சிறுமியை
வன்புணர்வு செய்ததற்காக அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பல
நாட்களாக அவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் காவல்துறையும் பாடுபட்டு வந்தது. ஆனால்
குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. அன்றும் வழக்கம் போல் அவனை அழைத்து
வந்தார்கள். வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவனை மீண்டும் அழைத்துப் போவதற்கான
வண்டியில் ஏற்ற இருந்த போது அவன் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான்.
யாராலும் அவனை அந்த இடத்திலிருந்து நகர்த்த முடியவில்லை. ஒரு பொம்மையைப் போல் அதே
இடத்தில் நின்றுவிட்டான். மருத்துவக் குழு அவனை நகர்த்த முயற்சி செய்தும்
முடியவில்லை. காவல் துறையினர் பலம் கொண்ட மட்டும் அவனை நகர்த்திப் பார்த்தனர்
முடியவில்லை. அவனை வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் கூடிவிட்டது. அவன் அப்படியே
நின்று பல நாட்கள் ஓடிவிட்டன. அவன் மீதிருந்த வழக்கை என்ன செய்வது என்று தெரியாமல்
நீதிமன்றமும் குழம்பிப் போனது. அவன் நின்றிருந்த இடத்தில் எப்போதும் காலவர்கள்
பணியில் இருந்தார்கள். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. பல நாட்கள் ஆனபின், அவன்
மீதிருந்த கவனம் குறையத் தொடங்கியது. சிலர் அவன் மீது கல்லெறிந்து பார்த்தார்கள்.
அதனால் அவன் முகத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாயின. பளிங்குக் கல்லாக அவன்
சமைந்துவிட்டான் போல் இருந்தது. இந்த நிகழ்வு பல குற்றவாளிகளுக்கும் அச்சத்தை
ஏற்படுத்தியது. குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் இது போன்ற தண்டனைகள் வந்துவிடும்
என அவர்கள் பெரிதும் அச்சப்பட்டனர். ஒரு நாள் கடும் மழை பொழிந்தது. அவன் கரைந்து
காணாமல் போனான்.
Sunday, 19 September 2021
குறுங்கதைகள்-கல்
Subscribe to:
Post Comments (Atom)
மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
No comments:
Post a Comment