வேலையிலிருந்து
நிரந்தர ஓய்வுப் பெற்றப் பின் அதைக் கொண்டாட இவள் தன் தோழியருடன் சேர்ந்து தனக்குப்
பிடித்தச் சுற்றுலாத் தலத்திற்கு வந்திருந்தாள். அங்கு இவளுக்குப் பிடித்தும்
பிடிக்காத நடிகையை ஒரு திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் இடத்தில் சந்தித்தாள்.
அந்த நடிகையிடன் இவள் பேசவில்லை. அந்த நடிகை மிகவும் இளமையானத் தோற்றத்துடன்
இருப்பதாக இவளுடைய தோழிகள் கூறினார்கள். அறைக்குத் திரும்பிய பின்னும் அவளால்
நடந்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. காலையில் எழுந்தவுடன் தோழிகளைப் பார்த்து
மைனாவின் குரலில் வணக்கம் கூறினாள். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து
எது கேட்டாலும் இவள் மைனாவைப் போல் மிழற்றிக் காட்டினாள். அனைவரும் சேர்ந்து இவளை
ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். இவளைப் பரிசோதித்த மருத்துவர் இவள்
ஏதோ ஒரு காரணத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புரிந்துகொண்டு தன்
மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கச் சொன்னார். மற்றவர்கள் இவளை அங்கே விட்டுக்
கிளம்பினார்கள். அடுத்த நாள் மருத்துவர் ஆழ்மனச் சோதனைக்கு உட்படுத்தினார். அவள்
யார் என்று கேட்டார். சுற்றுலாவில் சந்தித்த நடிகை என்றாள். மைனாவின் குரலில் ஏன்
பேசுகிறாள் என்று கேட்டார். அந்த நடிகைக்குப் பின்னணி குரில் கொடுப்பவர் மைனா போல்
பேசுவதால் தானும் அவ்வாறு பேசுவதாகக் கூறினாள். திரைப்படத்தில் இப்போது நடிக்க
முடியுமா என்று கேட்டார். அந்த நடிகையை விடத் தான் இளமையாக இருப்பதால் முடியும்
என்றாள். இரவு மருத்துவர் ஒரு நோயாளியை அழைத்து வந்தார். அவன் புலியின் கர்ஜனை
ஒலிப்பது போல் அவளைப் பார்த்து தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அந்த நோயாளி
நடிகராகும் ஆசையில் இப்படி புலிக் குரலில் பேசித் திரிவதாகச் சொன்னார் மருத்துவர்.
அடுத்த நாள் அந்த புலிக் குரல் நோயாளியை அழைத்து அவளுடன் சேர்ந்து சில திரைப்படப்
பாடல் காட்சிகளில் வரும் கதாநாயகன்-கதாநாயகியின் ஆடல் முத்திரைகளைச் செய்யச்
சொல்லி அவற்றைப் புகைப்படம் எடுத்து அவற்றை ஓர் ஆல்பமாகச் செய்து அவர்களிடம்
கொடுத்து திரைப்படம் எடுக்கும் நிறுவனங்களில் வாய்ப்புத் தேடும் படி சொல்லி
இருவரையும் அனுப்பிவைத்தார்.
Sunday, 26 September 2021
குறுங்கதைகள்-நடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட ...
No comments:
Post a Comment