அலைபேசியில்
விளையாடிக் கொண்டிருந்தாள் அவள். பல சாதனைகளைச் செய்து மலை மீதிருக்கும் விளக்கை
எடுத்து வருவதற்கான விளையாட்டு அது. அதில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பெண் இடையில் வந்த
தடையில் வீழ்ந்துவிட்டாள். அலைபேசி இவளை அந்த ஓட்டத்தைத் தொடருமாறு கூறியது. இவள்
அந்த ஓட்டத்தில் புகுந்தாள். எப்படியோ பல தடைகளைக் கடந்து மலை வரை
முன்னேறிவிட்டாள். கீழே விழுந்த பெண் எழுந்து சமாளித்து வந்து மலை வரை
வந்துவிட்டாள். இவளுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே பலத்த போட்டி எழுந்தது.
அலைபேசி அந்தப் பெண்ணை ஆதரித்தது. இது நியாயமற்றது என்றாள் இவள். அலைபேசி கண்டு
கொள்ளவில்லை. இவளும் வேகமாக மலை ஏறினாள். அந்தப் பெண்ணுக்கு ஓரளவு எளிமையான தடைகள்
வந்தன. இவளுக்கு அதிகக் கடினமானத் தடைகள் வந்தன. இருவரும் ஒரே நேரத்தில் மலை
உச்சிக்கு வந்து சேர முடிந்தது. மலை உச்சியில் இருந்த விளக்கை இருவரும் தொடமுடியாத
படி இருந்தது. இவளுக்கு ஆற்றாமையாக வந்தது. இதுவரை அந்த விளையாட்டில் இருந்த
சவால்களை விடுத்துப் புதிய சவால்களை அலைபேசி கொடுக்கத் தொடங்கியது. அவற்றில்
வெற்றி பெற்றாலும் விளக்கை இருவராலும் தொடமுடியவில்லை. இறுதியில் விளையாட்டிலிருந்து
பின் வாங்க விரும்புகிறீர்களா என அலைபேசி கேட்டது. இருவருமே அமைதி காத்தார்கள்.
சவால்கள் தீர்ந்துவிட்டன. விளக்கு இருவருக்குமே இல்லை. மீண்டும் முதலிலிருந்து
தொடங்கி விளையாடலாம். அப்போது விளக்கு யாராவது ஒருவருக்குக் கிடைக்கும் என்றது.
இவளால் அந்த அநியாயத்தை ஏற்க முடியவில்லை. அதில் மக்கள் தொடர்பு பக்கத்திற்குச்
சென்று புகார் எழுப்பினாள். இனி இது போன்ற அநியாயம் நடக்காது என பதில் வந்தது. இப்போது இந்த விளையாட்டைத்
தனக்குச் சாதகமாக்கவேண்டும் என்றாள். அது முடியாது என பதில் வந்தது. என்ன காரணம்
எனத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றாள். அலைபேசியில் இருக்கும் விளையாட்டில் எல்லா
சவால்களையும் முறியடித்துவிட்டால் அப்படிச் செய்திருப்பது அலைபேசியின் கணினியைவிட
அதிக சக்தி வாய்ந்த கணினி என அலைபேசி புரிந்துகொண்டுவிடும். அதனால் விளையாட்டை
நிறுத்திவிடும். இப்போது அதுதான் ஆகியிருக்கிறது என பதில் வந்தது. அலைபேசியில்
அந்த விளையாட்டை அவள் நீக்கினாள்.
Sunday, 17 October 2021
குறுங்கதைகள்-விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட ...
No comments:
Post a Comment