் பாங்கிற்கும் இடையிலுள்ள இணைப்பாகும். ஒலிக்கும் பாங்கு வெறும் ஒலி அல்ல; உடலியல் சார்ந்து வரும் ஒலியாக இருப்பது அல்ல. ஒலியைக் கேட்பவரின் புலன்கள் தரும் நிரூபணத்தால் உருவாகும் உளவியல் கருத்துப்பதிவாகும். இந்த ஒலிப் பாங்கை 'பொருளியல்' உறுப்பாகக் கருதுவதற்குக் காரணம் அது நமது கேட்கும் திறனின் பிரதிபலிப்பாக இருப்பதால்தான். இந்த மற்றொரு உறுப்பு பொதுவாக, புலனாகாதத் தன்மை கொண்டது:அதுதான் கருத்து(சசூர் 1983, 66; சசூர் 1974,66).
சசூர் மொழியியல் குறி(சொல் என்று குறிப்பிடலாம்) மீது அதிகக் கவனம் செலுத்தினார். மேலும் அவர் வாய்மொழிச் சொல்லை முக்கியத்துவப்படுத்தி கூறியது, 'ஒலி மையம்' என்று குறிப்பிடும் தனிப்பட்ட ஒலி பிம்பம் (ஒலிப் பாங்கு) என்பதாகும். அதனால் எழுத்து முறையில் இருப்பதைத் தனிப்பட்டதாக இரண்டாம் நிலையில் பிற குறியியல் அமைப்புடன் ஒப்பிடத்தக்கதாகக் கூறுகிறார்(சசூர் 1983, 15, 24-25, 117; சசூர் 1974, 15, 16, 23-24, 119).

எழுத்துக் குறிகளின் அமைப்பைப் பொறுத்தவரையில்(தனிப்பட்டது), ஓர் எழுத்துக்குறிய குறிப்பான் மொழியின் அடிப்படை குறி அமைப்பின் ஒலியைக் குறிக்கிறது.(இதனால் எழுதப்பட்டச் சொல்லும் ஒலியாகவே கருதப்படும் அது தனிப்பட்ட கருத்து அல்ல). அதனால் சசூரைப் பொறுத்தவரை, எழுத்து பேச்சைக் குறிப்பதால் குறிப்பானும் குறிப்பீடும் அதன் அடிப்படையிலேயே அமையும். சசூரின் மாதிரியை ஏற்ற அவருக்குப் பின் வந்த கோட்பாட்டாளார்கள் மொழியியல் குறிகளை, பேச்சாகவோ அல்லது எழுத்தாகவோ குறிப்பதை ஏற்றுக் கொண்டனர். சசூருக்குப் பின்னான குறியின் 'புதிய பொருளியல்சார்' தன்மையைப் பற்றி பின்னர் விளக்கப்படும்.

குறியியல்-அறிமுகம்-20(மொழிபெயர்ப்பு)

சசூரிய மாதிரியை ஏற்பவர்கள் குறிப்பீட்டைப் பொறுத்தவரை, அதை இன்னும் உளக்கட்டமைப்பாகவே கருதுகிறார்கள், ஆனாலும் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் அதை உலகத்தின் பொருள்களை மறைமுகமாக சுட்டும் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள். சசூர் கூறும் குறியின் மூல மாதிரி 'சுட்டுதலைக் குறிக்கும்': உலகத்தில் இருக்கும் பொருள்களைச் சுட்டாமல் உள்ளதாகும். அவரது குறிப்பீடு நேரடியாக ஒரு சுட்டும் பொருளைக் குறிப்பதாகக் கொள்ளாமல் உளவியல் கருத்தாகக் கொள்ளப்படுகிறது-பொருள் அல்ல பொருள் பற்றிய கருத்து. சிலர் சசூர் கூறும் குறியின் மாதிரி ஏன் ஒரு பொருளைக் குறிக்காமல் கருத்தைக் குறிக்கிறது என்று நினைக்கிறார்கள். சுஜேன் லேங்கர் அவதானித்த ஒரு கருத்து(சசூரிய கோட்பாட்டைக் குறிப்பதல்ல) இங்குப் பயனுள்ளதாக இருக்கும். தற்கால விமர்சகர்கள் பலரைப் போல் லேங்கர் 'குறியீடு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார், (இதை சசூர் தவிர்த்திருக்கிறார்):'குறியீடுகள் தாங்கள் குறிக்கும் பொருகள்களுக்கு மாற்றாக வருபவை அல்ல மாறாக பொருள்களைப் பற்றிய கருத்தாக்கத்திற்கான கருவிகள்..பொருள்களைப் பற்றிப் பேசுகையில் அவற்றின் கருத்தாங்கங்கள்தான் இங்குக் குறிப்பிடப்படுகின்றன...அந்தப் பொருள்களே அல்ல;கருத்தாக்கங்களைத்தான் குறியீடுகள் நேரடியாகக் குறிப்பிடுகின்றன அந்தப் பொருள்களை அல்ல. கருத்தாக்கங்களைக் குறித்த பாங்கு என்பதைத்தான் சொற்கள் தூண்டுகின்றன; அதுதான் சிந்தனை என்ற அடிப்படைச் செயல்பாடு.' அவர் மேலும் கூறுகிறார், 'நான் 'நெப்போலியன்' என்று கூறினால் ஐரோப்பாவை வென்றெடுத்த ஒரு பேரரசனனாக நான் அறிமுகப்படுத்தினேன் என்று நீங்கள் தலைவணங்குவதில்லை மாறாக அந்த அரசனைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள்.'(லேங்கர் 1951, 61).

எனவே சசூரைப் பொறுத்தவரை மொழியியல் குறி என்பது முழுமையாக பொருளியல் பண்பற்றது-இருந்தாலும் அதை அவர் 'அரூபம்' என்று குறிப்பிட விரும்பவில்லை(சசூர் 1983, 15; சசூர் 1974, 15). சசூர் கூறும் குறியின் பொருளியலற்ற அம்சமானது வெகுமக்கள் சார்ந்த விளக்கங்களில் புறந்தள்ளப்படுகிறது. இந்தக் கருத்து வினோதமாக இருந்தால் சொற்களுக்கு மதிப்பில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்-அதாவது அவற்றின் சுயமதிப்பு. ஒரு நாணயத்தில் அதன் உலோகம் அதன் மதிப்பை நிர்ணயிக்கவில்லை என சசூர் குறிப்பிடுவது நினைவுகூறத்தக்கது(சசூர் 1983, 117, சசூர் 1974, 118). இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேலும், பொருளியலற்ற அம்சத்துடன் இருப்பதால் மொழியானது அசாதாரணமான கட்டுப்பட்ட ஊடகமாக இருப்பதுடன் சொற்கள் எப்போதும் பொருளைத் தர ஆயத்தமாக இருப்பவையாக உள்ளன. இத்துடன், குறியின் பொருளியல் அம்சத்தைப் பற்றிய மறுமதிப்பீடு குறித்து ஒரு கோட்பாட்டு ரீதியான விவாதம் உருவாக்கப்படக்கூடும். இது பற்றி பிறகு பார்க்கலாம்.

குறியியல்-அறிமுகம்-21(மொழிபெயர்ப்பு)

குறிப்பான் மற்றும் குறிப்பீடு என்ற சொற்களின் தேர்வு மூலம் 'ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காட்டும் வேறுபாட்டை'ச் சுட்டிக்காட்ட முடிகிறது என சசூர் குறிப்பிட்டார்(சசூர் 1983,67; சசூர் 1974, 67). இத்துடனும், குறியின் வரைபடத்தில் இருக்கும் கிடைக்கோட்டுடனும், சசூர் ஒலியும் சிந்தனையும்(அல்லது குறிப்பானும் குறிப்பீடும்) ஒரு தாளின் இரு பக்கங்கள் போல் பிரிக்க முடியாதவை என்று சசூர் வலியறுத்தினார்(சசூர் 1983, 111; சசூர் 1974, 113). அவை மூளையில் 'நெருங்கிய தொடர்பை' 'ஒரு தொடர்புச் சங்கிலிபோல்' கொண்டிருக்கின்றன-'ஒன்று மற்றொன்றைத் தூண்டுவதாக' உள்ளன என்றார்(சசூர் 1983, 66; சசூர் 1974, 66).

இந்தக் கூறுகள் முழுமையாகச் சுதந்திரமானவை என்றும் ஒன்று மற்றொன்றுக்கு முந்தி இருப்பதில்லை என்றும் சசூர் விளக்குகிறார்(சில்வர்மேன் 1983, 103). வாய்மொழிப் பேச்சில் ஒரு குறி உணர்வற்ற ஒலியாகவோ அல்லது ஒலியற்ற உணர்வாகவோ இருக்கமுடியாது. அவர் இரு அம்புக்குறிகளை அவற்றின் பரிமாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தினார். வரம்பும் எதிர் அம்பும் குறிப்பானும் குறிப்பீடும் ஆய்வு நோக்கங்களில் தெளிவாக விளக்கப்படுவதைக் குறிக்கின்றன.

பின் அமைப்பியல் கோட்பாட்டாளர்கள் சசூரிய குறி மாதிரியில் உள்ள கிடைக்கோடான வரம்பைத் தெளிவான பிளவாக-குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள பிளவாகக் காட்டுவதாக விமர்சித்தார்கள்; அவர்கள் அதை மங்க வைத்து அல்லது அழித்து குறி அல்லது அமைப்பியல் உறவின் புதிய வடிவத்தை உருவாக்க விரும்பினார்கள். சில கோட்பாட்டாளர்கள், 'குறிப்பான் எப்போதும் குறிப்பீட்டிலிருந்து தனித்திருக்கும்...அது தனக்குரிய சுயச்சார்பைக் கொண்டிருக்கிறது' என்றும் விவாதித்தார்கள்(லெக்ட், 1994, 68), இந்தக் குறிப்பு குறியின் இடுகுறித் தன்மை பற்றியதாக இருக்கிறது. அதைப் பின்னர் விவாதிக்கலாம்.

பொதுப்புத்தியின் படி குறிப்பீடு முன்பே இருப்பது போலவும் குறிப்பானுக்கு முன்பே இருப்பது போலவும் தோன்றுகிறது:'உணர்வை பார்த்துக்கொள்ளவேண்டும்,' என்றார் லூயிஸ் கரோல், 'ஒலிகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும்(ஆலிஸின் விந்தை உலகத்தில் சாதனைகள், இயல் 9) என்றும் கூறுகிறார். இருந்தாலும், சசூருக்குப் பிந்தைய கோட்பாட்டாளார்கள் குறிப்பானுக்கு உள்ளார்ந்த முக்கியத்துவம் தரும் மாதிரியாக சசூரின் மாதிரியைப் பார்த்தது பொதுபுத்தியின் நிலைப்பாட்டுக்கு நேரெதிராக இருந்தது.

லூயி ஹெல்ம்ஸ்லெவ், 'வெளிப்பாடு' மற்றும் 'உள்ளடக்கம்' என்ற சொற்களைக் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் முறையே பயன்படுத்தினார்(ஹெல்ம்ஸ்லெவ் 1961, 47எஃப்எஃப்). குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடு சில சமயங்களில் 'வடிவம் மற்றும் உள்ளடக்கம்' என்ற பிரபலமான இரட்டையுடன் இணையாக்கப்படும். அது போன்ற கட்டமைப்பில் குறியின் வடிவமாகக் குறிப்பானும் உள்ளடக்கமாகக் குறிப்பீடும் பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், வடிவம் என்பதற்குரிய உருவகமான 'பாத்திரம்' என்பது சிக்கலைத் தரும், ஏனெனில் பொருள் என்பதற்கு நிகராக உள்ளடக்கம் இருப்பதால் அதனை ஆதரிப்பதாக இருக்கும். இது 'விளக்கம் தருவதற்கு முனைந்தச் செயல்பாடிலில்லாமல்' பொருளைப் 'பிரித்தறிய' உதவும் என்றும் அதனால் வடிவம் பொருளாம்சம் தருவதல்ல என்றும் அர்த்தம் கொள்ளப்படக்கூடும்(சாண்ட்லர் 1995 104-6).

முறையான, பொதுவான, அரூபமான அமைப்பின் பகுதியாக உள்ளதில் பொருள் கொடுப்பவையாகக் குறிகள் இருப்பதாக சசூர் விவாதிக்கிறார். பொருள் கொள்ளுதல் குறித்த அவரது கருத்தாக்கம் குறித்தலாக்கத்தைவிட முழுமையாக அமைப்பாக்கம் மற்றும் உறவாக்கம் சார்ந்தது:பொருள்களுக்குக்(குறிகளின் பொருளானது அவற்றிற்கிடையே உள்ள உறவின் அமைப்பிலிருந்துதான் பெறப்படுகிறது மாறாக குறிப்பான்களின் உள்ளார்ந்த அம்சங்களிலிருந்தோ அல்லது ஸ்தூலமான பொருள்களிலிருந்தோ அல்ல) கொடுப்பதைவிட உறவுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவமும் கொடுத்தார். சசூர் குறிகளை 'சாராம்சம்' அல்லது உள்ளார்ந்த இயல்பின் அடிப்படையில் விளக்கவில்லை. சசூரைப் பொறுத்தவரை, குறிகள் ஒன்றையொன்று குறிப்பிடுகின்றன. மொழி அமைப்புக்குள் 'எல்லாமே உறவுகளின் மீது சார்ந்திருக்கிறது'(சசூர் 1983, 121; சசூர்  1974, 122).

எந்த ஒரு குறியும் சுயமான பொருளைத் தருவதில்லை மாறாக மற்ற குறிகளுடனான உறவின் மூலம்தான் பொருளைத் தருகிறது. குறிப்பானும் குறிப்பீடும் முழுமையாக உறவுநிலை மையங்கள்(சசூர் 1983 118; சசூர் 1974, 120). இந்தக் கருத்து புரிந்துகொள்வதற்கு சிரமமானது ஏனெனில் உதாரணமாக ஒரு தனிப்பட்ட சொல்லான 'மரம்' என்ற சொல் நமக்கு ஒரு பொருளைத் தருகிறது, ஆனால் அது பயன்படுத்தப்படும் சூழலில் உள்ள மற்ற சொற்களோடு உள்ள உறவின் அடிப்படையில்தான் அதன் பொருள் விளக்கம் பெறுகிறது.

ஒரு தனிப்பட்ட குறி, குறிப்பான் மற்றும் குறிப்பீடுடன் 'செங்குத்தான' தொடர்பு கொண்டிருப்பதோடு(இரண்டு அமைப்பியல் 'தளங்கள்') குறிகளுக்கு இடையிலுள்ள உறவு என்பது வலியுறுத்தப்படுவதால் அது இரு தளங்களைப் பற்றி விளக்குகிறது-அதாவது குறிப்பான் மற்றும் குறிப்பீடு என்பதாக. பின்னர், லூயி ஹெல்ம்ஸ்லாவ் இந்தத் தளங்களை 'வெளிப்பாடு' என்றும் 'உள்ளடக்கம்' என்றும் குறிப்பிடுகிறார்(ஹெல்ம்ஸ்லாவ் 1961, 60).

சசூர் ஒலி மற்றும் சிந்தனையை இரு வேறுபட்ட ஆனால் உறவுள்ள தளங்களாகக் குறிப்பிடுகிறார். 'மொழி என்பதைப் பல உட்பிரிவுகளாக பதிவு செய்யப்படுவதில் தெளிவற்ற, உருவமற்ற சிந்தனை(அ) என்ற ஒரு தளமாகவும் அதற்கு சமமான அம்சங்களற்ற ஒலி(ஆ) மற்றொரு தளமாகவும் நாம் கற்பனை செய்யமுடியும்' என்கிறார்(சசூர் 1983, 110-111; சசூர் 1974, 112).

குறியியல்-அறிமுகம்-23(மொழிபெயர்ப்பு)

இந்தப் பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் முதல் படத்தில் இருப்பது போல குறிகளில் காணப்படும் இந்த இரண்டு தளங்களின் தொடர்களுக்கு இடையிலான இடுகுறி பிளவு, புள்ளியிட்ட செங்குத்துக் கோடுகளாலும் அலை போன்ற(இணை கோடுகளாக அல்ல) விளிம்புகளால் 'தெளிவற்ற' திரள்களாலும் குறிப்பிடுவது 'இயல்பான' இணக்கம் அவைகளுக்கு இடையே இல்லை என்பதையே. இந்த இரண்டு தளங்களுக்கு இடையேயுள்ள இணக்கமற்ற நெருக்கமற்ற பொருத்தம் அவைகளின் சுயச்சார்புள்ள உறவை முன்னிலைப்படுத்துகிறது. சசூர் 'உண்மை' என்பதைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடாமல் இருப்பதில் கவனமெடுக்கிறார். ப்ரெடரிக் ஜேம்சன் சசூரின் இந்த அமைப்பைப் பற்றி குறிப்பிடுகிறார். 'தனிப்பட்ட சொல்லோ அல்லது வாசகமோ இயல் உலகின் பொருளையோ அல்லது நிகழ்வையோ 'குறிக்க' அல்லது அவற்றிற்குப் பதிலாக நிற்க உதவுகின்றன என்று கொள்வதை விட குறிகளின் முழுமையான அமைப்பு, மொழிக்கிடங்கின் முழுமையான அமைப்பு, உண்மைக்கு இணையாக இருக்கிறது; அதாவது மொழி அமைப்பின் முழுமையாக இருக்கிறது, வேறு வகையில் சொன்னால், உண்மை உலகில் எத்தகைய ஒழுங்கான அமைப்புகள் உள்ளனவோ அவற்றிற்கு இணையாக இருக்கிறது, அதனால் நம்முடைய புரிதல் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்வதற்குப் பதில் ஒரு முழுமையிலிருந்து அல்லது பகுதியிலும் முழுமையைப் பார்ப்பதிலிருந்து மற்றொன்றுக்குச் செல்கிறது(ஜேம்சன் 1972, 32-33).

குறியின் 'மதிப்பாக' சசூர் குறிப்பிடுவது அமைப்புக்குள் உள்ள மற்ற குறிகளுடன் இருக்கும் உறவு பற்றியதாகும்-ஒரு குறி இந்தச் சூழலிலிருந்து தனிப்பட்டு 'அறுதி'யான மதிப்பைக் கொண்டிருப்பதில்லை(சசூர் 1983, 80, சசூர் 1974, 80). சசூர் இதை செஸ் விளையாட்டை ஒப்புமைப்படுத்தி விளக்குகிறார். அதில் செஸ் கட்டங்களில் இருக்கும் வரைதான் எந்த ஒரு காயும் மதிப்பைப் பெறுவதை அவர் ஒப்பிடுகிறார்(சசூர் 1983, 88; சசூர் 1974, 88). குறி அதன் உறுப்புகளின் கூட்டுத் தொகையை விட அதிகமானது. குறித்தலாக்கம்-அதாவது அது குறிப்பது-தெளிவாக அதன் இரு உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டது, குறியின் மதிப்பு அமைப்புக்குள் மற்ற குறிகளுடன் அது கொண்டிருக்கும் உறவைப் பொறுத்தே முழுமையாகத் தீர்மானிக்கப்படுகிறது(சசூர் 1983 112-113, சசூர் 1974 114).

குறியியல்-அறிமுகம்-24(மொழிபெயர்ப்பு)

மதிப்பு என்பதன் கருத்து...குறியை ஒலிக்கும் கருத்துக்கும் இடையிலுள்ள கூட்டிணைப்புக்கு மேல் எதுவும் இல்லை எனக் கருதும் பிழைதான். இதனால் குறியை அது சார்ந்திருக்கும் அமைப்பிலிருந்து விலக்குவதைத் தவிர வேறெதுவுமில்லை. தனிப்பட்ட குறிகளைக் கொண்டு ஒரு தொடக்கம் செய்வதாகக் கொண்டு அவற்றை ஒன்றிணைத்து அமைப்பு கட்டமைக்கப்படலாம். மாறாக, அமைப்புதான் முழுமையான தொடக்கப்புள்ளியாகவும், அதிலிருந்து ஆய்வுச் செயல்பாட்டின் மூலம் அதன் உறுப்புகளை அடையாளப்படுத்துவது சாத்தியம்(சசூர் 1983, 112, சசூர் 1974, 1974, 113).
உதாரணமாக குறித்தலாக்கத்திற்கும் மதிப்புக்கும் இடையிலுள்ள வேறுபாடு பற்றி சசூர், 'பிரெஞ்சு மொழியில் 'மூட்டன்' (ஆடு) என்பதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் 'ஷீப்' என்ற சொல் அதே பொருளைக் கொடுக்கலாம்; ஆனால் அதே மதிப்பைக் கொண்டதாக இருக்காது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன, ஆனால் குறிப்பாக ஆங்கிலத்தில் இந்த விலங்கின் கறிக்கு, சமைத்துப் பறிமாறப்படும்போது 'ஷீப்' என்றில்லாமல் 'மட்டன்' என்று வழங்கப்படுகிறது. 'ஷீப்' என்ற சொல்லுக்கும் 'மூட்டன்' என்ற சொல்லுக்கும் இடையிலுள்ள மதிப்பின் வேறுபாடு எதில் இருக்கிறது என்றால் ஆங்கிலத்தில் அதன் கறிக்கு வேறு சொல்லான 'மட்டன்' என்று வழங்கப்படுகிறது ஆனால் பிரெஞ்சில் 'மூட்டன்' என்ற சொல்லே விலங்கையும் அதன் கறியையும் குறிக்கிறது' என்கிறார்(சசூர் 1983 114, சசூர் 1974, 115-116).

சசூரின் பொருளாம்சம் குறித்த உறவு பற்றிய கருத்து குறிப்பாக வேறுபாட்டின் அடிப்படையிலானது:அவர் குறிகளுக்கு இடையிலான வேறுபாட்டை வலியுறுத்தினார். மொழி என்பது அவரைப் பொறுத்தவரை வேறுபாடுகள் மற்றும் மாறுபாடுகள் கொண்ட அமைப்பாகும். 'மொழியில் மற்ற எல்லா குறியியல் அமைப்புகளில் உள்ளது போலவே, குறியை எது வேறுபடுத்துகிறதோ அதுவே அதை கட்டமைக்கவும் செய்கிறது'(சசூர் 1983, 119; சசூர் 1974, 121).

'ஒரு சொல் மொழி என்பது சாத்தியமற்றது ஏனெனில் ஒரு சொல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் எதையும் வேறுபடுத்திக் காட்டாது;மேலும் மற்றொரு சொல் இருந்தால்தான் அதற்கு விளக்கம் கொடுக்கமுடியும்' என்கிறார் ஜான் ஸ்ட்டராக்(ஸ்ட்டராக் 1979, 10). விளம்பரங்கள் இந்தக் கருத்துக்கு நல்ல உதாரணங்களாக இருக்கும், ஒரு விளைபொருளை 'நிலைப்படுத்த' முதன்மையாக இருப்பது எதுவெனில் அந்தப் பொருளை விளம்பரம் செய்யும் குறிப்பான்களுக்கும் இயல் உலகத்தில் அவைக் குறிப்பிடுகிற பொருளுக்கும் இருக்கக்கூடிய உறவால் அல்லாமல், அந்தப் பொருளுடன் உறவுகொண்ட ஒவ்வொரு குறியும் மற்றொரு குறியுடன் கொண்டிருக்கும் வேறுபாடுதான் முதன்மையாக இருக்கிறது.

சசூர் கூறும் குறிகளின் உறவுநிலை அடையாளம் என்ற கருத்து அமைப்பியல் கோட்பாட்டின் மையமாக இருந்தது. அமைப்பியல் ஆய்வு, வரலாற்றின் ஒரு கட்டத்தில் குறிநிலை அமைப்பின் செயல்பாட்டில் இருந்த அமைப்பியல் உறவு குறித்ததாக இருந்தது. 'உறவுகள் எதைப் பற்றி விளக்குகின்றனவோ அதனால் முக்கியத்துவம் பெறுகின்றன:பொருளாம்ச வேறுபாடுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இணைவுகள்,' என்கிறார் கல்லர்(கல்லர் 1975, 14).

சசுர் குறிகளுக்கு இடையேயுள்ள எதிர்மறையான, மாறுபடும் வேறுபாடுகளை வலியுறுத்தினார். அமைப்பியல் ஆய்வில் உள்ள முக்கிய உறவுகள் எதிர் இணைகள் எனப்படுபவை(உதாரணமாக இயற்கை/கலாச்சாரம், வாழ்வு/சாவு). 'கருத்துக்கள்...அவற்றின் உள்ளடக்கத்தை வைத்து நேர்மறையாக விளக்கப்படுவதில்லை, மாறாக எதிர்மறையாக அதே அமைப்பில் உள்ள பிற சொற்களின் மாறுபாட்டை வைத்து விளக்கப்படுகின்றன. பலவற்றின் குணாம்சங்களாக இருப்பவை மற்றவற்றின் குணாம்சங்களாக இல்லாதவையாக உள்ளன' என்கிறார் சசூர்(சசூர் 1983, 115; சசூர் 1974, 117).

இந்தக் கருத்து முதலில் விபரீதமான மாயத்தைக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் நம் மொழி பேசாத ஒருவருக்கு நம் மொழியைக் கற்றுத் தருகையில் எதிர்மறை வேறுபாடு குறித்த கருத்து தெளிவாகப் புரியவைக்கிறது என்பதை அறியலாம். உதாரணமாக 'சிகப்பு' என்ற சொல்லைத் தெளிவாகக் குறிப்பிட அந்த நிறத்தில் உள்ள பல்வேறு பொருட்களை எளிமையாகச் சொல்லிவிடலாம்-ஆனால் அதே போன்ற பொருட்களை வேறு ஒரு நிறத்தில் இருப்பதைக் காட்டும் போது 'சிவப்பு' என்ற சொல்லின் பொருளைப் புரிய வைப்பது எளிதாக இருக்கிறது.

குறியியல்-அறிமுகம்-26(மொழிபெயர்ப்பு)

சசூர் பேச்சுமொழியைக் கவனப்படுத்தினாலும், எழுத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'எழுத்துக்களின் மதிப்பு முழுமையாக எதிர்மறையாகவும் வேறுபாட்டை ஒட்டியதாகவும்' உள்ளது-ஓர் எழுத்திலிருந்து மற்றொரு எழுத்தை வேறுபடுத்துதான் நாம் செய்யவேண்டியதாக உள்ளது'(சசூர் 1983 118; சசூர் 1974 119-120). எதிர்மறை வேறுபாடுகளை சசூர் வலியறுத்தும் அதே வேளையில், குறிப்பானும் குறிப்பீடும் தனிப்பட்ட முறையில் முழுமையாக வேறுபாட்டையும் எதிர்மறையையும் கொண்டதாக இருப்பினும், ஒரு குறிக்கு இணையாக வரும் போது நேர்மறைச் சொல்லாகின்றன என்கிறார். அவர் மேலும் கூறும் போது, 'ஒரு குறியை மற்றொரு குறியுடன் நேர்மறை இணைவாக ஒப்புமைப்படுத்துகையில் வேறுபாடு என்ற சொல்லை விட்டுவிடவேண்டும்..இரண்டு குறிகள் ஒன்று மற்றொன்றுடன் வேறுபடுவதில்லை மாறாக தனிப்பட்டு மட்டுமே இருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று எதிராக இருக்கின்றன. ஒட்டுமொத்த மொழி அமைப்புமே இத்தகைய எதிர்மையையும் அவை உள்ளடங்கும் ஒலியையும் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டும் இருக்கிறது'(சசூர் 1983 119, சசூர் 1974, 120-121).

குறிப்பானைப் பயன்படுத்துபவர்கள் அது குறிப்பீட்டைக் 'குறிப்பதற்காக' வரும் என்று கூறினாலும் சசூரிய குறியியலாளர்கள் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையில் அவசியமான, உள்ளார்ந்த, நேரடியான அல்லது தவிர்க்கமுடியாத உறவு இல்லை என்று வலியுறுத்துகிறார்கள்(சசூர் 1983 67, 78; சசூர் 1974, 67, 78).-மிகவும் குறிப்பாக குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள தொடர்பு இடுகுறித் தன்மை வாய்ந்தது.

அவர் மொழியியல் குறிகள் பற்றிய கவனம் எடுத்தார். காரணம் மொழியே முக்கியமான குறியியல் அமைப்பாக சசூர் கருதினார். சசூருக்கு மொழியின் முதன்மைக் கோட்பாடு குறியின் இடுகுறித் தன்மையாகும்(சசூர் 1983, 67; சசூர் 1974, 67)-இடுகுறித் தன்மை என்பதை சார்ல்ஸ் ஹாக்கெட் பின்னர் மொழியின் முக்கிய 'வடிவ அம்சம்' என்று அடையாளப்படுத்தினார்(ஹாக்கெட் 1958; ஹாக்கெட் 1960; ஹாக்கெட் 1965). இடுகுறித் தன்மை எனும் அம்சம் மொழியின் அசாதாரண பல நோக்குப் பயன்பாட்டிற்குக் காரணமாக அமைந்தது(லியான்ஸ் 1977, 71).

இயற்கையான மொழியின் சூழலில், குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையில்-ஒலிக்கும் அல்லது எழுத்தின் வடிவத்திற்கும் அது குறிப்பிடும் கருத்திற்கும், உள்ளார்ந்த, அத்தியாவசியமான, 'வெளிப்படையான', தெளிவான அல்லது 'இயற்கையான' தொடர்பு எதுவும் இல்லை(சசூர் 1983, 67, 68-69, 75, 111, 117; சசூர் 1974, 67, 69, 76, 113, 119).

குறியியல்-அறிமுகம்-27(மொழிபெயர்ப்பு)

சசூரே இடுகுறித்தன்மையையும் மொழியுடன் இயல் உலகத்துடன் இருக்கும் தொடர்பையும் உறவுபடுத்துவதைத் தவிர்த்தாலும் அவருக்குப் பின் வந்தவர்கள் எப்போதும் உறவை ஏற்படுத்துகிறார்கள். மேலும் அதில் தெளிவான கருத்தான 'குறிப்பீட்டிற்கு'ப் பின்னணியில் ரகசியமாக உண்மையில் இருப்பது சசூரின் இயல்-உலகத்தின் குறிப்புகளுடைய சங்கேதங்களாக இருப்பவையே(கவர்ட் & எல்லீஸ் 1977, 22). மொழியில் குறைந்தபட்சம், குறிப்பானின் வடிவம் அது எதைக் குறிக்கிறதோ அதனால் தீர்மானிக்கப்படவில்லை:'மரம்' என்ற சொல்லில் மரத்தின் குணாம்சம் எதுவும் இல்லை. மொழிகள் மாறுபடும், ஒரே குறிப்பைச் சொல்வதற்குப் பல வகைமைகள் இருக்கின்றன. எந்த ஒரு குறிப்பிட்ட குறிப்பானும் மற்ற குறிப்பான்களோடு ஒப்பிடுகையில் 'இயற்கையாக' ஒரு குறிப்பீட்டுடன் இணைந்திருக்கவில்லை; எந்த ஒரு குறிப்பானும் எந்த ஒரு குறிப்பீட்டையும் குறிக்கமுடியும் என்பதே கோட்பாடு.

'எந்த ஒரு ஒலிக் கோவைகளுடனும் எந்த ஒரு கருத்தையும் இணைப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை' என்று சசூர் அவதானிக்கிறார்(சசூர் 1983 76; சசூர் 1974, 76); 'ஒரு குறிப்பிட்ட ஒலிக் குறிப்புடன் ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தொடர்புபடுத்தும் செயல்பாடு முழுமையாக இடுகுறித் தன்மை வாய்ந்தது' என்கிறார் (சசூர் 1983, 111, சசூர் 1974, 113).

மொழியியல் குறியின் இடுகுறித் தன்மை கோட்பாடு மூலமுதலானதல்ல:'எந்த ஒரு மொழியின் ஒலியும் அது குறிக்கும் பொருளுக்கும் இயற்கையான தொடர்பு இல்லை' என்று அரிஸ்டாட்டில் கூறியிருப்பதை ரிச்சர்ட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்(ரிச்சர்ட்ஸ் 1932, 32). ப்ளேட்டோ எழுதிய 'க்ரெடைலஸ்'ஸில் 'எந்த ஒரு பொருளுக்கும் கொடுக்கப்படும் பெயர் சரியானது;அந்தப் பெயரை விடுத்து வேறு பெயரை மாற்றும் போது அது பொருத்தமில்லாமல் போகலாம், நாம் வேலைக்காரர்களின் பெயரை மாற்றுவது போல;என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு பெயரும் இயற்கையாகவே அந்தப் பொருளுக்குரியதல்ல என்றே நினைக்கிறேன்' என்று ஹெர்மோஜீன்ஸ் சாக்ரடிஸிடம் கேட்பது போன்ற ஒரு வசனம் உள்ளது'(ஹாரிஸ் 1987, 67).

'ரோஜா என்று எதை அழைத்தாலும் அது இனிமையான வாசம் தரும்' என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டார். மொழியின் இடுகுறித்தன்மை புதிதல்ல, ஆனால் சசூர் அதை வலியுறுத்திய கோட்பாடு அசலான பங்களிப்புள்ளது, குறிப்பாக சுட்டும் பொருளைக் குறித்த கோட்பாடு. சசூர் பேச்சை முன்னிலைப்படுத்தினாலும் அவர் 'எழுத்தில் பயன்படும் குறிகளும் இடுகுறித் தன்மை வாய்ந்தவை, உதாரணமாக 'க' என்ற எழுத்து அது குறிப்பிடும் ஒலியுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை' என்கிறார்(சசூர் 1983, 117, சசூர் 1974 119).

குறியியல்-அறிமுகம்-28(மொழிபெயர்ப்பு)
இடுகுறித் தன்மை கோட்பாட்டை குறிக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த குறி அமைப்புக்குமே பொருத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு மொழியும் வெவ்வேறு வகையான வித்தியாசத்தை இரு குறிப்பான்களுக்கு(உதாரணம் 'மரம்' மற்றும் 'மறம்' இடையிலும் இரு குறிப்பீட்டுக்கு(உதாரணம் 'மரம்' மற்றும் 'செடி') இடையிலும் கொண்டிருப்பதைக் கவனித்தால் மொழியின் அடிப்படை இடுகுறித் தன்மை வெளிப்படையாக விளங்கும். உண்மை, ஓர் இசைவான தொடரன் என்று உணர்ந்தால் குறிப்பீடு இடுகுறித் தன்மை வாய்ந்தது என்பது தெளிவாகும் (சிந்தனைக்கும் ஒலிக்கும் இடையில் வேறுபடுத்த முடியாத எல்லையை சசூர் இப்படித்தான் கண்டார்):உதாரணமாக, ஒரு 'மூலை' எங்கு முடிவடைகிறது?

உலகத்தில் இருக்கும் பொருள்கள் நாம் எளிமையாக 'முத்திரை'('பெயரிடும்' கருத்தாக இருப்பதை சசூர் முன்பே மறுத்துவிட்டார். அதை பிறகு பார்க்கலாம்) குத்துவதற்கு முன்பே அவை இருக்கின்றன என பகுத்தறிவு சுட்டிக்காட்டுகிறது. 'சொற்கள் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வேலையைச் செய்வதாக, கருத்துகள் வருவதற்கு முன்பே நிலைப்படுத்தப்படிருந்தால், ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் இடையில்  கருத்துகளுக்கு நிகரான சொற்களைக் கண்டடைந்திருக்க முடியும். ஆனால் அது அப்படி இல்லை' என்று சசூர் குறிப்பிடுகிறார்(சசூர் 1983 114-115, சசூர் 1974, 116).
உண்மை என்பதை இடுகுறித் தன்மையின் வகைமைகளாக ஒவ்வொரு மொழியும் பிரித்திருக்கிறது மேலும் நாம் நன்றாக அறிந்தக் கருத்துக்களின் உலகத்தை இன்னும் பல வகையில் பிரித்திருக்கிறது. உண்மையில் எந்த இரு மொழிகளும் உண்மையை ஒரே வகைமையில் வைக்கவில்லை. 'மொழிகள் வேறுபட்ட வகையில் வேறுபடுத்துவதால் வேறுபடுகின்றன' என்று ஜான் பாஸ்மோர் கூறுகிறார்(ஸ்டர்ரக், 1986, 17).
மொழியியல் வகைமைகள் உலகத்திலுள்ள முன்பே கட்டமைக்கப்பட்ட ஏதோ ஓர் அமைப்பின் எளிமையான விளைவுகளல்ல. 'இயற்கை'யான கருத்துகளோ அல்லது வகைமைகளோ இல்லை, அவை எளிமையாக மொழியில் 'பிரதிபலிப்பதும்' இல்லை. மொழி 'உண்மையைக் கட்டமைக்க' முக்கியமான பங்கை ஆற்றுகிறது.
குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையில் இடுகுறித் தன்மை இருப்பதை ஏற்றுக் கொண்டால் குறிப்பீடு குறிப்பானால் தீர்மானிக்கப்படுகிறதே அன்றி அதற்கு நேர்மாறானதாக இல்லை என்று பகுத்தறிவின் எதிர்வாதமாக முன்வைக்கப்படும். உண்மையில், பிரெஞ்சு உளவியலாளர் ஜாக் லக்கான், சசூரியக் கோட்பாட்டை உள்ளடக்கி, குறிப்பானின் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தி சசூரிய மாதிரியை பாதி-அல்ஜீப்ரா குறிபோல் S(குறிப்பானைக் குறிப்பது) என்றும் சிறிய s(குறிப்பீட்டைக் குறிப்பது)என்றும் எழுதி அவை இரண்டும் ஓர் இடைக்கோட்டால், வரம்பால் பிரிக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்(லக்கான், 1977, 149).

குறியியல்-அறிமுகம்-29

குறிப்பீட்டைக் கட்டுப்படுத்தும் நம்முடைய முயற்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் லகானுடைய இந்த நோக்கம், குறிப்பீடு, குறிப்பானுக்குப் 'பின்னால் மறைந்து' போவது பற்றி வலியுறுத்துவதற்குப் பொருத்தமாக உள்ளது. சசூரின் ஒலி மற்றும் கருத்தைக் குறிக்கும் படத்தைப் பற்றி லகான், 'ஆதியாகமத்தில் உள்ளப் பிரதிகளில் காணப்படும் மேல் கீழாக ஓடும் அலை கோடுகள் போன்ற நீரின் போக்கைக் காட்டும் மிகச்சிறிய வடிவங்களைப் போல் இருப்பதாக' கவிதையின் வர்ணிப்பைப் போல விளக்குகிறார். இது 'குறிப்பீடு தொடர்ந்து குறிப்பானுக்குப் பின்னால் தொடர்ந்து மறைந்துகொண்டே போவதைக் காட்டுவதாகச் சொல்கிறார்.-அதாவது மேலிருந்து வரும் புள்ளிக் கோடுகள் 'தொடர்புகளின் பகுதிகளாக'க் கருதப்படக்கூடாது என்றும் ஆனால் 'நங்கூரப் புள்ளி'களாகக் கருதப்படவேண்டும்(உதாரணமாக, இருக்கைகளுக்குப் போடப்படும் உறைகளிலுள்ள 'பொத்தான்'களைப் போல்)என்றும் லக்கான் விவாதிக்கிறார்.

இருந்தாலும், இந்த மாதிரி, ஒரு நேர்க்கோட்டில் இருப்பதாகவும் ஏனெனில், 'இந்த விளைவைக் கொண்டிராத எந்த ஒரு குறிப்பாக்கம் செய்யும் சங்கிலியும் இல்லை, அதன் ஒவ்வொரு கண்ணியிலும் இணைக்கப்பட்ட குறியீடுகள் போல, அந்த 'நங்கூரப் புள்ளியிலிருந்து 'செங்குத்துக்' கோட்டில் தகுந்த குறிப்பாக்கும் சூழல்கள் தொங்குவதாக'  அவர் குறிப்பிடுகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 154). சசூரின் மாதிரியின் உத்வேகத்தில் உருவான லக்கானிய மாதிரிக்குப் பின்னர் வந்த கோட்பாட்டாளர்கள் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள இணைப்பு தற்காலிகமானது என்றும் 'குறிப்பான்களின் சங்கிலி'யை 'பொருத்துவது' என்பது சமூகத்தால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் வலியுறுத்துகின்றனர்(கோவர்ட்&எல்லிஸ் 1977. 6, 13, 17, 67).
லக்கான் குறிப்பானைக் குறிப்பீட்டின் மீது வைத்ததன் நோக்கம் தெளிவாகப் புரிவதற்கு அவருடைய பிரதிநிதித்துவ உத்தி பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது, ஏனெனில் மரபான மார்க்சியவாதிகளின் சமூக மாதிரி வழக்கம்போல் '(தொழில்நுட்ப-பொருளாதார) அடித்தளத்தின்' அடிப்படை செலுத்தும் விசை (தர்க்கப்பூர்வமாக), '(கருத்தாக்கத்தின்) மேற்கட்டுமானத்திற்கு'க் கீழ் தான் உள்ளது.






குறியியல்-அறிமுகம்-29(மொழிபெயர்ப்பு)

மொழியின் சுதந்திரத்துடன் உண்மையை தொடர்புபடுத்துவது குறித்து முன்வைப்பதால் குறியின் இடுகுறித் தன்மை என்பது ஒரு தீவிரமான கருத்தாகிறது. சசூரிய மாதிரி, மொழி அமைப்பின் உள்ளார்ந்த அமைப்புகள் பற்றி வலியுறுத்துவதால் அது மொழி என்பது உண்மையை 'பிரதிபலிப்பத'ல்ல மாறாக அதைக் 'கட்டமைப்பது' என்ற கருத்தை ஆதரிக்கிறது. மொழியை 'அது உலகத்தில் என்னவாக இல்லை என்பதையும் என்னவாக உள்ளது என்பதையும் சொல்லப் பயன்படுத்தலாம். உலகத்தை நாம் எந்த மொழியில் பிறந்திருந்தாலும் அந்த மொழி மூலம் அறிந்துகொள்வதால், உண்மை மொழியைத் தீர்மானிக்கிறது என்று விவாதிப்பதைவிட உண்மையை மொழி தீர்மானிக்கிறது என்று விவாதிப்பது சரியானதுதான் என்கிறார் ஸ்ட்டராக்(ஸ்ட்டராக் 1986, 79).

'பொருளின் பொருள்' என்ற நூலில் ஆக்டன் மற்றும் ரிச்சர்ட்ஸ், 'குறிகள் எதற்காக இருக்கின்றனவோ அவற்றை முழுமையாக உதாசீனப்படுத்திவிட்டதாக' சசூரை விமர்சிக்கிறார்கள்(ஆக்டன் & ரிச்சர்ட்ஸ் 1923, 8). சமூகச் சூழலிலிருந்து விலகி இருப்பதாகப் பின்னர் பல விமர்சகர்களும் சசூரின் மாதிரி பற்றி அதிருப்தி தெரிவித்தார்கள்(கார்டினர் 1992, 11). 'சுட்டும்பொருளை கவனப்படுத்துவதால்' சசூரிய மாதிரி 'பிரதியை வரலாற்றிலிருந்து' அறுத்தெறிவதாக ராபர்ட் ஸ்டாம் விவாதிக்கிறார்(ஸ்டாம், 2000, 12). இந்த விவாதத்தை 'உணர்தலும் வெளிப்பாடும்' என்ற தலைப்பில் பின்னர் விவாதிப்போம்.
குறிகளின் இடுகுறித்தன்மை அவற்றின் விளக்கத்தைத் தெளிவுபடுத்த உதவுகிறது(சூழலின் முக்கியத்துவமும்). குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையில் ஒன்றுக்கொன்று இணைப்பு இல்லை;குறிகள் ஒரே பொருளை அல்லாமல் பலப் பொருளைக் கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட மொழியில் ஒரு குறிப்பான் பல குறிப்பீடுகளைக் குறிக்கும்(உதாரணம் சிலேடை) மேலும் ஒரு குறிப்பீடு பல குறிப்பான்களால் குறிக்கப்படும்(உதாரணம், பல பொருள் விளக்கம்). மொழியில் குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள உறவு எப்போதும் முழுமையாக இடுகுறித் தன்மை வாய்ந்தது என்று கூறுவதைப் பல விமர்சகர்கள் விமர்சிக்கிறார்கள்(லூயிஸ் 1991, 29).


இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர்கள் போன்ற சொல்லும் பொருளும் ஒரே விதமாக இருக்கும் சொற்கள் இந்தச் சூழலில் உதாரணங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் பல குறியியலாளர்கள் வெவ்வேறு மொழிகளில் ஒரே ஒலி கொடுக்கும் பல சொற்கள் வேறுபட்டிருக்கின்றன என்று விமர்சிக்கிறார்கள்(விலங்குகளின் ஒலிகள் இங்கு நினைவுகூறத்தக்கவை)(சசூர் 1983 69; சசூர் 1974, 69). 'மொழியியல் அமைப்பு முழுமையாக, குறி என்பது இடுகுறித் தன்மை வாய்ந்தது என்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது' என்று சசூர் அறிவித்தார். இந்தத் தூண்டும் அறிவிப்புப் பற்றியும் 'இந்தக் கோட்பாடு தடையற்றுப் பயன்படுத்தப்பட்டால் அது தாறுமாறான குழப்பங்களுக்கு வழிகோலும்' என்று உடனடியாக சசூர் விளக்கம் அளித்தார்(சசூர் 1983, 131; சசூர் 1974 133).

மொழியியல் குறிகள் முழுமையாக எல்லா வகையிலும் இடுகுறித் தன்மை வாய்ந்தவை என்றால் மொழி ஓர் அமைப்பாக இல்லாமல் அதன் தொடர்புறுத்தும் செயல்பாடு அழிக்கப்படும். 'எந்த ஒரு மொழியும் இருக்காது அதில் எதுவுமே உந்துதல் பெறாது' என்று ஒப்புக்கொள்கிறார்(மேற்குறிப்பிட்ட நூல்). 'ஒரு மொழி முழுமையாக இடுகுறித் தன்மை வாய்ந்ததாக இருக்காது, அமைப்பு ஒரு நிலையான பகுத்தறிவைக் கொண்டிருக்கும்' என்று சசூர் ஒப்புக்கொள்கிறார்(சசூர்  1983, 73; சசூர் 1974, 73).

சொல்லின் வடிவம் தற்செயலானது அல்லது சீரற்றது என்று இடுகுறித் தன்மை கோட்பாடு பொருள் அளிக்கவில்லை. குறி மொழியியலுக்கு வெளியே தீர்மானிக்கப்படவில்லை மொழியியலுக்குள்ளே அதன் பொருள் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆய்வு செய்யும் மொழியின் இயல்பான மாதிரிக்குள் தான் குறிப்பான்கள் முழுமையான ஒலிகளிலான இணைகளை உருவாக்குகின்றன என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், உதாரணமாக பெயர்ச்சொலான 'திருப்புளி' என்பது முழுமையாக இடுகுறித் தன்மை வாய்ந்ததாக இல்லை, ஏனெனில் புழக்கத்தில் இருக்கும் இரு குறிகளின் பொருளாம்சம் வாய்ந்த இணையாக இந்தச் சொல் இருப்பதை அறியமுடிகிறது.



சசூர் இடுகுறித் தன்மையில் இருக்கும் வேறுபட்ட தளங்களை அறிமுகப்படுத்தினார்:மொழிக் குறியின் இடுகுறித் தன்மை பற்றிய அடிப்படைக் கோட்பாடு, உள்ளுறைந்த இடுகுறித் தன்மையையும் அதாவது உந்துதலற்ற ஒன்றையும் ஒப்பீட்டளவில் இடுகுறித் தன்மை கொண்டிருப்பதையும் மொழிக்குள் வேறுபடுத்தத் தடைவிதிப்பதில்லை. எல்லா குறிகளும் முழுமையாக இடுகுறித் தன்மையைக் கொண்டிருப்பதில்லை.

சில குறிகள், முழுமையாக அந்தக் கருத்திலிருந்து விடுபடாமல் இருந்தாலும் இடுகுறித் தன்மையின் பல்வேறு தளங்களை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கின்றன. ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறி, உந்துதல் கொண்டிருக்கலாம்(சசூர் 1983, 130, சசூர் 1974, 131;). சசூர் 'ஒப்பீட்டளவில் இடுகுறித் தன்மை' கொண்டிருக்கும் குறிகள் பற்றி தனது நிலைப்பாட்டைச் சற்று மாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின் வந்த சில கோட்பாட்டாளர்கள்(அல்தூஸரிய மார்க்சிய சொற்பிரயோகத்தில்) குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலான உறவை 'சுயச்சார்பு ஒப்பீடு' என்று குறிப்பிடுகிறார்கள்(டேக் 1988, 167; லெக்ட் 1994, 150). குறிப்பானுக்கும் குறிப்பீடுக்கும் இடையிலான மரபார்ந்த உறவுகளின் ஒப்பீட்டை அடுத்துப் பார்க்கலாம்.

குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலான உறவுகளை அரூபமான இருப்பின் இடுகுறித்தன்மை என்று குறிப்பிடுகையில்(தத்துவார்த்தமாக, இந்த அம்சங்களின் நிலைப்பாட்டில் எந்த வேறுபாட்டையும் அது கொண்டுவராவிட்டாலும் உதாரணமாக 'கறுப்பை' 'வெள்ளை' என்றே குறிப்பிடுவதும் அல்லது நேர்மாறாகக் குறிப்பிடுவதையும் குறிப்பிடலாம்)குறித்தலாக்கம் செய்யும் அமைப்புகள் சமூக அல்லது வரலாற்று ரீதியாக இடுகுறித்தன்மை வாய்ந்தவை என்று பொருளல்ல.

மோர்ஸ் குறிப்பீடு போல இயற்கையான மொழிகள் இடுகுறித் தன்மையால் நிலைநாட்டப்படுவதில்லை. குறியின் இடுகுறித் தன்மை சமூக ரீதியாக 'நடுநிலை' அல்லது பொருளியல் ரீதியாக 'வெளிப்படையான'தாக ஒரு குறியை உருவாக்குவதில்லை, உதாரணமாக, மேற்கத்திய கலாச்சாரத்தில் 'வெள்ளை' என்பது தனிச்சலுகை பெற்றிருப்பதைப் போல் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்(டயர் 1997). போக்குவரத்து விளக்குகளில் 'இடுகுறித் தன்மை' வாய்ந்த நிறங்களை எடுத்துக் கொண்டால், 'நில்' என்பதைக் குறிக்கும் சிவப்பு நிறத்தின் தேர்வு முழுமையாக இடுகுறித் தன்மை வாய்ந்ததாக இல்லை, ஏனெனில் அது முன்பே அபாயம் என்ற அம்சத்துடன் உறவு கொண்டிருக்கிறது.

குறியியல்-அறிமுகம்-32(மொழிபெயர்ப்பு)

லெவிஸ்ட்ராஸ் குறிப்பிட்டது போல கருத்தை அறிவதற்கு முன்பான நிலையில்(சிந்தனைக்கு முன்பான நிலையில்) இடுகுறித் தன்மையுடன் இருக்கும் குறி கருத்தை தர்க்கப்பூர்வமாக அறிந்ததற்குப் பின் இடுகுறித் தன்மையுடன் இருப்பதில்லை-அதாவது வரலாற்று இருப்பில் குறி வந்த பிறகு இடுகுறித்தன்மையால் அது மாற்றப்பட முடியாததாகிவிடுகிறது என்பதை சசூர் சுட்டிக்காட்டுகிறார்(லெவிஸ்ட்ராஸ் 1972, 91).

ஒரு சங்கேதக் குறியீட்டுக்குள்(இந்தச் சொல் சசூருக்குப் பின்னால் வந்த குறியியலாளர்களிடம் அடிப்படையான ஒன்றாக மாறிவிட்டது) சமூகப் பயன்பாட்டின் பகுதியாக, ஒவ்வொரு குறியும் ஒரு வரலாற்றையும் அந்த குறியைப் பயன்படுத்தும் கலாச்சாரத்திற்குரிய பருப்பொருளுக்கு அப்பாற்பட்ட உய்த்துணரும் பொருள்களையும் சேகரித்து அடைகிறது. மொழியியலின் சமூகத்தில் குறிப்பான் 'சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தோன்றினாலும்,' அது 'சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அல்லாமல் திணிக்கப்பட்டதாகவே இருக்கும்,' ஏனெனில் 'மொழி கடந்தகாலத்தின் வழிவழியாக வருவது' என்பதால் அதனைப் பயன்படுத்துபவர்கள் 'வேறு வாய்ப்பில்லாமல் ஒப்புக்கொள்ள மட்டுமே செய்கிறார்கள்,' என்கிறார் சசூர்(சசூர் 1983 71-72, சசூர் 1974, 71).

உண்மையில் 'மொழியியல் குறி இடுகுறித் தன்மையுள்ளது என்பதால் அதற்கு மரபார்ந்த விதிகளைத் தவிர வேறெதும் தெரியாது என்றும் அது மரபின் அடிப்படையில் உருவானது என்பதால் அது இடுகுறித் தன்மை கொண்டுள்ளது என்றும்' சசூர் அதற்கான காரணத்தை விளக்குகிறார்(சசூர் 1983 74; சசூர் 1974 74).

இடுகுறித் தன்மை கோட்பாடு ஒரு குறிப்பான் ஒரு குறிப்பீட்டை இடுகுறித் தன்மையில் தேர்ந்தெடுக்கும் என்று சொல்லவில்லை. குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள உறவு தனிப்பட்ட தேர்வால் உருவானதல்ல;அப்படி ஆகியிருந்தால் தொடர்புறுத்தம் சாத்தியமற்றதாகிவிடும். 'எந்த ஒரு தனிநபரும் மொழியியல் சமூகத்தில் நிறுவப்பட்ட குறியை எந்த வகையிலும் மாற்றியமைக்க முடியாது' என்கிறார் சசூர்(சசூர் 1983, 68; சசூர் 1974, 69).

மொழியைப் பயன்படுத்தும் தனிநபர்களின் அணுகுமுறையிலிருந்து சொன்னால் மொழியானது 'தரப்பட்டது'-நமக்கான அமைப்பை நாம் உருவாக்குவதில்லை. சசூர்  ஒரு தனிநபர் பிறக்கும் மொழி அமைப்பை எந்த ஒரு பேரமமுற்ற 'ஒப்பந்தமாக'க் குறிப்பிடுகிறார்(சசூர் 1983 14; சசூர் 1974, 14).-ஆனாலும் பின்னர் அவர் அந்தச் சொல்லைச் சிக்கலுக்குரியதாக மாற்றிவிட்டார்(மேற்குறிப்பிட்ட நூல், 71). அரூபமான இடுகுறித் தன்மை கொண்டிருக்கும் அந்தச் சொல் நமக்கு வெளித்தெரியாமல் இருப்பதால் அதை நாம் 'இயற்கையானது' என்று கற்க ஒப்புக்கொள்கிறோம்.

குறியியல்-அறிமுகம்-33(மொழிபெயர்ப்பு)

குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள உறவு மரபார்ந்தது-சமூக, கலாச்சார மரபுகளைச் சார்ந்தது என்று குறிகளின் இடுகுறித் தன்மை சசூரிய பாரம்பரியத்தில் வந்த குறியியலாளர்களைச் சொல்லவைத்தது. சசூர் கவனமெடுத்த மொழியியல் குறிகள் பற்றி இது தெளிவாக விளக்கியது:நாம் கூட்டாக ஒரு சொல் நமக்கு என்ன செய்கிறது என்பதை ஒத்துக்கொள்வதால் அந்தச் சொல்லின் பொருள் விளக்கம் பெறுகிறது. 'அமைப்புகளின் முழு குழுவும் குறியின் இடுகுறித் தன்மையில் அடிப்படையாக இருக்கிறது' என்பதே முதன்மை கவனமாக இருப்பதை சசூர் உணர்ந்தார்.

'குறித்தலாக்கத்தின் சீர்மையான செயல்பாட்டை முழுமையாக இடுகுறித் தன்மையுள்ள குறிகள் விளக்குவதைப் போல் பிற குறிகள் விளக்குவதில்லை. மிகவும் சிக்கலான எல்லா வெளிப்பாட்டு அமைப்புகளிலும் பரவலாக இருக்கும் மனித மொழிகளுக்குள் இருக்கின்ற இடுகுறித்தன்மை எல்லா அமைப்புகளிலும் இருப்பதற்கு உதாரணமாக விளங்குகிறது. முழு குறியியலுக்கும் மொழியியல் ஒரு மாதிரியாக விளங்குகிறது, மொழி குறியியல் அமைப்பில் ஒரு வகை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்,' என சசூர்(சசூர் 1983, 68; சசூர் 1974, 68) விவாதிக்கிறார்.

அவர் பேச்சு மொழியும் எழுத்தும் தவிர வேறு பல குறி அமைப்புகளை உதாரணமாகக் காட்டவில்லை. காதுகேளாத, வாய்பேசாதவர்களுக்கான எழுத்து முறை; சமூக சடங்குகள்; நடத்தை; மத மற்றும் பிற குறியீட்டுச் சடங்குகள்; சட்ட செயல்பாடுகள், ராணுவ குறிகள் மற்றும் கப்பலின் கொடிகள் போன்றவற்றைப் பற்றி அவர் விளக்கியிருக்கிறார்(சசூர் 1983, 15-17; சசூர் 1974, 16-17, 68, 73).

'சமூகத்தில் எந்த ஒரு வெளிப்பாட்டு வகைமையும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அது கூட்டுப் பழக்கமாக அல்லது மரபாக-அதே பொருள் தருவதாக இருப்பதனால்தான்' என சசூர் கூறுகிறார்(சசூர் 1983, 68; சசூர் 1974, 68). சொற்கள் போன்ற முழுமையாக மரபார்ந்த குறிகள் அது சுட்டும் பொருள்களிலிருந்து சுதந்திரமாக இருந்தாலும், மரபை அதிகம் சாராத குறிகள் சுட்டும் பொருள்களிலிருந்து சுதந்திரமாக இருப்பதில்லை.
எனினும், மொழியியல் குறியின் இடுகுறித் தன்மை தெளிவாக இருப்பதால், சசூரிய மாதிரியை ஏற்பவர்கள், 'குறிகள் இயற்கையானவையாகக் கொண்டு பயன்படுத்துபவர்கள் அவற்றின் உள்ளார்ந்த பொருளாகவும் எந்த ஒரு விளக்கமும் தேவையில்லாதவையாகவும் அவற்றைக் கொண்டுவிடுவது ஒரு தவறாகிவிடுகிறது'(கல்லர் 1975, 5).

சசூர் குறிக்கான மாதிரியையும் 'குறியியல்'(சிமியாலஜி) பற்றியும் அமைப்பியல் முறைமையையும் உருக்கிக் கொண்டிருந்த அதே வேளையில் அட்லாண்டிக் கடலின் மற்றொரு புறமும் தன்னிச்சையாக இது போன்ற பணிகளை மொழியியல் தத்துவவியலாளரும் தர்க்கவியலாளருமான சார்ல்ஸ் சேண்டர்ஸ் பர்ஸும் தனது சுயமான குறிக்கான மாதிரியையும் 'குறியியல்(சிமியாட்டிக்) பற்றியும் குறிகளுக்கான பல்வேறு வகைமைகளையும் உருவாக்கிக்கொண்டிருந்தார். சசூரின் குறி மாதிரியில் இருக்கும் 'தன்னிறைவான இருமை' வடிவத்திலிருந்து மாறுபட்டு மும்மை மாதிரியை முன்வைத்தார்:
சுட்டும் பொருள்:குறி எடுக்கும் வடிவம்(பொருளியல் ரீதியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை)
விளக்கம்:விளக்கமளிப்பது என்ற பொருளில் அல்லாமல் குறி தரும் உணர்வு
பொருள்:குறி சுட்டும் பொருள்.
'ஒரு குறி...(வடிவம் எடுக்கும் சுட்டுப் பொருள்)ஏதோ ஒன்றிற்காக ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட வகையில் இருப்பது. ஒருவருக்கு அது அவருடைய அறிவில் அதற்கு இணையான ஒரு குறியை உருவாக்குவது அல்லது வளர்ந்த ஒரு குறியை உருவாக்குவது. அந்தக் குறிதான் முதலில் இருக்கும் குறியின் விளக்கம் என்பது. இந்தக் குறி ஏதோ ஒன்றிற்காக அதன் பொருளாக இருப்பது. இந்தப் பொருளைக் குறிக்கும் வகையில் இருந்தாலும் எல்லா வகையிலும் அல்லாமல் ஒரு கருத்தைக் குறிப்பதாக, சுட்டும் பொருளின் ஒரு பின்னணியைக் குறிக்கும் அடிப்படையைச் சொல்வதாகக் கொள்ளமுடியும்' என்கிறார் பர்ஸ்(பர்ஸ் 1931-58, 2.228). சுட்டும் பொருள், விளக்கம், பொருள் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு 'குறித்தல்' என்று பர்ஸ் கூறுகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 5.484). அவருடைய குறி மாதிரிக்குள்: முச்சந்தியில் இருக்கும் ஒரு போக்குவரத்து சிவப்பு விளக்கு(சுட்டும் பொருள்); வாகனங்கள் நிற்பது(பொருள்) மற்றும் சிவப்பு விளக்கின் கருத்து சொல்வது வாகனங்கள் நிற்கவேண்டும் என்பதாக உள்ளது(விளக்கம்).

குறியியல்-அறிமுகம்-35(மொழிபெயர்ப்பு)

பர்ஸின் குறி மாதிரி பொருள் அல்லது விளக்கும் பொருளைக் கொண்டிருக்கிறது, இந்த அம்சம் சசூரின் குறி மாதிரியில் இல்லை. சுட்டும் பொருள் என்பது சசூரின் குறிப்பானை ஒத்திருக்கிறது. பொருள் என்பது குறிப்பீட்டை ஒத்திருக்கிறது(சில்வர்மேன் 1983, 15). இருந்தாலும் விளக்கம் என்பது குறிப்பீட்டின் தன்மையாக இல்லை. அதுவே ஒரு குறியாக விளக்குபவரின் மனதில் இருக்கிறது.

'ஒரு குறி....ஒருவருக்கு, அந்தக் குறிக்கு சமமான ஒரு குறியை அவருடைய மனதில் உருவாக்குகிறது அல்லது அதைவிட வளர்ச்சி அடைந்த ஒரு குறியை உருவாக்குகிறது. அந்தக் குறி முதலாவதாக இருக்கும் குறியின் விளக்கம் என்று கருதுகிறேன்,' என்கிறார் பர்ஸ்(பர்ஸ் 1931-58, 2.228). இதன் விளைவைப் பற்றிச் சொல்லும் போது(இதைப் பற்றி பர்ஸ் நன்றாக அறிந்திருந்தார்) அது தொடர்ச்சியாக பல விளக்கச் சொற்களை எல்லையில்லாமல் உருவாக்கிக் கொண்டே போகும் என்பதைக் குறிக்க( உம்பர்த்தோ எகோ 'எல்லையில்லா குறித்தலாக்கம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 1.339, 2.303).

வேறொர் இடத்தில், 'விளக்கத்தின் பொருள் விளக்கத்தைத் தவிர வேறெதுவாகவும் இருக்காது' என்றும் கூறுகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 1.339). எந்த ஓர் தொடக்க நிலை விளக்கமும் மறு விளக்கத்திற்கு உட்படுகிறது. ஒரு குறிப்பீடே குறிப்பானின் பங்கையும் ஆற்றுகிறது என்பது ஒருவர் ஒரு சொல்லின் பொருளை அகராதியில் தேடினால் மூல விளக்கத்திலிருந்து மற்றொரு சொல்லை விளக்கமாக தருவதை வைத்து இதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கருத்து குறியின் மதிப்பு என்பது அது மற்றொரு குறிகளோடு கொண்ட உறவை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது என்று சசூர் வலியுறுத்தியதை மீறிச் செல்வதையும் அதன் பின் பல பின்அமைப்பியல் கோட்பாட்டாளர்கள் அதனைத் தீவிரத் தன்மையோடு வளர்த்ததையும் பார்க்க முடிந்தது.

மற்றொரு கருத்து பர்ஸின் மாதிரிக்குள் மறைந்திருப்பது பின்னர் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது சசூரின் மாதிரியில் வெளிப்படையாக தவிர்க்கப்பட்டது எது என்றால் உரை பற்றிய சிந்தனை. 'குறித்தலாக்கம்' என்ற செயல்பாடு பற்றி பர்ஸுடைய வலியுறுத்தல், சசூரின் அமைப்புப் பற்றிய மொழியியலின் அவ்வப்போதைய தன்மை குறித்த வலியுறுத்தலிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது(பர்ஸ் 1931-58 5.484, 5.488).

குறியியல்-அறிமுகம்-36(மொழிபெயர்ப்பு)

'எல்லாச் சிந்தனைகளும் உரையின் வடிவிலானவை. ஒருவருடைய சுயம் ஒரு கணத்தில் அவருடைய ஆழமான சுயத்திடம் ஒப்புதலைக் கோருகிறது' என்று பர்ஸ் கூறுகிறார்(பர்ஸ் 1931-58, 6.338). இந்தக் கருத்து மீண்டும் 1920ல் வளர்ச்சி பெற்ற வடிவத்தை மிகைல் பக்தீனின் கோட்பாட்டில் எடுத்தது(பக்தீன் 1981). உள்முக உரையாடல் கூட அடிப்படையில் சமூகவயமானதாக இந்தக் கோட்பாடு கூறுவதுதான் இந்தக் கோட்பாட்டின் முக்கியமான அம்சம்.

பர்ஸ் மும்மை அமைப்பால் பெரிதும் கவரப்பட்டார். அவர் குறியியே(சுட்டும் பொருள்) என்பது 'முதன்மை' என்பதாகவும் பொருள் என்பது 'இருமை' என்பதாகவும் விளக்கம் என்பது 'மும்மை' என்பதாகவும் காரணகாரியத்தின் அடிப்படையில் வேறுபாட்டை முன்வைத்தார். இது போன்ற அதிகம் பயன்படுத்தப்படாத சொற்கள் எல்லாம் பர்ஸின் சொற் கண்டுபிடிப்புகளாக இருந்தன. அவற்றின் சிக்கலான பெயரிடலும் வகைமையும் தனிப்பட்ட பர்ஸிய குறியியலின் பாதிப்பை உருவாக்குவதில் தடைகளாக இருந்தன.
பர்ஸின் முப்பட்டை எப்போதும் 'குறியியல் முக்கோணமாக முன்வைக்கப்படுகிறது(அது மட்டுமே ஒரே வகை மாதிரியாகச் சொல்லப்படுகிறது). அந்த வகைமாதிரி பல வேறுபாடுகளைக் கண்டு பழக்கமற்ற பர்ஸிய சொற்றொடர்களை மாற்றி அமைத்தது(நோத் 1990, 89):
குறி ஊடகம்:குறியின் வடிவம்
உணர்வு:குறியின் உணர்வு
சுட்டும் பொருள்:குறி 'எதற்காக' பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அது.

அதிகம் புகழ்பெற்ற குறியியல் முக்கோணம் ஆக்டன் மற்றும் ரிச்சர்ட்ஸால் உருவாக்கப்பட்டது, அதில் பயன்படுத்தப்பட்டச் சொற்கள் (அ)குறியீடு, (ஆ)சிந்தனை அல்லது சுட்டுக்குறிப்பு மற்றும் (இ)சுட்டும் பொருள்(ஆக்டன்&ரிச்சர்ட்ஸ், 1923, 14). முக்கோணத்தின் அடிப்பகுதியில் இருக்கும் புள்ளியிடப்பட்ட கோடு குறி ஊடகத்திற்கும் சுட்டும் பொருளுக்கும் வெளிப்படையான அல்லது நேரடியான உறவு இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைக் காட்டுகிறது. சசூரின் அரூபமான குறிப்பீடு போல் அல்லாமல் (ஆ என்ற சொல்லுடன் ஒத்துப் போவதாக அது இருக்கிறது இ-யுடன் இல்லை) சுட்டும் பொருள் என்பது 'பொருள்' என்பதாக விளக்கப்படுகிறது.

குறியியல்-அறிமுகம்-36(மொழிபெயர்ப்பு)
அரூப கருத்துகளிலிருந்தோ புனைவு அம்சங்களிலிருந்தோ இயல் உலகப் பொருளிலிருந்தோ குறிகள் பற்றிய இந்த விளக்கம் தவிர்க்கச் செய்யவில்லை. ஆனால் பர்ஸின் குறி மாதிரி ஒரு புற உண்மைக்கான இடத்தை ஒதுக்கியது அதை சசூரின் மாதிரி நேரடியாகக் கொண்டிருக்கவில்லை((பர்ஸ் அலுப்பூட்டக்கூடிய நடப்பியலாளர் அல்ல ஆனாலும் அவர் எல்லா அனுபவங்களும் குறிகளால் இடையீடு செய்யப்படுவதாக விவாதித்தார்). இருந்தாலும், இங்குக் குறிப்பிட வேண்டியது, 'ஒரு குறிக்கப்படும் பொருளுடைய இருப்பின் சார்பு ஒரு குறிப்பிட்ட குறித்தல் வகைமையைச் சார்ந்திருக்கும்....என்பது உண்மையின் இயல்புக்கு எதிரானது' என்று பர்ஸ் சொல்வதைத்தான்(பர்ஸ் 1931-58, 5.323). பர்ஸின் மாதிரியில் விளக்கும் பொருள் என்பது இருப்பதாலேயே அது சசூரின் மாதிரியை விட சிறந்த ஒன்றாக உடனடியாக ஆகிவிடவில்லை. உண்மையில் ஜான் லியான்ஸ் சொல்வது போல:'இந்தச் சுட்டும் பொருள், விளக்கும் பொருள், பொருள் என்ற இந்த மூன்று கூறுகள் குறித்த மும்மை பற்றிய ஆய்வில் பெரும் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த மாதிரியில் இருக்கும் சுட்டும் பொருள் என்பது இயல்பில் உள்ளதா உளவியலில் உள்ள அம்சமா? விளக்கும் பொருள் என்பதன் உளவியல் அல்லது மொழியியல் தகுதிப்பாடு என்ன?பொருள் என்பது ஒரு குறிப்பிட்டத் தருணத்தில் குறிப்பிடப்படுவதா? அல்லது குறியைச் சொல்கையில் குறிக்கப்படும் ஒட்டுமொத்தப் பொருள்களைப் பற்றியதா...? அல்லது மூன்றாவது சாத்தியமாக, இந்த வகைமையின் வழக்கமான அல்லது பொருத்தமான பிரதிநிதியா?' என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்(லியான்ஸ் 1977, 99). உணர்வு உருவாக்கம் பற்றிய கருத்து(ஒரு விளக்கம் சொல்பவர் இங்கு தேவை-பர்ஸ் அதை தன் மாதிரியில் சேர்க்கவில்லை) தொடர்புறுத்தம் குறித்த கவனத்தைக் கொண்டிருந்தாலும் விளக்கம் பற்றிய செயல்முறையை அழுத்திக் கூறும் ஊடகக் கோட்பாட்டாளர்கள், 'உள்ளுறை' மற்றும் பொருள் என்ற சமநிலையை மறுக்கிறார்கள். இந்தக் கோட்பாட்டாளர்களில் பலர் பயன்படுத்தும் குறியியல் முக்கோணங்களில் குறியின் விளக்குபவர்(அல்லது 'பயனாளி') என்ற அம்சம் வெளிப்படையாக இருக்கிறது('உணர்வு' அல்லது 'விளக்கும் பொருள்' என்பதற்குப் பதிலாக). இது குறித்தலாக்கம் என்ற செயல்பாட்டை முன்னிலைப்படுத்துகிறது(அது பர்ஸிய கருத்து). குறியின் விளக்கம் அதற்குள்ளாகவே அடங்கி இருப்பதில்லை ஆனால் அதன் விளக்கதில் மேலெழும்பி வருகிறது. இருமை அல்லது மும்மை என்ற எந்த மாதிரி பயன்பாட்டில் இருந்தாலும், விளக்கும் ஒன்றின் பங்கு முதன்மையாகப் பார்க்கப்படவேண்டும்-குறியின் முறையான மாதிரியாக இருந்தாலும் அல்லது குறித்தலின் செயல்பாட்டில் அவசியமான பகுதியாக இருந்தாலும் இவ்வாறு பார்க்கப்படவேண்டும்.  

குறியியல்-அறிமுகம்-37(மொழிபெயர்ப்பு)

'பயன்படுத்துபவர்கள் பற்றிய வாசகங்கள், குறிகள் அல்லது சுட்டும் பொருள்கள் போன்ற எதுவுமே ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தனிப்பட்டு உருவாகாது. ஏதாவது ஒன்று பற்றிய ஒரு வாசகம் மற்ற இரண்டை நிச்சயம் கொண்டிருக்கும்,' என்கிறார் ஸ்லெஸ்(ஸ்லெஸ் 1986, 6). சசூரின் இரட்டை மாதிரியிலும் கூட விளக்கம் என்ற அம்சம் மறைமுகமாக இருப்பதை பால் திபால்ட் விவாதிக்கிறார்(திபால்ட், 1997, 184).

குறியியலாளர்கள் குறிக்கும், 'குறி ஊடகத்திற்கும்' வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள்(சசூரைப் பின்பற்றியவர்கள் அதைக் 'குறிப்பான்' என்றும் பர்ஸைப் பின்பற்றியவர்கள் அதை 'சுட்டும் பொருள்' என்றும் கூறுகிறார்கள்). குறி என்பது குறி ஊடகத்தை விட மேலதிகமானது. 'குறி' என்ற சொல் தளர்வாகப் பயன்படுத்தப்படுவதால் இந்த வேறுபாடு எப்போதும் பேணப்படுவதில்லை. சசூரிய மாதிரியில் 'குறி' என்ற சில குறிப்புகள் குறிப்பானைக் குறிக்கலாம், அதே போல் பர்ஸ் பல இடங்களில் 'குறி' என்று பயன்படுத்தியுள்ளார், கறாராகச் சொன்னால் அவர் குறிப்பது 'சுட்டும் பொருள்' என்பதைத்தான். இதைப் பயன்படுத்துவதில் தவறுகள் நேரலாம், ஏனெனில் நாம் குறி எடுக்கும் வடிவத்தை 'தாண்டி' பார்க்கவேண்டியிருக்கிறது. இருந்தாலும், மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள:குறிப்பான் அல்லது சுட்டும் பொருள் என்பது குறி எடுக்கும் வடிவம்(உதாரணமாக பேச்சு அல்லது எழுத்தில் உள்ள சொல்) மாறாக குறி என்பது முழுமையான பொருளைக் கொடுக்கும் ஒட்டுமொத்த கலம்.

ஆனால் சசூர் (மொழியியல்)குறியின் இடுகுறித் தன்மை பற்றி வலியுறுத்தினார் என்றால், பல குறியியலாளர்கள் குறிகள் இடுகுறித்தன்மை/மரபார்ந்த தன்மை(அல்லது அதற்கு முரணாக 'வெளிப்படையானவை')யில் வேறுபடுவது பற்றி வலியுறுத்தினார்கள். குறிபீட்டியல் குறிப்பான்களுக்கும் குறிப்பீடுகளுக்கும் இடையிலான ஒரே ஓர் உறவுமுறை பற்றி மட்டுமே தெளிவுபடுத்துகிறது. சசூர் குறிகளின் பல்வேறு வகைமகளைக் கூறவில்லை ஆனால், சார்ல்ஸ் சேர்ண்டர்ஸ் பர்ஸ் வலிமையான பெயரியலாளர் என்பதால் பல தர்க்க ரீதியான பெயர் வகைமைகளைக் கூறுகிறார்(பர்ஸ் 1931-58, 1.2921, 2.243).

குறியியல்-அறிமுகம்-38(மொழிபெயர்ப்பு)

இருந்தாலும், குறிகள் பற்றி பர்ஸின் பிரிவுகளும் உட்பிரிவுகளும் அசாதாரணமாக விரிவானவை:உண்மையில், அவர் கோட்பாட்டுத் திட்டத்தை வழங்கியதில் குறிகளில் 59,049 வகை இருப்பதாகக் காட்டினார்! பர்ஸ், 'இந்த அளவுக்கான கணக்கீடு பல்கும் வகைமைகளை உருவாக்கும் என்ற அபாயத்தைத் தருவதோடு ஒருவர் மனதில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்காது,' என்றும் வெறுமையுடன் குறிப்பிடுகிறார். மேலும், 'என்னைப் பொறுத்தவரை, இது போன்ற கணக்கீடுகளுக்கான திட்டத்தைத் தேவைப்பட்டாலொழிய செய்யவேண்டாம் என ஒத்திப்போடுவோம்' எனவும் கூறுகிறார்(பர்ஸ் 1931-58, 1.2921).

இருந்தாலும், அவருடைய சாதாரண கோட்பாடுகள் கூட அசரவைக்கின்றன:சுசேன் லேன்கர், 'அவருடைய 59,049 வகைமைகளும் சுருக்கப்பட்டு 66ஆக மாற்றும் அளவுக்கு அவருடைய கோட்பாட்டில் இடமிருக்கிறது(லேன்கர் 1951, 56) என்கிறார். துரதிருஷ்டவசமாக, இந்த சிக்கலான வகைமைகள் பிற ஆய்வாளர்களுக்கு 'அநேகமாகப் பயனில்லாத' செயல்பாட்டு மாதிரிகளைத் தந்தன(ஸ்ட்டராக் 1986, 17).

இருந்தாலும், பர்ஸின் அடிப்படை வகைமைகள்(முதலில் இது 1867ல் மேலோட்டமாகச் சொல்லப்பட்டன) பின்னர் வந்த குறியியல் ஆய்வுகளில் எடுத்தாளப்பட்டன(பர்ஸ் 1931-58, 1.564). அவர் அதை குறிகளுக்கான 'மிகவும் அடிப்படையான' மாதிரி என்கிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 2.275).
இது குறி ஊடகங்களுக்கும் அவற்றின் விளக்கங்களுக்கும் இடையிலான 'உறவுகளின் மாதிரிகள்' வேறுபட்டிருப்பதைச் சொல்வது போல இந்தக் 'குறிகளின் வகைமைகள்' பற்றித் தனிப்பட்ட வேறுபாடுகளாகச் சொல்வதில் அதிகப் பயன் தருவதில்லை(ஹாக்ஸ் 1977, 129).

இந்த இடத்தில் பர்ஸ் 'குறிக்கும்' அதன் பொருளுக்கும் இடையிலுள்ள உறவு பற்றி குறிப்பிட்டிருந்தாலும் சசூரிய சொற்களான குறிப்பான் மற்றும் குறிப்பீடு என்பதே தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் பர்ஸிய வேறுபாடுகள் சசூரிய மாதிரிக்குள்தான் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் பயன்படுத்துவது சசூரின் மாதிரியிலுள்ள குறிப்பீட்டின் குறித்தலாக்கத்திலுள்ள பலத்தை வலியுறுத்துவதாக(மறைமுகமாக) உள்ளதைக் காட்டுகிறது. அடுத்து அதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மூன்று வகைமைகளும் அவற்றின் சுருக்கமான விளக்கங்களும் அவற்றுக்கான உதாரணங்களும் தரப்படுகின்றன.

குறியியல்-அறிமுகம்-39(மொழிபெயர்ப்பு)



குறியீடு/குறியீட்டினாலான:
குறிப்பான், குறிப்பீடை வெளிப்படுத்தாத செயல்வகை, ஆனால் அடிப்படையில் இடுகுறித் தன்மையுடனும் அல்லது முழுமையாக மரபான தன்மையுடனும் இருப்பது-இதனால் அந்த உறவை அறியவேண்டியிருக்கிறது: உதாரணம். பொதுவான மொழி(குறிப்பிட்ட மொழிகள், எழுத்து வரிசைகள், நிறுத்தற் குறிகள், சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாசகங்கள்), எண்கள், செவித் திறனில்லாதவர்களுக்கான குறியீடு, போக்குவரத்து விளக்குகள், தேசியக் கொடிகள்;

பிம்பம்/பிங்களினாலான:குறிப்பான் குறிப்பீட்டை பிரதிபலிப்பதாகவோ அல்லது போலச் செய்வதாகவோ இருக்கும் செயல்வகை(பார்த்தல், கேட்டல், உணர்தல், சுவைத்தல் அல்லது நுகர்தல் போன்ற தெரிந்த சில அம்சங்கள்)-சில ஒற்றுமையான தன்மையுள்ள அம்சங்களைக் கொண்டிருப்பது:உதாரணம், படம், கேலிச்சித்திரம், அளவெடுத்த சிறிய மாதிரிகள், இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர், உருவகங்கள், 'வடிவமைக்கப்பட்ட இசையில்' வரும் 'இயற்கையான' ஒலிகள், வானொலி நாடகங்களில் ஒலிக் கோர்வைகள், திரைப்படத்தில் ஒலிக்கும் டப்பிங் செய்யப்பட்ட ஒலிக்கோர்வை, போலச் செய்யும் பாவனைகள்;

சுட்டு/சுட்டுவன:குறிப்பான் இடுகுறித்தன்மையுடன் அல்லாமல் நேரடியாக குறிப்பீட்டுடன்(பொருளியல்ரீதியாக அல்லது காரணகாரியரீதியாக) தொடர்பு கொண்டிருப்பது-இந்தத் தொடர்பு கவனிக்கப்படக்கூடியது அல்லது ஊகிக்கப்படக்கூடியது:உதாரணம். 'இயற்கையான' குறிகள்(புகை, புயல், காலடித்தடங்கள், எதிரொலிகள், இயற்கையான மணங்கள் மற்றும் சுவைகள்) மருத்துவ அறிகுறிகள்(வலி, சொறி, இதயத் துடிப்பு), கணக்கீடும் அளவைமானிகள்(பருவநிலைமானி, உடல்சூடு கண்டறியும் வெப்பமானி, கடிகாரம், நிலத் தளத்தைக் கணக்கீடும் அளவை), 'சமிக்ஞைகள்'(கதவைத் தட்டும் ஒலி, தொலைபேசி ஒலித்தல்), குறித்தல்கள்(ஏதோ ஒன்றைச் 'சுட்டும்' விரல், ஒரு திசைகாட்டி), பதிவுகள்(புகைப்படம், திரைப்படம், ஒளிஒலிக் காட்சி அல்லது தொலைக்காட்சி படம், ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல்), தனிப்பட்ட 'முத்திரைகள்'(கையெழுத்து, கவர்ச்சி வாசகம்) மற்றும் சுட்டுச் சொற்கள் ('அந்த' 'இந்த' 'இங்கே' 'அங்கே').

குறியியல்-அறிமுகம்-40(மொழிபெயர்ப்பு)
குறியீடு, பிம்பம், சுட்டு இந்த மூன்றும் மரபார்ந்த தன்மையில் அதிகபட்சத்திலிருந்து குறைந்தபட்சம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மொழி(குறைந்தபட்சம்) போன்ற குறியீட்டு குறிகள் அதிகமான மரபு சார்ந்தவை. பிம்பக் குறிகள் ஓரளவு மரபுசார் தன்மையை எப்போதும் கொண்டிருக்கின்றன; சுட்டுக் குறிகள் 'பொருளை நோக்கி குருட்டுத்தனமான நிர்பந்தத்தை செலுத்தி இருக்கும்' என்கிறார் பர்ஸ்(பர்ஸ் 1931-58, 2.306). சுட்டு மற்றும் பிம்ப குறிப்பான்கள், குறிக்கப்படும் குறிப்பீடுகளால் கட்டுப்படுத்தப்படுவதைக் காண முடியும். ஆனால் மரபார்ந்த குறியீட்டு குறிகளில் குறிப்பீடு அதிகபட்சம் குறிப்பானால் விளக்கப்படும். ஒவ்வொரு வகைமைக்குள்ளும் குறிகள் மரபுசார் தன்மையில் வேறுபடுகின்றன. வேறு வகைப்பட்ட அம்சத்தைக் கொண்டு இந்த மூன்றையும் வரிசைப்படுத்தப்படலாம்.
உதாரணமாக ஹாட்ஜ் மற்றும் க்ரெஸ், சுட்டும் தன்மை என்பது முடிவெடுத்தலைச் சார்ந்தது அல்லது ஊகிப்பது ஆனால் பிம்பத் தன்மை என்பது 'நேரடி உணர்தலுக்கு' அருகில் இருப்பது என்பதால் பிம்பக் குறிகளுக்கு உயர்ந்தபட்ச 'செயல்தன்மை'யை உருவாக்குகிறது என்று கூறுகிறார்கள். குறிப்பீடு குறிப்பானைத் தீர்மானிப்பதை 'ஊக்கம்'(சசூர் குறிப்பிடுவது) என்ற சொல்லும் 'கட்டுப்பாடு' என்ற சொல்லும் விளக்குவதை இங்குக் கவனிக்கவேண்டும். குறிப்பீட்டால் குறிப்பான் எந்த அளவு கட்டுப்படுத்தப்படுகிறதோ அந்த அளவு குறி 'ஊக்க'மடைகிறது:பிம்பக் குறிகள் அதிக அளவு ஊக்கமடைந்தவையாக உள்ளன: குறியீட்டு குறிகள் ஊக்கமே அடையாதவையாக உள்ளன. எவ்வளவு குறைவாக ஒரு குறி ஊட்டமடைந்திருக்கிறதோ அந்த அளவு அதிகமான மரபின் ஒத்திசைவை அறியவேண்டியிருக்கிறது. இருந்தாலும், பல குறியியலாளர்கள் மரபின் தன்மைக்கும் குறிக்கும் உள்ள உறவு பற்றி வலியுறுத்துகிறார்கள். புகைப்படங்களும் திரைப்படங்களும் மரபில் கட்டப்பட்டிருப்பதைப் பற்றி நாம் 'அறிய' வேண்டியிருப்பதை நாம் பார்க்கவேண்டும். இது போன்ற மரபுத் தன்மைகள் குறியியலில் முக்கியமான பரிணாமமாக உள்ளது. பர்ஸும் சசூரும் 'குறியீடு' என்ற சொல்லை இருவேறு விதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்காலத்திய பல கோட்பாட்டாளர்கள் மொழியை குறியீட்டு குறி அமைப்பு என்றே குறிப்பிட, சசூர் மொழியியல் குறிகளைக் 'குறியீடுகள்' என அழைப்பதைத் தவிர்த்திருக்கிறார். ஏனெனில் தின வழக்கில் குறியீடு என்பது உதாரணமாக தராசு என்பது(நீதியைக் குறிப்பது) போன்றவற்றைக் குறிக்கிறது. இது போன்ற குறிகள் 'எப்போதும் முழுமையாக இடுகுறித் தன்மை கொண்டவையாக இருப்பதில்லை,' அவை வெற்று கட்டமைப்புகளல்ல' என அவர் வலியுறுத்துகிறார். அவை 'குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இயற்கையான தொடர்பு உள்ளதாகக் குறைந்தபட்சம் வலியுறுத்துகின்றன'-இந்தத் தொடர்பை அவர் 'காரணகாரியம் சார்ந்தது' என்று குறிப்பிடுகிறார்(சசூர் 1983, 68, 73; சசூர் 1974, 68, 73).

குறியியல்-அறிமுகம்-40(மொழிபெயர்ப்பு)

சசூர் மொழியியல் குறியின் இடுகுறித் தன்மை மீது கவனத்தைக் குவித்திருக்கிறார், குறியீட்டு இடுகுறித் தன்மைக்கு வெளிப்படையான உதாரணம் கணிதம். கணிதத்தில் வெளியில் இயங்கும் இயல் உலகத்தைக் குறிக்கவேண்டிய அவசியமே இல்லை:எல்லா குறிப்பீடுகளும் மறுக்கமுடியாத கருத்தாக்கங்களாக இருக்கின்றன மேலும் கணிதம், உறவுகளின் அமைப்பு என்கிறார் லேங்கர்(1951, 28).

'ஒரு குறியீடு என்பது 'பொருளைச் சட்ட முறைப்படி குறிக்கும் ஒரு குறி, அது வழக்கமான பொதுக் கருத்துகளின் ஒருங்கிணைப்பாகவும் அதன் காரணமாகக் குறியீடு பொருளைக் குறிப்பதற்காக சொல்லப்படும் ஒன்றாகவும் உள்ளது' என்கிறார் பர்ஸ்(1937-58, 2.249). குறியீடுகளை 'ஒரு விதி'ப்படியோ அல்லது 'வழமையான தொடர்பின்' மூலமாகவோ நாம் விளக்குகிறோம்(மேற்குறிப்பிட்ட நூல் 2.292, 2.297, 1.369). 'குறியீடு அதன் பொருளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறியீட்டை-பயன்படுத்தும் விலங்கு என்ற கருத்தின் அடிப்படையிலானது, அதைத் தவிர்த்து வேறு எந்தத் தொடர்பும் இருக்காது'(மேற்குறிப்பிட்ட நூல் 2.299).
'இது போன்ற ஒரு குறி பயன்படுத்தப்படுவதையும் புரிந்துகொள்வதையும் வைத்துத்தான் இயல்பாகவோ அல்லது முக்கியமாகவோ கட்டமைக்கப்பட்டிருக்கிறது'(மேற்குறிப்பிட்ட நூல் 2.307). 'அதை விளக்குவதற்கான விளக்கம் இல்லை என்றால் அது தன்னுடைய குணாம்சத்தை இழந்துவிடும்'(மேற்குறிப்பிட்ட நூல் 2.304).

ஒரு குறியீடு என்பது 'ஒரு மரபான குறி அல்லது பழக்கவழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது(பிறப்பிலிருந்தே வருவது அல்லது பிறகு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது)(மேற்குறிப்பிட்ட நூல் 2.297). 'எல்லா சொற்கள், வாசகங்கள், நூல்கள் மற்றும் மரபான குறிகள் எல்லாம் குறியீடுகள்'(மேற்குறிப்பிட்ட நூல் 2.292). சசூரைப் போலவே மொழியியல் குறிகளை மரபுசார் தன்மையுள்ளவையாக வகைப்படுத்துகிறார் பர்ஸ்.

குறியீடுகளின் இடுகுறித்தன்மை பற்றிய நேரடியான அரிய விளக்கத்தில்(அவற்றை அவர் 'அடையாளங்கள்')'அவை பல இடங்களில் மரபானவையாகவும் அல்லது இடுகுறித்தன்மை வாய்ந்தவையாகவும்' உள்ளன என்று குறிப்பிடுகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 3.360).

குறியீடு என்பது ஒரு குறியின் 'அது எதை பிரதிபலிக்கிறதோ அந்தப் பிரதிபலிப்பு பழக்கம், ஒழுங்கமைவு அல்லது செயல்விளைவுடைய பொது விதி போன்றவைத் தவிர வேறெதுவும் விளக்கக்கூடியதாக இருப்பதைப் பொறுத்துத்தான் அதன் தனிப்பட்ட முக்கியத்துவம் அல்லது தகுதி அமைகிறது. உதாரணமாக, 'மனிதன்' என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்று எழுத்துகளும் மனிதனைப் போல் இல்லை; அவற்றின் ஒலியும் அந்த பொருளை ஒலிப்பதில்லை'(மேற்குறிப்பிட்ட நூல் 4.447). மேலும் 'ஒரு குறியீடு..அதன் பொருளுடன் உள்ள ஒற்றுமை அல்லது இணையைப் பொருட்படுத்தாமலும் மேலும் பொருளுடன் இயல்பான தொடர்பைப் பற்றியும் கூட பொருட்படுத்தாமலும் அதன் செயல்பாட்டை நிறைவு செய்கிறது.' ஆனாலும் அது ஒரு குறியாக விளக்கப்படுகிறது(மேற்குறிப்பட்ட நூல் 5.73).

குறியியல்-அறிமுகம்-41(மொழிபெயர்ப்பு)

பிம்பங்களைப் பற்றிப் பார்க்கத் தொடங்கினால் பிம்பக் குறி அதன் பொருளை 'ஒப்புமையின் அடிப்படையில்' மட்டுமே பிரதிபலிப்பதாக பர்ஸ் கூறினார்(பர்ஸ் 1937-58, 2.276). 'ஒரு பொருளைப் போல இருப்பதால் அது குறியாகப் பயன்படுத்தப்படுவது' பிம்பம் எனும் குறியாகும்(மேற்குறிப்பிட்ட நூல் 2.247). உண்மையில் இந்த வகைமைகளை அவர் 'ஒப்புமைகள்' என்று பெயரிட்டிருந்தார்(மேற்குறிப்பிட்ட நூல், 1.558). மேலும் அவர், 'ஒவ்வொரு படமும்(எந்த மரபார்ந்த முறையில் வரையப்பட்டிருந்தாலும்) அது ஒரு பிம்பம்' என்கிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 2.279). பிம்பங்கள் அவைக் குறிக்கும் பொருளைப் 'பிரதிபலிக்கின்றன,' மேலும் அவை 'ஒத்த உணர்வுகளை மனதில் தூண்டுகின்றன' என்கிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 2.299; மற்றும் 3.362). சுட்டு போல் அல்லாமல், 'பிம்பம் அது பிரதிபலிக்கும் பொருளுடன் இயக்க ஆற்றலுள்ள தொடர்பைக் கொண்டிருக்கவில்லை'(மேற்குறிப்பிட்ட நூல்). ஒரு குறிப்பான் ஒன்றைப் பிரதிபலிப்பதால் மட்டுமே அது முழுமையாகப் பிம்பமாக ஆகிப்போகவேண்டிய அவசியமில்லை.
'படம் என்பது ஒரு குறியீடு, அது எதைப் பிரதிபலிக்கிறதோ அதன் நகல் அல்ல' என்று தத்துவவியலாளர் சுஜன் லேங்கர் கூறியிருக்கிறார்.(லேங்கர் 1951, 67). படங்கள் அவை குறிப்பனவற்றை ஒரு சில அம்சங்களில் மட்டுமே பிரதிபலிக்கின்றன. ஒரு பிம்பம் பகுதியளவோ முழு அளவோ ஒப்புமையுடன் இருக்கிறதா என்பதை மட்டுமே அறியத் துணிகிறோம்(மேற்குறிப்பிட்ட நூல் 67-70). 'எல்லாப் படங்களுக்கும் புலன்சார்ந்த பிரதிபலிப்பு அவற்றின் பொருள்களுக்கு இடையே இல்லை எனினும் பகுதி அளவேனும் உறவு கொண்டிருந்தாலே' பிம்பம் என பர்ஸ் குறிப்பிடுகிறார்(பர்ஸ் 1931-58, 2.279). 'பல படங்கள் அவற்றின் பொருள்களுடன் எல்லாத் தோற்றங்களிலும் பிரதிபலிப்பதில்லை; பகுதி அளவே உறவுள்ளவையாகவும் அவை ஒத்தத் தோற்றமுடையவையாக இருப்பது மட்டுமே எடுத்துக்கொள்ளபடுகிறது'(மேற்குறிப்பிட்ட நூல் 2.282). 'உண்மையான' பிம்பம் கூட அது எதைக் குறிக்கிறதோ அதன் படியோ அல்லது நகலோ அல்ல. ஒரு பிரதிபலிப்பை அது எதைப் பிரதிபலிக்கிறோதோ அது எனத் தவறாக் கருதிக்கொள்கிறோம்.

குறியியலாளர்கள் பொதுவாக 'துல்லியமான' பிம்பங்கள் இல்லை என விவாதிக்கிறார்கள்-அதில் கலாச்சார மரபு அம்சம் எப்போதும் உள்ளார்ந்து இருக்கிறது. 'எந்த ஒரு பொருளாம்சம் சார்ந்த பிம்பமும்'(உதாரணமாக ஓவியம்) அது பிரதிபலிக்கும் ஒன்றைப் போல் இருப்பதாக உணரப்படுகிறது, அது 'பிரதிபலிக்கும் வகைமையில் மரபார்ந்ததாகவே பெரிதும் காணப்படுகிறது'(பர்ஸ் 1931-58, 2.276). 'நாம் பார்க்காத ஒருவருடைய படம் நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது. எந்த நபரை அது பிரதிபலிக்கிறதோ அவரைப் பற்றிய ஒரு கருத்தை நாம் உருவாக்கிக் கொள்கிறோம், அது ஒரு பிம்பம். ஆனால், உண்மையில் அது துல்லியமான பிம்பமல்ல, ஏனெனில், மூலத் தோற்றத்தைப் பார்த்து ஓவியரால் உருவாக்கப்பட்ட ஒரு தாக்கத்தின் காரணமான மேலதிக விளைவு என்று நமக்குத் தெரிந்திருக்கிறது...அது தவிர, சில மரபார்ந்த அம்சங்களை விலக்கி, மரபார்ந்த மதிப்பீட்டு அளவுகள் போன்றவற்றினாலும் மூலங்களை ஓரளவே பிரதிபலிப்பவையாக உருவப்படங்கள் உள்ளன'(மேற்குறிப்பிட்ட நூல் 2.92).

குறியியல்-அறிமுகம்-42(மொழிபெயர்ப்பு)

பொதுக் கழிப்பிடத்தின் கதவுகளில் இருக்கும் பிம்பக் குறிகளில் போடப்பட்ட ஆண் படங்கள் ஆண் தன்மை அதிகமாகவும் பெண் தன்மை குறைவாகவும் உள்ளது பற்றி கய் குக் கேள்வி எழுப்புகிறார். 'உண்மையிலேயே ஒரு குறி பிம்பமாக இருக்க, அதைப் பார்த்திராத ஒருவருக்கு வெளிப்படையாக இருக்கவேண்டும்-சில சமயங்களில் இது போல் இருக்கலாம் ஆனால் பல சமயங்களில் அவ்வாறு இருப்பதில்லை. பொருளை அறிந்திருப்பதால் அதனுடைய ஒப்புமையை மட்டுமே நாம் பார்க்கிறோம்'(குக் 1992, 70). அதனால் ஒரு 'இயற்கையான' படம் கூட குறியீடாகவும் பிம்பமாகவும் இருக்கும். குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள தொடர்பு வழமையான பின்பு பிம்ப மற்றும் சுட்டுக் குறிகள் குறியீடுகள் என்பதை விட 'இயற்கையான'வை என பெரும்பாலும் அறியப்படுகின்றன.

பிம்பக் குறிப்பான்கள் அதிகமான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியவையாக உள்ளன. 'ஏனெனில் குறியிலுள்ள பொருளை நாம் பார்ப்பதால், சுட்டு அல்லது குறியீட்டைவிட பிம்பம் உண்மைக்கு மிக அருகில் நம்மைக் கொண்டுவந்துவிட்டதாக நாம் உணர்கிறோம்' என்கிறார் கென்ட் க்ரேசன்(க்ரேசன், 1998, 36).

மேலும், 'பிரதிபலிப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீது நம் கவனத்தை ஈர்க்க, பிம்ப அனுபவங்கள் நம்மை நனவிலி நிலையில் ஊக்குவித்து அந்த இடங்களை நிரப்பி அது போன்ற நிரம்பாத இடங்கள் முன்பே இல்லை என்பது போல் நம்மை நம்பவைக்கின்றன..இதுதான் பிரதிபலிப்பின் முரண்:அது சிறந்த ஒன்றாகக் கருதும் போது அது நம்மை அதிகமாக ஏமாற்றுகிறது'(மேற்குறிப்பிட்ட நூல், 41).

'பிம்பத் தன்மை என்பது வடிவம் வெளிப்படும் ஊடக்கத்தின் அம்சங்கள் மீது அதிமாகச் சார்ந்திருப்பது' என்று மொழியியலாளர் ஜான் லியான்ஸ் குறிப்பிடுகிறார்(லியான்ஸ், 1977, 105). ஆங்கிலத்தில் உள்ள அடுக்குத் தொடர் போன்ற சொல்லான குயில் என்பதை உதாரணமாக அவர் குறிப்பிடுகிறார். அது ஒலி ஊடகத்தில்(பேச்சு) பிம்பமாகவும் வரைபட ஊடகத்தில்(எழுத்தில்) அவ்வாறு இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

ஒலி ஊடகம் ஓசைகளின் அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த(மரபார்ந்த ரீதியில்), வரைபட ஊடகம் வடிவங்களின் அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்(எகிப்திய எழுத்துவடிவங்கள்)என்கிறார் லியான்ஸ்(மேற்குறிப்பிட்ட நூல் 1977, 103).

குறியியல்-அறிமுகம்-43(மொழிபெயர்ப்பு)

குறியின் இயங்கியல் தன்மை குறித்து பின்னர் விவாதிக்கப்படும். சுட்டும் தன்மை அதிகம் பரவலாகாதக் கருத்தக்கம். சுட்டு என்பதைக் கட்டமைக்கும் அம்சங்கள் குறித்து பர்ஸ் பல விளக்கங்களைத் தருகிறார். சுட்டு ஏதாவது ஒன்றை 'அடையாளம்' காட்டும்:உதாரணமாக, 'ஒரு கால எந்திரம் அல்லது கடிகாரம் நாளின் நேரத்தைக் குறிக்கும்'(பர்ஸ் 1931-58, 2.285).

'குறி'க்கும் அதன் பொருளுக்கும் இருக்கும் 'இயல்பான உறவு' பற்றி அவர் குறிப்பிடுகிறார். அது முழுமையாக 'விளக்கம் கொடுக்கும் மனதை'ச் சார்ந்திருப்பதில்லை(மேற்குறிப்பிட்ட நூல் 2.92, 2.98). சுட்டு அதன் பொருளுடன் 'உண்மையான ஒரு காரணத்தில்' இணைந்திருக்கிறது(மேற்குறிப்பிட்ட நூல், 4.447). அது ஓர் 'உண்மையான தொடர்பு'(மேற்குறிப்பிட்ட நூல் 5.75). அது 'நேரடியான ஸ்தூலத் தொடர்பில்' இருக்கலாம்(மேற்குறிப்பிட்ட நூல் 1.372, 2.281, 2.299). ஒரு சுட்டுக் குறி 'பொருளிலிருந்து கிழித்தெறியப்பட்ட ஒரு துண்டு' போல இருப்பது(மேற்குறிப்பிட்ட நூல், 2.231).

பிம்பக் குறி போல் அல்லாமல்(அதன் பொருள் புனைவுத் தன்மையுள்ளதாக இருக்கலாம்) சுட்டு, 'தெளிவாக ஏதோ ஒன்று அல்லது மற்றொன்றிற்காக அல்லது இருக்கும் ஒரு பொருளுக்காக' வந்து நிற்பது(மேற்குறிப்பிட்ட நூல் 4.531). குறிப்பீட்டால் 'உண்மையாகவே பாதிக்கப்பட்டிருக்கும் அதன் குறிப்பானில் 'அவசியமாக சில அம்சங்கள் பொதுவானவையாக இருக்கின்றன'; 'இயல்பான மாற்றம்' அதில் இணைந்திருக்கிறது(மேற்குறிப்பட்ட நூல் 2.248). இந்த உறவு 'வெறும் பிரதிபலிப்பை' அடிப்படையாகக் கொண்டதல்ல(மேற்குறிப்பிட்ட நூல்):'சுட்டுக்கள்...அவற்றின் பொருளுடன் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பைக் கொண்டிருப்பதில்லை(மேற்குறிப்பிட்ட நூல் 2.306). 'ஒப்புமை அல்லது இணை' என்பவை சுட்டை விளக்காது(மேற்குறிப்பிட்ட நூல் 2.305). 'கவனத்தைக் கவரும் எதுவும் சுட்டு ஆகும். எது நம்மைத் திடுக்கிட வைக்கிறதோ அது சுட்டு ஆகும்'(மேற்குறிப்பிட்ட நூல் 2.285; மேலும் 3.434). சுட்டுக் குறிகள் 'மூர்க்கத்தனமான கட்டாயத்தில் அவற்றின் பொருளை நோக்கி கவனத்தைக் குவிக்கும்'(மேற்குறிப்பிட்ட நூல் 2.306; மேலும் 2.191, 2.428). 'உளவியல் பூர்வமாக, சுட்டுக்களின் செயல்பாடு பிரதிபலிப்பு மூலமோ அல்லது அறிவார்ந்த செயல்பாடுகளின் மூலமோ அல்லாமல் நெருங்கி இருத்தலில் அடிப்படையாக உள்ளது'(மேற்குறிப்பிட்ட நூல்).

குறியியல்-அறிமுகம்-44(மொழிபெயர்ப்பு)

புகைப்படமும் ஒரு பொருளைப் பிரதிபலிக்கிறது என்றாலும் பர்ஸ் புகைப்படத்தைப் பிம்பமாக மட்டும் அல்லாமல் சுட்டாகவும் விளக்குகிறார்:'புகைப்படங்கள், குறிப்பாக உடனடி புகைப்படங்கள், போதனை மிக்கதாக இருக்கின்றன ஏனெனில் அவை எந்தப் பொருள்களைப் பிரதிபலிக்கின்றனவோ அவற்றின் சில அம்சங்களைப் போலவே படங்களும் உள்ளன. ஆனால் இந்தப் பிரதிபலிப்பு எதனால் ஏற்படுகிறது எனில் ஒரு குறிப்பிட்டச் சூழலில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இயற்கையானவையாக இருக்க ஒவ்வொரு புள்ளியும் ஸ்தூலமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், அவை, ஸ்தூலமான தொடர்பு கொண்டக் குறிகளின் வகைமைகளில் வருகின்றன(சுட்டு வகைமையில்)' என்கிறார் பர்ஸ்(பர்ஸ் 1931-58, 2.281, மற்றும் 5.554). எனவே இந்தப் பொருளில், புகைப்பட பிம்பம் என்பது புகைப்படத்தின் கரைசல் மீது செலுத்தப்படும் ஒளியின் விளைவாகும். எல்லாத் தொகுக்கப்படாத புகைப்படங்களும் திரைப்பட பிம்பங்களும் சுட்டுகளாகும்(மரபார்ந்த செயல்முறைகள் தொகுத்தல், குவித்தல், கழுவுதல் என்பனவற்றை ஒருங்கிணைத்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). அது போன்ற பிம்பங்கள் உரிய பொருளைப் 'பிரதிபலிக்கும்', புகைப்படம் மற்றும் திரைப்பட பிம்பத்தின் 'உண்மையான ஆற்றல்' அவற்றின் 'பிம்பக் குறித்தலில்' இருப்பதாகப் பரிந்துரைக்கப்பட்டது(டீகன், 1999, 188).

இருந்தாலும், கணினித் தொழில்நுட்பங்கள் புகைப்படங்களின் பிம்பங்களுடைய சுட்டுத் தன்மையை அழித்துவருகின்றன. விளக்கமளிப்பவர்கள் 'உண்மையின்' பதிவாக 'புறவயமானவை' என புகைப்படங்களைக்  கையாள்வதற்கு சுட்டுத்தன்மை இப்போதும் வழமையான ஊடகமாக இருப்பதால்தான் என விவாதிக்கலாம். 'ஒரு புகைப்படம்..அதன் பொருளுடன் ஒளியால் தொடர்பு கொண்டிருந்தாலும், அதன் தோற்றம் உண்மையைத் தடயமாகக் கொண்டிருக்கிறது' என பர்ஸ் விளக்குகிறார்(பர்ஸ் 1931-58, 4.447).
பலச் சூழல்களில் புகைப்படங்கள் உண்மையில் சட்டத் துறையில் மட்டுமல்லாமல் 'தடயங்களாக'க் கொள்ளப்படுகின்றன. நகரும் பிம்பத்தைப் பொறுத்தவரை, வீடியோ-புகைப்படக்கருவிகள் 'தடயங்களாக'ப் பயன்படுத்தப்படுகின்றன. டாக்குமெண்டரி படம் மற்றும் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளின் நிகழ்விடங்களில் நடக்கும் காட்சிகளைப் பதிவு செய்வது குறியின் சுட்டுத் தன்மையைச் சார்ந்திருக்கிறது. இது போன்ற வகைமைகளில் சுட்டுத் தன்மை தடயத்தின் ஸ்தூலமான தரப்பை உறுதிப்படுத்துகிறது.

புகைப்படம் மற்றும் திரைப்பட பிம்பங்களும் குறியீடுகளாக இருக்கும்:தொலைக்காட்சி செய்திகள் பற்றிய அனுபவ ஆய்வில் மக்கள், இடங்கள், நிகழ்வுகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் செய்திப் பிரதியில் குறைவான அளவே பிம்பத் தன்மை உள்ளது அல்லது நேரடியாகப் பிரதிபலிக்ககூடியது என டேவிஸும் வால்டனும் தெளிவாக்கி இருக்கிறார்கள். அதிக அளவிலான காட்சிகள் ஒரு சாய்வான உறவை பிரதியுடன் வைத்திருக்கின்றன; அவைச் சொல்ல வந்தப் பொருளை சுட்டுத் தன்மையுடனோ அல்லது குறியீட்டுத் தன்மையுடனோ 'குறிக்கின்றன'(டேவிஸ் & வால்டன், 1983, 45).

குறியியல்-அறிமுகம்-45(மொழிபெயர்ப்பு)
பர்ஸின் மூன்று வடிவங்களை 'குறிகளின் வகைமகள்' என எளிதாகக் குறிப்பிட்டுவிடலாம், ஆனால் அவை தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை:ஒரு குறி பிம்பமாக, ஒரு குறியீடாக ஒரு சுட்டாக அல்லது எந்த இரண்டின் கலவையாகவும் இருக்கலாம். பர்ஸ் இதைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தார்:உதாரணமாக, 'துல்லியமாக சுட்டும் தன்மையுள்ள குறி அல்லது எந்த ஒரு குறியும் சுட்டும் தன்மை இல்லாததாக அடையாளப்படுத்தவது சிரமமானது அல்லது சாத்தியமில்லாதது' என்கிறார் பர்ஸ்(பர்ஸ் 1931-58. 2.306).

இடத்தின் வரைபடம் பல இடங்களைச் சுட்டிக் காட்டுவதால் அது சுட்டும் தன்மையுள்ளது, திசைகாட்டும் உறவையும் இடக்குறிப்புகளின் தூரத்தைக் காட்டுவதாலும் கொண்டிருப்பதால் பிம்பத்தின் பிரதிபலிப்பையும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய மரபு ரீதியான குறியீடுகளைப் பயன்படுத்துவதால் குறியீட்டுத் தன்மையையும் கொண்டிருக்கிறது.

திரைப்படக் கோட்பாட்டாளர் பீட்டர் உல்லன், 'பர்ஸின் குறிகளைப் பற்றிய ஆய்வில் பல வேறுபட்ட அம்சங்களையும் தனித்தன்மை கொண்டவையாக அவர் கொள்ளாததுதான் சிறப்பு. சசூரைப் போலல்லாமல் ஒரு குறிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பாரபட்சத்தையும் அவர் காட்டவில்லை. உண்மையில் அவர் ஒரு தர்க்கத்தையும் வர்ணனையையும் மூவகை அம்சங்களுக்கு அடிப்படையானதாக இருப்பதை மட்டுமே விரும்பினார்' என்கிறார்(உல்லன், 1969, 141).
திரைப்படமும் தொலைக்காட்சியும் இம்மூன்று வடிவங்களைப் பயன்படுத்துகின்றன:பிம்பம்(ஒலியும் ஒளியும்), குறியீடு(பேச்சும், எழுத்தும்) மற்றும் சுட்டு(காட்சிப்படுத்துவதன் விளைவு);முதல் பார்வையில் பிம்பக் குறிகள் மேலாண்மையுள்ள வடிவங்களாகத் தெரியும், ஆனால் சில திரைப்பட குறிகள் இடுகுறித் தன்மையுள்ளவை. உதாரணமாக 'கரைதல்' என்ற தொழில்நுட்பம் ஒரு காட்சி ஒருவரின் நினைவிலிருந்து தொடர்வதாகக் காட்டுவதைக் குறிக்கிறது.

மூன்று வகைமகளும் 'ஒன்றாக ஒரு வடிவத்தில் படிநிலை கொண்டதாகவும் ஒன்று மற்ற இரண்டை மேலாண்மை செலுத்துவதாக இருக்கும்' அதில் சூழல் மேலாண்மையைத் தீர்மானிப்பதாக இருக்கும் என யாக்கப்சன்னைப் பின்பற்றி ஹாக்ஸ் குறிப்பிடுகிறார்(ஹாக்ஸ் 1977, 129).

ஒரு குறி குறியீடாக, பிம்பமாக, சுட்டாக இருப்பது அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறதோ அதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, அதனால் உதாரணங்களாகக் காட்டப்படுபவை திசைமாற்றுபவையாக இருக்கும். ஒரே குறிப்பான் ஒரு சூழலில் பிம்பத் தன்மைக்காகவும் மற்றொரு சூழலில் குறியீட்டுத் தன்மைக்காகவும் பயன்படுத்தப்படலாம். ஒரு பெண்ணின் புகைப்படம் சிலருக்கு 'பெண்' என்ற விரிவான பொருள் தருவதாக இருக்கலாம் அல்லது அந்தப் படத்திலுள்ள பெண் என்பதை மட்டும் குறிப்பதாக இருக்கலாம்.

குறியியல்-அறிமுகம்-46(மொழிபெயர்ப்பு)
பயன்படுத்துபவர்கள் கொண்ட நோக்கத்தையும் குறிப்பிட்ட சூழலில் பயன்படுத்துவதையும் தவிர்த்து குறிகள் மூன்று வகைமையாகப் பிரிக்கமுடியாது. ஒரு குறி ஒருவரால் குறியீடாகவும் பிம்பமாக மற்றொருவராலும் சுட்டாக வேறொருவராலும் கையாளப்படலாம். 'ஒரு பிம்பம் அல்லது சுட்டு அல்லது குறியீடு பற்றிப் பேசினால் அதில் குறியின் புறவயமான அம்சங்களைப் பற்றி மட்டும் பேசப்படுவதில்லை, அந்தக் குறியைப் பார்ப்பவரின் அனுபவத்தைப் பற்றித்தான் பேசப்படுகிறது' என கென்ட் க்ரேசன் குறிப்பிடுகிறார்(க்ரேசன், 1998, 35). ஒரு குறிப்பிட்ட காலத்தின் மாற்றத்தில் குறிகளும் வகைமையில் மாறுகின்றன. 'உதாரணமாக ஒரு அர்த்தத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் வளத்தினைச் சுட்டும் ஒன்றாக, செல்வச் செழிப்புள்ள ஒருவர் வாங்கவேண்டிய வாகனமாக இருக்கிறது, ஆனால் சில காலம் கழித்து சமூகப் பயன்பாட்டில் அது செல்வத்தின் மரபுக் குறியாக மாற்றப்பட்டுவிடுகிறது' என்கிறார் ஜோனாதன் கல்லர்(கல்லர் 1975, 17).

'மொழியின்-நிலைப்பாட்டை' பற்றி 'செங்குத்துத் தளத்தில்'(பரிணாமத்தை ஆய்வுசெய்தல்) ஆய்வு செய்வதைவிட 'கிடைக்கோட்டுத்தளத்தில்(காலத்தில் உறைந்த கணம் போன்றது) ஆய்வு செய்வதையே வலியுறுத்தும் சசூருக்கு மொழியிலுள்ள குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள உறவு காலத்தினுடாக மாறும் தன்மை கொண்டது என்பது பற்றி தெளிவான விழிப்புணர்வு இருந்தது(சசூர் 1983, 74, சசூர் 1974 74). இருந்தாலும், இது அவருடைய கவனத்தில் குவிந்திருக்கவில்லை.

குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையிலுள்ள உறவு பெரும் மாற்றத்துக்கு உள்ளாவதாக அமைப்பியல் திறனாய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்:'குறிப்பான்களின் கண்ணிகளை' 'நிலைநாட்டுதல்' என்பது தற்காலிகமானது மற்றும் சமூகத்தால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கிறது என ரோஸலின் கவர்டும் ஜான் எல்லிஸும் கூறுகிறார்கள்(கவர்ட் & எல்லீஸ் 1977, 6,8,13).
பர்ஸின் மூன்று வகைமைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு வரலாற்றுப் பெயர்ச்சி நடக்க முற்படுகிறது. சசூரைவிட மொழியியல் அல்லாத குறிகள் பற்றி பர்ஸ் அதிகக் கவனம் கொடுத்தாலும், சசூரைப் போல குறியீட்டு குறிகளுக்கு அதிக அந்தஸ்த்தைக் கொடுத்தார்:'அவை மட்டுமே பொதுக் குறிகள்; பொதுமை தர்க்கத்திற்கு அவசியமானது' என்கிறார்.(பர்ஸ் 1931-58, 3.363; மேலும் 4.448 & 4.531). சசூர் இடுகுறித் தன்மை கோட்பாடு பற்றி வலியுறுத்துவது குறியீட்டு குறிகளுக்கு அவர் குடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அதே சமயம் பர்ஸ் மனித இனத்தை 'குறியீட்டைப் பயன்படுத்தும் விலங்கு' என்று கூறுகிறார்(பர்ஸ் 1931-58, 2.299).

குறியியல்-அறிமுகம்-47(மொழிபெயர்ப்பு)

குறியீடு பற்றிய அணுகுமுறையால் குறியீட்டு வகைமையை நோக்கிய குறி அமைப்புகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்து தொடர்ந்திருக்கிறது. 'குறிகளுக்கு ஒரு வாழ்வு இருக்கிறதா, அதன் காரணமாக-அவற்றுக்குத் தேவையான ஊடகம் நிலைத்திருக்குமா-என்ற ஆய்வு மூலம் ஓர் ஒழுங்கமைவு வளர்ச்சியை அவை சந்திக்கும்' என பர்ஸ் கணிக்கிறார்.
ஆர்வமூட்டும் ஒன்று என்னவெனில், அவர் குறியீட்டு வடிவ 'மாதிரி'யை நோக்கிய இந்தப் போக்கினை அவசியமான ஒன்றாக முன்வைக்கவில்லை. ஏனெனில் 'ஒரே வகையான வடிவ மாற்றங்கள் திரும்பத் திரும்ப கோட்பாட்டு சாத்தியங்களுக்காக விளக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன' எனவும் கூறுகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 2.111). அது போன்ற சாத்தியத்தை ஏற்று, 'பிம்பம், சுட்டு, குறியீட்டுக் குறிகளில் தொடர்ந்த வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கும்' எனவும் குறிப்பிடுகிறார்(மேற்குறிப்பிட நூல் 2.299).

பர்ஸ் பிம்பத் தன்மை என்பதைக் குறித்தலாக்கத்தின் மூல இயல்புநிலையாக வைக்கிறார். பிம்பத்தை 'மூலத்தன்மையுள்ள குறி'(மேற்குறிப்பிட்ட நூல் 2.92) என்று அறிவிக்கும் பர்ஸ் 'ஆதி நிலையிலுள்ள, எளிமையான மூல வகைமையைச் சார்ந்தது என்றும் அதை விளக்குகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 2.90). 'இயற்கையான குறி..அல்லது குறியீடு' என்பதை ஒப்பிடும் போது சுட்டு என்பது 'சிறிதளவே சிதைந்திருக்கிறது,' ஆனால் பிம்பம் 'அதிக அளவு சிதைந்திருக்கிறது.' குறிகள் 'இயல்பில் ஒரு பகுதி பிம்பமாகவும் ஒரு பகுதி சுட்டாகவும்' இருக்கின்றன என பர்ஸ் குறிப்பிடுகிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 2.92).
மேலும், 'எல்லா மூல எழுத்துகளிலும் உதாரணமாக எகிப்து சித்திர வடிவ எழுத்துகளில் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பிம்பங்கள் அதாவது கருத்து எழுத்துகள் உள்ளன', எனவும் 'ஆதி காலத்து பேச்சில் போலச் செய்தல் அதிகம் இருந்திருக்கும்' எனவும் கணிக்கிறார்(மேற்குறிப்பிட்ட நூல் 2.280). இருந்தாலும், மொழியியல் குறிகள் குறியீட்டு மற்றும் மரபுசார் குணாம்சங்களைக் கொண்டவைகளாக வளர்ந்துவிட்டன(மேற்குறிப்பிட்ட நூல் 2.92, 2.280). 'குறியீடுகள் மற்ற குறிகளின் வளர்ச்சியால் குறிப்பாக பிம்பங்களால் உருவாகின்றன'(மேற்குறிப்பிட்ட நூல் 2.302).

மொழியியல் குறிகள் சுட்டுக்களிலிருந்து பிம்ப வடிவங்களாக வளர்ந்து குறியீட்டு வடிவங்களை அடைகின்றன என்பதை வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. எழுத்துகளின் வரிசை முதலில் ஒலிகளுக்கான மரபுசார் குறியீடுகளுக்குப் பதிலாக உருவாகும் அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை. பிம்ப உருவாக்கப் பொருள்களின் வடிவங்களிலிருந்து வந்த குறியீடுகளின் அடிப்படையில்- நாணய உருவாக்கத்தில் இன்று பயன்படுத்தப்படும் அச்சு போன்ற உருவங்களிலிருந்து அகரவரிசை எழுத்து முறையின் மூலம் வந்தது' என தொல்லியல் ஆய்வு கூறுவதாக மார்சல் டேனேசி குறிப்பிடுகிறார். அதன் பின்னர் வெகு காலம் கழித்துத்தான் அவை அரூபப் பண்புகளைப் பெற்றன என்றும் கூறுகிறார்(டேனேசி 1999, 35; மற்றும் ஷ்மாண்ட்-பெசெரெட் 1978).

குறியியல்-அறிமுகம்-48(மொழிபெயர்ப்பு)
எகிப்திய சித்திரவடிவ எழுத்துகளின் பிம்பக் குறிகளிலிருந்துதான் கிரேக்க, லத்தீன் எழுத்துகள் பரிணமித்தன. மத்தியதரைக்கடல் பகுதியின் பழங்காலக் குடிகள் வரைபடங்களையும் கருத்து எழுத்துகளையும் சித்திரவடிவ எழுத்துகளையும் பயன்படுத்தின. இவற்றில் பல பிம்பக் குறிகள், அவற்றின் பொருள்களையும் செயல்பாடுகளையும் நேரடியாகவோ உருவகமாகவோ பிரதிபலித்தன. கால மாற்றத்தில், வரைபட எழுத்துமுறை குறியீட்டு வகைமையில் அதிகமாகவும் பிம்ப வகைமையில் குறைவாகவும் ஆகிப்போனது(ஜெல்ப் 1963). இது போல் பிம்ப வகைமையிலிருந்து குறியீட்டு வகைமைக்கு நடந்த பெயர்ச்சி, 'உளி அல்லது தூரிகையால் எழுதப்படும் செயல்பாட்டின் அடிப்படையில்' நடந்தது(செர்ரி 1966, 33); குறியீடுகள் பொதுவாக, குறியியல் ரீதியாக நெகிழ்வானவையாகவும் தேர்ந்தவையாகவும் உள்ளன(லியான்ஸ் 1977, 103).

குறிப்பிட்ட கலாச்சாரங்களில் நோக்கத்திலிருந்து இடுகுறித்தன்மைக்கு இதே போன்ற பெயர்ச்சி நடப்பதை மானுடவியலாளர் க்ளாட் லெவி-ஸ்ட்ராஸ் அடையாளப்படுத்துகிறார்(லெவி-ஸ்ட்ராஸ 1974, 156). சில கோட்பாட்டாளர்கள் 'குறிகள் எப்போதுமே இடுகுறித் தன்மை கொண்டவையாக இல்லை' என்று வலியுறுத்துவதன் காரணம் வரலாற்று அணுகுமுறையைக் கொண்டு பார்ப்பதால்தான்(க்ரெஸ் & வான் லியுவேன் 1996, 7). குறிகளைப் பயன்படுத்துபவர்களின் நோக்கத்தை வலியுறுத்தும் குந்தர் க்ரெஸ் குறியைப் பற்றி அதிகமான கவனத்தைக் கொண்டிருக்கவில்லை(மேலும் ஹாட்ஜ் & க்ரெஸ் 1988, 21-2), 'குறிப்பானையும் குறிப்பீட்டையும் அடையாளப்படுத்தும் ஒவ்வொன்றும் உற்பத்தியின் விளைவாகவும் அந்த உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வேலையாகவும் இருக்கிறது என ரோஸலின்ட் கவர்ட்டும் ஜான் எல்லிஸும் கூறுகிறார்கள்(கவர்ட் & எல்லிஸ் 1977, 7).

இலக்கக் குறிகளுக்கும் ஒத்திசைவு குறிகளுக்கும் இடையில் சில சமயங்கள் வேறுபாடு கொள்ளப்படுகிறது. உண்மையில், 'தொடர்வும் தொடர்வின்மையும் போல் எந்த இரு வகைமைகளும் எந்த இரு  அனுபவங்களும் மனித வாழ்விலும் சிந்தனையிலும் அடிப்படையாக இருப்பதில்லை என ஆண்டனி வில்டன் கூறுகிறார்(வில்டன் 1987, 222).

நாம் நேரத்தைத் தொடர்வாக உணர்வதால் அதை ஒத்திசைவு அல்லது எண் இலக்க முறையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஒத்திசைவு முறையிலுள்ள ஒரு கடிகாரத்தில் காட்டப்படும்(மணி, நிமிடம், நொடிகள்) நேரம் மூலம் ஒரு மணியை ஒரு கேக்கைப் போல பிரித்துக் காட்டுவது சாதகமாக உள்ளது(உதாரணமாக ஒரு பேச்சு முடிய எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை நாம் 'பார்த்து'த் தெரிந்துகொள்கிறோம்). ஓர் எண் இலக்கக் கடிகாரத்தில்(அப்போதைய நேரத்தை மாறும் எண்களின் மூலம் காட்டுவது) துல்லியமாகக் காட்டுவது சாதகமாகிறது, அதனால் 'அப்போது' துல்லியமான நேரம் என்ன என்பதை அறியமுடிகிறது. இப்போது எண் இலக்கக் கடிகாரத்திலும் ஒத்திசைவு முறையைப் போலச் செய்தும் காட்டப்படுகிறது.

ஒத்திசைவு வகைமைகளுடன் நமக்கு ஆழமான இணைப்பு உள்ளது. எண் இலக்க பிரதிநிதித்துவங்களை நாம் 'உண்மைத் தன்மை குறைந்தது' அல்லது 'அதிகாரப்பூர்வத் தன்மை குறைந்தது' என்றே கருதுகிறோம்-தொடக்கக் கட்டத்திலாவது இப்படி எண்ணுகிறோம்(கிராம்போன் தட்டுக்கும் குறுந்தகதகடுக்கும் உள்ள வேறுபாடு போன்றது). ஒத்திசைவு/எண்இலக்க வேறுபாடு எப்போதும் 'இயற்கையானது' என்றும் 'செயற்கையானது' என்றும் விளக்கப்படுகிறது.
இது நனவிலி என்பதுடன் ஓரளவு தொடர்புபட்டது-நாம் அதை நம்முள் 'ஆழமாக இருப்பது' என்று கருதுகிறோம்-அது ஒத்திசைவுடன் செயல்படுவதாகத் தோற்றம் தருகிறது(வில்டன் 1987, 224). ஒத்திசைவின் சிறப்பம்சமாக அது நனவிலியின் ஸ்திதியுடன் இணைக்கப்பட்டதாகவும் அதற்கு எதிராகப் பகுத்தறிவு வீறுணர்வு கருத்தாக்கத்தில் இருப்பதாகவும்(அதுவே 'தனிநபர்கள்' என்ற நமது கருத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது) கருதுகிறோம். எண் இலக்க சங்கேதங்களில் தொடர்புபடுத்தவேண்டும் என்ற நோக்கம் வலிந்து இருப்பதாகவும் ஒத்திசைவு சங்கேதங்களில் 'நிச்சயமாகச் சாத்தியமற்ற வகையில்...தொடர்புபடுத்த முடியாத நிலை' இருப்பது போலவும் தோன்றுகிறது(மேற்குறிப்பிட்ட நூல் 225). உணர்வுப் பூர்வமான நிலைக்கு அப்பால் நோக்கத்துடன் நாம் தொடர்புகொள்வது பாவனைகளால், பாங்குகளால், முக பாவனைகளால், குரல் ஓசைகளால் நடக்கிறது. ஒத்திசைவு சங்கேதங்கள் 'நம்மைக் கைவிட்டு' நம்முடைய மனப்பாங்குகள், அணுகுமுறைகள், நோக்கங்கள், உண்மைகள்(அல்லது அதற்கு மாறுபட்டவைகள்) போன்றவை வேறு வழியின்றி வெளிப்படுகின்றன. இருந்தாலும், 1971ல் ஒலியிலும் ஒளிப் பதிவிலும் ஏற்பட்ட 'எண் இலக்கப் புரட்சி' எண் இலக்க சங்கேதம் மின்னணு தொழில்நுட்பத்துடன் நம்மை ஒருங்கிணைக்க வைத்தது. எண் இலக்க சங்கேதகள் மொழியின் ஆதி வடிவத்திலிருந்தே இருக்கின்றன-எழுத்து முறை என்பதே 'எண் இலக்கத் தொழில்நுட்பம்தான்.' குறித்தலாக்கம் செய்யும் அமைப்புகள் எண் இலக்க ஒழுங்கை தடையில்லாத விசையின் பாய்வாக நாம் அனுபவிப்பனவற்றின் மீது பாய்ச்சுகிறது.  

ஒரு குறி என்ற எந்த ஒன்றையும் விளக்கினாலும் அதில் தனித்தது என்பதைக் காட்டி தொடரும் ஒன்று குறைக்கப்படுகிறது. இரட்டை வேறுபாடுகள்(இது/அல்லது) குறிக்கும் அமைப்புகளின் உருவாக்கத்திற்கு அடிப்படைச் செயல்பாடாக இருப்பதைப் பிறகு பார்ப்போம். எண் இலக்கக் குறிகள் தனிப்பட்ட அலகுகளை உதாரணமாக சொற்கள் மற்றும் 'முழுமையாக வகுபடும் எண்களை' உள்ளிணைக்கின்றன மற்றும் எது குறிப்பிடப்படுகிறதோ அந்த வகைமையைச் சார்ந்து இருக்கின்றன.

குறியியல்-அறிமுகம்-50(மொழிபெயர்ப்பு)

ஒத்திசைவு குறிகள்(உதாரணமாக, காட்சிப் பிம்பங்கள், பாவனைகள், இழைகளின் நயம், சுவைகள் மற்றும் மணங்கள்)தொடர்ந்திருக்கும் படிநிலை உறவுகளை உள்ளிணைக்கின்றன. 'சொற்களுக்கு அப்பால்' இருப்பது போல் தோன்றும் நுட்பங்களை அவைக் குறிக்கின்றன. குறியீட்டு குறிப்பான்கள் போலல்லாமல் நோக்கம் கொண்ட குறிப்பான்கள்(மற்றும் அவற்றின் குறிப்பீடுகள்) ஒன்றுக்குள் ஒன்று பிணைந்திருக்கும். சிரிப்பு மற்றும் புன்னகைகள் போன்ற விசையுள்ள ஒத்திசைவு குறிகளின் விரிவான பட்டியல் போல வேறொன்று இருக்கப் போவதில்லை.

ஒத்திசைவு குறிகள் எண் இலக்க முறையிலும் உருவாக்கப்படலாம்(மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட ஓசைகள் மற்றும் இயங்கும் இயங்கா பிம்பங்கள்) ஆனால் இவை மொழியியல் குறிகள் போல் ஒரு தரமான 'அகராதி'க்கும் தொடரன்களுக்கும் உள்ள உறவு போன்ற நேரடி உறவைக் கொள்ளமுடியாது.  

ஒத்திசைவு சங்கேதங்களின் தரநிலை அவற்றைப் பொருளாம்சத்தில் செறிவுள்ளதாக்கும் ஆனால் அவற்றை தொடரியல் உட்சிக்கல் அல்லது பொருளியல் துல்லியம் போன்றவற்றில் நலிவுற்றதாக்கும் என பில் நிக்கோலஸ் கூறுகிறார். இதற்கு மாறாகத் தனிப்பட்ட எண் இலக்க சங்கேதங்களோ பொருளாம்சத்தில் நலிவுற்றிருந்தாலும் உட்சிக்கலிலும் அல்லது பொருளியல் குறித்தலிலும் திறன் வாய்ந்தவையாக இருக்கும்(நிக்கோலஸ் 1981, 47; மேலும் வில்டன் 1987, 138, 224).

'வாசகங்களைப் பிம்பங்களாக மொழிபெயர்க்க முடியாது' மற்றும் 'படங்கள் உறுதிப்படுத்தக் கூடியவை அல்ல'-பர்ஸ் கண்டுபிடித்த கருத்துகளில் ஒன்று என கலை வரலாற்றாளர் எர்ன்ஸ் கோம்ரிச் கூறுகிறார்(கோம்ரிச் 1982, 138, 175; பர்ஸ் 1931-58, 2.291). இருந்தாலும், அது போன்ற தொடர்புறுத்தும் செயல்பாடுகளுக்குப் பயன்படும் பிம்பங்கள் 'வெளிப்படையான விளக்கத்திற்கு' ஏதுவாக இருக்கின்றன. தற்காலத்திய காட்சி விளம்பரங்கள் பிம்பங்களை விளம்பரதாரர்கள் வெளிப்படையான சொற்களால் அல்லாமல் உள்ளார்ந்த வாக்குறுதிகளைக் கொடுப்பதற்கான சக்தி வாய்ந்தவையாகப் பயன்படுத்துவதற்கு உதாரணங்களாக இருப்பதைச் சொல்லமுடியும்.

எண் இலக்கம்(மின்னணு) vs ஒத்திசைவு
இடுகுறித் தன்மை vs நோக்கம் கொண்டவை
மரபார்ந்தவை vs இயற்கையானவை

இது போன்று சில விமர்சகர்களின் 'இடுகுறித் தன்மை,' 'மரபு' மற்றும் 'எண் இலக்கம்' போன்ற சொற்களின் சமன்பாட்டை இத்தாலிய குறியியலாளர் உம்பர்த்தோ எக்கோ விமர்சிக்கிறார். பரவலாகப் பயன்படுத்தப்படும் இரட்டைச் சொற்களைச் செங்குத்தாகப் பட்டியலிடுவது தவறு என்றும் அவை ஒன்றுக்கொன்று பொருள் தருபவை என்றும் கூறுகிறார்(எக்கோ 1976, 190).

ஒரு புகைப்படம் 'நோக்கம்' கொண்டதாகவும் 'மின்னணு' முறையில் படம் பிடிக்கப்பட்டதாகவும் இருக்கும் உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். 'மரபார்ந்த தன்மை'(சமூக கலாச்சார மரபுகளைச் சார்ந்திருத்தல்)'இடுகுறித் தன்மைக்கு'(குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்கும் இடையில் உள்ளாரந்த தொடர்பின்றி இருத்தல்)நேரடி சமன்பாடு எதுவும் இல்லை. இது போன்ற சொற்களை சமநிலை கொண்டவையாகக் கையாள்வது எளிது-தற்காலத்திய பிரதிகள் இந்த நிலைக்கு எதிரானவையாக உள்ளன. ஒத்திசைவைப் பெரிதும் விரும்பும் நாம் எப்போதும்(தவிர்க்கமுடியாத வகையில்) அறியாமல் பாதிப்படைந்தவர்களாக ஆகிவிடுவதைப் பின்னர் பார்ப்போம்.





குறியியல்-அறிமுகம்-51(மொழிபெயர்ப்பு)
குறி ஊடகங்களுக்கும் மொழியியல் கருத்துகளான அடையாளங்கள் மற்றும் வகைமைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு பற்றி பர்ஸ் கூறியிருக்கிறார்(பர்ஸ் 1931-58, 4.537). பேச்சு அல்லது எழுத்துப் பிரதியில் உள்ள எழுத்துகளுக்கும் அடையாளங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான உறவு மொத்த சொற்களின் எண்ணிக்கையாக இருக்கும்(எந்த வகைமையாக இருந்தாலும்), மாறாக வகைமைகளின் எண்ணிக்கையுடன் உள்ள உறவில், திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்த்த வித்தியாசமான சொற்களின் எண்ணிக்கையாக இருக்கும். தொடரனியனில் இருக்கும் மொழியில், அடையாளங்கள் ஸ்தூலமான(அச்சமயத்திற்கு உரியவை) வகைமையாக இருக்கும். (ஆப்பிளிலேயே பெரியதும் சிறியதுமாக இருந்தாலும் ஒரே வகைமையைச் சார்ந்திருப்பது போன்றது) அடையாளங்களுக்கும் வகைமைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டையும் குறிப்பிட்ட கணத்திற்கும் பொதுப் பட்டியலுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் மொழி சார்ந்திருக்கிறது. இதுதான் அடிப்படை பட்டியல். ஒருவருடைய அவசியம் கருதி எந்த ஒன்றும் வகைமையின் அடையாளமாகக் கொள்ளப்படுவதாக ஜான் லியான்ஸ் கூறுகிறார்.-உதாரணமாக:
·         வேறுபட்ட பொருளைக் கொண்ட ஒரே மாதிரியாக உச்சரிக்க அல்லது எழுதப்படுகின்ற சொற்களை ஒருங்கிணைத்தவையா அடையாளங்கள்?
·         ஆங்கில மொழியில் வரியின் முதலில் வரும் சொல்லில் முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருப்பதும் நடுவில் இருக்கும் அதே சொல் சிறிய எழுத்தால் எழுதப்பட்டிருப்பதும் ஒரே வகைமையைச் சார்ந்தவையா?
·         ரோமன் எழுத்தில் எழுதப்பட்ட எழுத்தும் சாய்வெழுத்தில் பதிப்பிக்கப்பட்டதும் அந்தச் சமயத்தில் ஒரே வகைமையினவா?
·         ஒரு நபர் கையால் எழுதிய எழுத்தும் மற்றொருவர் அதே எழுத்தைக் கையால் எழுதியதும் ஒன்றா?(லியான்ஸ் 1977, 13-15).
குறியின் பயன்பாட்டாளர்கள் குறிப்பிட்டச் சூழலில் பயன்படுத்தும் தனிப்பட்ட குறித்தலாக்கச் செயல்பாடு பற்றி ஆய்வு செய்து பல்வேறு வகையான குறிப்பீடுகள் என்ன விளைவைத் தருகின்றன என்பதை அறிவதன் மூலம் இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் குறியியல் அணுகுமுறையில் பெறலாம்.

உம்பர்ட்டோ எக்கோ மூன்று வகையான குறி ஊடகங்களைப் பட்டியலிடுகிறார், பொருளியல் வடிவத்தை ஓரளவாவது தொடர்புபடுத்தும் இந்த வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை:
·         ஒரே வகைமையைச் சேர்ந்த எண்ணிலடங்கா அடையாளங்கள்(நகல்கள்) இருக்கும் குறிகள்(பதிப்பிக்கப்பட்டச் சொல் அல்லது ஒரே வண்ணத்திலான ஒரே வகையான கார்);
·         சில பொருளியல் தனித்தன்மைகள் உள்ள பண்பைக் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட வகைமையில் உற்பத்தி செய்யப்படிருக்கும் அடையாளங்களைக் கொண்ட குறிகள்(உதாரணம், ஒருவர் பேசும் ஒரு சொல் அல்லது கையால் எழுதும் சொல்);
·         குறிகளின் அடையாளங்கள்தான் அவற்றின் வகைமை அல்லது குறிகளின் வகைமையும் அடையாளங்களும் ஒரே மாதிரியானவை(உதாரணம், தனித்த மூல தைல வண்ண ஓவியம் அல்லது இளவரசி டயானாவின் மணமகள் உடை)(எக்கோ 1976, 178).
#குறியியல்-அறிமுகம்-52(மொழிபெயர்ப்பு)

ஒரு பிரதியை விளக்குவதில் வகைமை-அடையாளம் வேறுபாடு தாக்கத்தைச் செலுத்தும். 'இயந்திர உற்பத்திக் காலத்தில் படைப்புச் செயல்பாடு' என்ற பெரும் தாக்கம் ஏற்படுத்திய கட்டுரையில் இலக்கிய-தத்துவியல் கோட்பாட்டாளர் வால்டர் பெஞ்சமின்(1892-1940), மூலப் படைப்புகளை மறுஉற்பத்தி செய்வது தொழில்நுட்ப சமூகத்தில் மேலாண்மை செலுத்துகிறது என்றார்-மூல வகைமையின் அடையாளங்கள்(பெஞ்சமின் 1992, 211-244). உண்மையில், ஒரு வேளை பிரபலமான தைல வண்ண ஓவியத்தின் 'மூலத்தை' நாம் பார்க்க நேர்ந்தாலும், அதன் எண்ணிலடங்கா மறுபிரதிகளைத்(நூல்கள், தபால்கள், சுவரொட்டிகள்-சில சமயங்கள் போலிகள் அல்லது கருத்து மாறுபாடுகளுடனான வடிவங்கள்)தான் பார்த்திருப்போம் மேலும் நாம் எதிர்கொண்ட(உட்பிரதியியல்) நகல்கள் அல்லது பதிப்புகள் மீதான தீர்மானங்களின் வெளிச்சத்தில்தான் மூலத்தை நாம் 'பார்க்க' முடியும். பின்நவீனத்துவ காலத்தில், நம்முடைய ஒட்டுமொத்தப் பிரதிகளும் உண்மையில் 'மூலமில்லாத நகல்கள்.' குறிகளுடனான உறவு கொண்டிருக்கும் வகைமை-அடையாள வேறுபாடு சமூக குறியியல் விதிகளின் படி முக்கியமானது. ஏனெனில் குறிகளைப் பயன்படுத்துபவர்களை முன்வைத்து குறி ஊடகத்தின் ஒட்டுமொத்தச் சொத்து என்பதால் அல்ல மாறாக எந்த ஒரு குறிப்பிட்டச் சூழலிலும்(குறிப்பிட்ட காரணங்களில்) அது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருப்பதால்தான். இதை எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்றால் ஒரே கட்டில் நுட்பமான பாங்குகளில் மாறுபாடுகளைக் கொண்ட சீட்டுக்கட்டுகளின் பின்புற வடிவங்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தை சூதாடுபவர்களுக்குக் கொடுப்பது போலவும் ஆனால் பல்வேறு கட்டுகளில் ஒவ்வொரு சீட்டின்(இஸ்பேட்டின் ஏஸ் எனப்படும் முதல் சீட்டு) வகைமையிலும் மாதிரிகள் மாறி அமைவதைக் குறிப்பிடத்தக்க அம்சம் என அதைச் சேகரிப்பவர்கள் பெரிதும் வரவேற்பதைப் போலவும் இந்த வகைமை-அடையாள வேறுபாடு உள்ளது.

முன்பே கூறியது போல சசூர் குறிப்பான் மற்றும் குறிப்பீட்டை பொருளியல் அம்சம் அற்ற 'உளவியல்' வடிவங்களாகப் பார்த்தார்; மொழியே ஒரு 'வடிவம், பொருளாம்சம் அல்ல' என்கிறார் சசூர்(சசூர் 1983, 111, 120; சசூர் 1974, 113, 122). அவரது கருத்தை வலியுறுத்த பல உதாரணங்களைக் கொடுக்கிறார். உதாரணமாக, செஸ்ஸின் பல வகையான இணைகளில், 'மரத்தால் ஆன காய்களைத் தந்தத்தால் ஆன காய்களைக் கொண்டு பதிலி செய்தால் எந்த ஒரு மாற்றமும் அமைப்பில் உருவாகாது' என்கிறார்(சசூர் 1983, 23; சசூர் 1974, 22). இந்தச் செயல்பாட்டு அணுகுமுறையைத் தொடர்ந்தபடி மற்றொரு உதாரணமாக ஜெனிவாவிலிருந்து-பாரிஸ் வரைச் செல்லும் இரவு 8.25மணிக்கான ரயிலை(எந்த ஒரு ரயில் எந்த இடத்திலிருந்து அதே நேரத்தில் கிளம்பினாலும் இது பொருந்தும்) அதன் பெட்டிகள், என்ஜின்கள், பணியாளர்கள் மாறினாலும் 'அதே ரயில்' என்றேதான் குறிப்பிடுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதே போல் ஒரு தெரு முற்றிலும் வேறு வகையில் மாற்றி அமைக்கப்பட்டாலும் 'அதே தெரு' என்றே ஏன் கருதப்படுகிறது என்று வினவுகிறார். 'ஏனெனில் அது முழுமையாகப் பொருளியல் அமைப்பு இல்லை' என விளக்குகிறார் சசூர்(சசூர் 1983, 107; சசூர் 1974, 108).






மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...