அன்றுதான்
அந்தக் கதையின் 1000மாவது பக்கத்தை அவன் எழுதி முடித்திருந்தான். அந்தக் கதை அவன் விண்வெளிப்
பயணம் போனதைப் பற்றியதுதான். அவனுடைய சுயபுராணம் என்றுகூடச் சொல்லிவிடலாம். விண்வெளியில்
அவன் கண்ட காட்சிகள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் அந்தக் கதையில் இடம்பெற்றன.
அவன் விண்வெளியில் அனுபவித்த ஒவ்வொரு மணித்துளியையும் கதையாக எழுதவேண்டும் என்ற வேகத்தில்
அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்தான். எல்லாமே நினைவில் இருந்து எழுதவேண்டியிருந்தது.
எதையும் பயணத்தின் போதே பதிவு செய்ய முடியாதிருந்தான். அதனால் அந்தப் பயணத்தை மீண்டும்
மேற்கொள்வது போல கதையில் பயணித்துக் கொண்டிருந்தான். முதல் அனுபவம் பற்றியே 1000 பக்கங்களை
எழுதிவிட்டான். இது அவனுடைய முதல் விண்வெளிப் பயணம். முதலில் அவன் சென்றடைந்தது பூமியைப்
போன்றே இருக்கும் ஒரு கிரகம். அங்கிருந்தவர்கள் பூமியைச் சேர்ந்தவர்கள் போலவே இருந்தார்கள்.
இவனும் அந்தப் புதிய பூமியில் மிகவும் இனிமையாக நாட்களைக் கடத்தினான். அங்கு ஒரு பெண்
இவனுக்கு அறிமுகம் ஆனாள். அந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றிக் கூறினான். அவளும் வேறொரு
கிரகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறினாள். அந்தப் புதிய பூமியில் இருக்கும் சிலரைத்
தன்னுடன் அழைத்துச் செல்ல அங்கு வந்திருப்பதாக அவள் கூறினாள். தானும் அவளுடன் வருவதாகக்
கூறினான். பூமியிலிருந்து வருபவர்களுக்கு தன்னிடத்தில் வாழ முடியாது என்று கூறினாள்.
அவள் தன்னை உருமாற்றிக் கொண்டு அந்தப் புதிய பூமிக்கு வந்திருப்பதாகச் சொன்னாள். பூமிவாசிகளுக்கு
இப்படி உருமாற்றிக் கொண்டு வேறிடத்தில் வாழ்வது இன்னும் சாத்தியமில்லை என்றாள். அவளைப்
போல உருமாற என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைப் போல அவளால் உருமாற முடியும்
என்றாள். ஆனால் மீண்டும் அவன் தன் பழைய நிலைக்கு மீள முடியாது என்றாள். அதை அவன் பொருட்படுத்தவில்லை
என்றான். தன்னைப் போல் உருமாறி அவளுடைய இடம் சென்று தான் எழுத நினைத்த இந்தக் கதையை
எழுதினால் போதும் என்றான். அவள் அவனாக உருமாறி இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தான்/ள்.
Monday, 2 August 2021
குறுங்கதைகள்-அவளும் அவனும்
Subscribe to:
Post Comments (Atom)
மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
No comments:
Post a Comment